அதிக விலையுயர்ந்த ஆடம்பர திருமண மோதிரம் அணிந்திருக்கும் நடிகைகள்!

அதிக விலையுயர்ந்த ஆடம்பர திருமண மோதிரம் அணிந்திருக்கும் நடிகைகள்!

அனைத்து பெண்களுக்கும் திருமணம் குறித்து பெரிய கனவுகள் இருக்கும். தற்போது திருமணங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து விமர்சையாக நடத்தப்படுகிறது. நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்.  கணவர்களிடம் இருந்து விலை உயர்ந்த மோதிரத்தை திருமண பரிசாக பெற்ற நடிகைகள் குறித்து பாப்போம். 

twitter

ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் நியூயார்க்கில் நடைபெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் 2007ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர்.  குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தின் போது சுமார் 50 லட்சம் மதிப்புள்ள மோதிரத்தை (ring) ஐஸ்வர்யாய்க்கு அவரது கணவர் அபிஷேக் அணிவித்தார். 

twitter

கரீனா கபூர்

கரீனா கபூர் கடந்த 2012ம் ஆண்டு தன்னை விட 11 வயது மூத்த நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பதிவுத் திருமணமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.  பின்னர் டெல்லியில் படோடி அரண்மனையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது 5 காரட் பிளாட்டினம் மற்றும் வைரக்கற்கள் பதித்த மோதிரத்தை (ring) சைஃப் அலிகான், கரீனா கபூருக்கு அளித்தார். இந்த மோதிரத்தின் விலை சுமார் 75 லட்சமாம். 

instagram

சோனம் கபூர்

சோனம் கபூர்  இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார்.  சோனம் கபூர் திருமணத்தின் போது அவருக்கு அணிவித்த மோதிரம் குறித்து பரவலாக பேசப்பட்டது. ஏனெனில் அந்த மோதிரத்தின் விலை ரூ. 90 லட்சமாம். அதோடு சோனம் கபூர் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் தன்னுடைய நட்சத்திர குறியீடு மற்றும் கணவரது நட்சத்திர குறியீடு பொறித்து வைத்தும் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

instagram

அனுஷ்கா சா்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தாலி நாட்டில் உள்ள 'டஸ்கானி' என்கின்ற நகரத்தில் நடந்த இந்த திருமணத்திற்கு விராட் மற்றும் அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது அனுஷ்காவிற்கு அணிவித்த வைர மோதிரத்தின் (ring) விலை மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கூறுகின்றனர்.  ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பிரபல நகை வடிவமைப்பாளர் இந்த மோதிரத்தை வடிவமைத்தாராம். 

instagram

அசின்

நடிகை அசினுக்கும் மைக்ரோ மேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் கடந்த 2016 ஜனவரி 19ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தின் போது அசினுக்கு ராகுல் ரூ. 6 கோடி மதிப்பிலான வைர மோதிரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன் நடிகை அசின் தனது இணையதளத்தில் குழந்தையின் கால் விரலில் மோதிரம் மாட்டியிருப்பதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இப்படம் வைரலானது.

ராணி முகர்ஜி

சினிமா துறையில் புகழோடு மறைந்தவர் யாஷ் சோப்ர. அவரது மகன் ஆதித்யா சோப்ராவை நடிகை ராணி முகர்ஜி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் பல வருடங்களாகப் பேசப்பட்டது. ஆதித்யா ஏற்கனவே திருமணமானவர். ஒருகட்டத்தில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார்கள் என்று மும்பை பத்திரிகைகளே எழுதின. பின்னர் இவர்கள் ஊரறிய திருமணம் செய்து கொண்டனர். அப்போது ராணி முகர்ஜிக்கு  ஆதித்யா சோப்ரா, விலை உயர்ந்த மோதிரத்தை பரிசளித்தார். 

instagram

ஜெனிலியா

காதலன் ‌ரித்தேஷ் தேஷ்முக்கை பெற்றோ‌ரின் சம்மதத்துடன் நடிகை ஜெனிலியா திருமணம் செய்து கொண்டார். 9 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் மும்பையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் காஜோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தின் போது விலை உயர்ந்த வைர மோதிரத்தை ரித்தேஷ் தேஷ்முக் பரிசளித்தார். 

instagram

தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவின் திருமணம் கொங்கனி மற்றும் சிந்தி முறைப்படி இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது. திருமணத்தின்போது ரன்வீர் தீபிகாவுக்கு வைர மோதிரம் கொடுத்துள்ளார். ரன்வீர் சிங் தீபிகாவுக்கு அணிவித்த மோதரத்தில் பெரிய வைரக்கல் இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தீபிகாவின் திருமண மோதிரத்தின் விலை 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாம்.

twitter

லாரா தத்தா

டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும், பாலிவுட் நடிகை லாரா தத்தாவும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.  கோவாவில் அவர்களது திருமணம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி திருமண உறுதிமொழி அளித்து, 4 காரட்டில் செய்யப்பட்ட விலை உயந்த வைர  மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.  இந்த திருமணத்துக்கு இருவரின் குடும்பத்தினரைத் தவிர வேறும் யாரும் அழைக்கப்படவில்லை.

twitter

பிரியங்கா சோப்ரா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். இவர்களது ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது. இந்து மற்றும் கிறித்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போது  நிக், பிரியங்கா சோப்ராவிற்கு விலை உயந்த மோதிரம் ஒன்றை அணிவித்தார். இந்த மோதிரத்தின் விலை 2.1 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!