Health

மகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோனை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள்!

Swathi Subramanian  |  Sep 3, 2019
மகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோனை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகள்!

மகிழ்ச்சிக்கு காரணமான டோபமைன் (Dopamine) ஒரு இலக்கை நோக்கி முயற்சிக்கும்போது தூண்டப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இலக்கை அடையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கிறது. அந்த இலக்கை அடையும்போது கிடைக்கும் பாராட்டுகள், பரிசுகள் மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். 

நினைவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றுக்கும் டோபமைன் உற்பத்தி தேவைப்படுகிறது. மனிதனின் செயல் ஒருங்கிணைப்பிற்கு ‘டோபமைன்’ தேவை. சில உணவுகளின் மூலம் இந்த ஹார்மோனை நாம் தூண்டலாம். டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் பிற வழிகள் குறித்து நாம் பார்க்கலாம்.

பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த சத்துக்கள் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு மனநிலையை சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால் இதனை சாப்பிடும் போது டோபமைன் ஹார்மோன் உற்பத்தியாது அதிகரித்து மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!

வாழைப்பழம்

வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். அதிலும் இதில் உள்ள மாவு சத்துள்ள கார்போஹைட்ரேட் மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது.

முட்டை

முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது. இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும். மேலும் அஸ்பாரகஸ் அஸ்பாரகஸில் ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோபேன் உள்ளிட்ட சத்துக்கள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் ஃபோலேட் அளவானது குறைவாக இருந்தால் தான் மந்தமான நிலை ஏற்படும். மேலும் ட்ரிப்டோபேன் என்னும் பொருளானது, செரோடோனின், டோபமைன் அளவை அதிகரித்து மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

தேன்

இயற்கை இனிப்புகளுள் ஒன்றான தேன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேனில் உள்ள குவெர்செடின் மூளையில் உள்ள காயங்களை குணப்படுத்த வல்லது. மேலும் தேனை விரும்பி சாப்பிட்டால் மன அழுத்தம் குறைவதோடு, மூளையும் ஆரோக்கியத்துடன் இயங்கும். குறிப்பாக தேன் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும்.

எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

காபி

காபியில் உள்ள காஃபின் மூளையில் டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கிறது. காஃபைனின் நேரடி இலக்கு மூளையில் இருக்கும் அடினோசின் ஏற்பி ஆகும். இந்த ஏற்பிகள் நிகழ்வுகளை சங்கிலியாக இணைக்கிறது. இது டோபமைன் உற்பத்தியின் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  

ஆரஞ்சு ஜூஸ்

ஃபோலிக் ஆசிட் குறைபாடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த குறைபாடு, செரோடோனின் அளவை குறைத்து, மனதை ஒருவித அழுத்தத்தில் உள்ளாக்கும். எனவே மந்தமான மனநிலை இருக்கும் போது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கலாம்.

டார்க் சாக்லேட்

டோபமைன் உட்பட பல நரம்பியக்கடத்திகளுடன் டார்க் சாக்லேட் தொடர்பு கொள்ளலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. டார்க் சாக்லேட் சாப்பிட்ட பிறகு டோபமைன் வெளியிடப்படுகிறது மற்றும் ஒரு மகிழ்ச்சியான உணர்ச்சி அனுபவத்தை அளிக்கிறது. டார்க் சாக்லேட் மட்டுமல்லாது இனிப்பு பொருட்கள் அனைத்தும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும்.

காரமான உணவு

காரமான உணவு என்பது எப்பொழுதும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். இதில் சுவை மட்டுமின்றி ஆரோக்கியமும் அதிகம் உள்ளது. காரமான உணவுகளும் எண்டோர்பின் மற்றும் ஆக்சிடாலின் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கிறது.

நட்ஸ்

வைட்டமின் பி 6 நிறைந்த நட்ஸ் உங்கள் மூளை டோபமைனை உற்பத்தி செய்ய உதவுகிறது. வால்நட் மற்றும் ஹேசல்நட் ஆகியவை வைட்டமின் பி 6 இன் நல்ல ஆதாரங்கள். வால்நட்ஸில் டிஹெச்ஏ, ஒமேகா -3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது டோபமைன் செறிவுகளின் பண்பேற்றத்திற்கு காரணமாகும். அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் ஆகியவை ஃபோலேட்டின் நல்ல ஆதாரங்கள், இது டோபமைனை உற்பத்தி செய்ய உதவுகிறது.

ஒமேகா- 3 கொழுப்பு அமிலம்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் டோபமைன் அளவை இயல்பாக்குவதற்கும். மனக்கவலையை  குறைக்க ஒமேகா- 3 கொழுப்பு உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒமேகா -3 நிறைந்த உணவுகளில் சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களும், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகள் போன்ற பிற உணவுகளும் அடங்கும். மீன் எண்ணெய் டோபமைன் வெளியீட்டை சீராக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. 

பால் பொருட்கள்

சீஸ், பால், தயிர் போன்ற அனைத்து பால் பொருட்களும் இதில் அடங்கும். பாலடைக்கட்டியில் ட்ரைமன் என்னும் பொருள் உள்ளது, இது மனித உடலில் டொபமைனாக மாற்றப்படுகிறது. தயிர் போன்ற புரோபயாடிக்குகள் கொண்ட உணவுகளும் டோபமைன் அளவை அதிகரித்து மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Health