Beauty

விழாக்கால நேரங்களில் உங்களை விதம் விதமாக அலங்கரிக்க சில குறிப்புகள்

Deepa Lakshmi  |  Aug 14, 2019
விழாக்கால நேரங்களில் உங்களை விதம் விதமாக அலங்கரிக்க சில குறிப்புகள்

விழாக்கள் என்பதே வழக்கமான செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு நம் மனதை புத்துணர்வாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது. விழாக்கால நாட்களை நம் வீட்டில் உள்ள பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதன் மூலம் மேலும் சிறப்பாக மாற்றி விடுவார்கள்.

அடுத்தடுத்த பண்டிகைகள் தொடர்வரிசையில் ஒவ்வொன்றாக வர போகிற இந்த சமயத்தில் விழாக்காலங்களில் நீங்கள் ஸ்பெஷல் லுக் தர வேண்டாமா ? அதற்கான சில மேக்கப் (makeup) குறிப்புகள் உங்களுக்காக

youtube

கண்களில் இருந்து தொடங்குங்கள். முதலில் மஸ்காராவை இட்டு கொள்ளுங்கள். அதன் பின்னர் கண்களை அடர்த்தியாகக் காட்ட காஜலை கண்களில் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஆளை மயக்கும் ஸ்மோக்கி கண்கள் வேண்டுபவர்கள் கருப்பு மற்றும் சாம்பல் நிற ஐ லைனர்களை கலந்து பயன்படுத்துங்கள். அதன் பின்னர் உங்கள் ஆடையின் வண்ணத்திற்கேற்ப ஐ ஷேடோவைத் தேர்ந்தேடுத்து கைகளின் மூலம் முதல் அப்ளை செய்யுங்கள். அதன் பின்னர் ப்ரஷ் செய்யுங்கள்.

உதடுகள்

உங்கள் உதடுகள் ஹைலைட்டாக தெரிய வேண்டும் என்றால் அவுட்லைன் வரையும் போது அழுத்தமாக வரையுங்கள். லிப்ஸ்டிக் போடும் முன்னர் டூத் ப்ரஷ் கொண்டு உங்கள் உதடுகளைத் தேய்த்துக் கொடுத்தால் லிப்ஸ்டிக் போடும்போது அழகாக இருக்கும். அதன் பின்னர் உங்கள் விருப்ப நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுங்கள். வயலெட் நிறம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் எப்போதும் அழகானவை. உங்கள் ஆடைகளுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்த வேண்டியது உங்கள் அழகை அதிகரிக்கும்.

மேலும் படிக்க பிரைடல் மேக்கப் பார்லர்

Youtube

முகம்

முகத்திற்கு அவசியமான ப்ரைமர் மற்றும் பவுண்டேஷன் போட்ட பின்னர் ஷிம்மர் பவுடரை முகம் முழுதும் தடவுங்கள். பண்டிகை நேரங்களில் புகைப்பட பொழுதுகள் உங்களுடையதாக மாறும். ஷிம்மர் மேக்கப் (makeup) உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றும். சருமத்தின் நிறத்தை பொறுத்து ஷிம்மரை தேர்ந்தெடுங்கள்.

கன்னங்கள்

கன்னங்கள் தான் முகத்தின் அழகை உலகிற்கு எடுத்துக் காட்டுபவை. அங்கே மிதமான அளவில் பிளஷ் சேர்ப்பது உங்கள் அழகை அதிகரிக்கும். பிளஷ் நிறத்தை கொஞ்சமாக சேர்க்க வேண்டும். உங்கள் ஆடையின் நிறத்தோடு அதன் நிறம் தனிப்பட்டு தெரியாமல் இருக்க வேண்டும். அதிக பிளஷ் அழகைக் கெடுக்கும்.

நகப்பூச்சு

நகங்களுக்கு பாலிஷ் நிறம் தேர்ந்தெடுக்கும்போது நியான் நிறம் அல்லது வெளிர்நிற பாலிஷ்கள் உங்கள் விரல்களின் அழகை அதிகரிக்கும். தற்போதைய ட்ரெண்டிங் ஆன நெயில் ஸ்டிக்கர்கள் உங்கள் அழகை மேலும் கூட்டும் என்பதால் அதனை விழாக்காலங்களில் முயற்சி செய்து அழகாய் மிளிருங்கள்.

 

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                              

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                     

Read More From Beauty