Celebrations

தமிழ் சினிமாவில் சிறந்த பெண் இயக்குனர்கள்

Deepa Lakshmi  |  Mar 7, 2019
தமிழ் சினிமாவில் சிறந்த பெண் இயக்குனர்கள்

போராடி பூமி கீறி முளைத்து பின் காற்றோடு அல்லாடி நீரின்றி தள்ளாடி பாதுகாப்பற்ற பின் வலிமையாகி இப்படி பல்வேறு கட்டங்களைத் தாண்டிய பெண்மையின் வேர் இப்போது ஆழ வேரூன்றி பூமியெங்கும் பரவி நிற்கிறது.

இதற்கு அடி ஆணிவேராக இருந்து பல தியாகங்கள் செய்த அத்தனை பெண்களையும் வணங்குகிறேன். பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்வோம் ! உங்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துக்கள்!

இன்றைக்கு பெண்கள் தினம். இந்த ஒரே நாளில் பெண்ணினத்தின் சிறப்பை சொல்லிவிட முடியுமா என்ன ? அதனாலேயே POPxo இந்த மாதம் முழுவதையும் பெண்களின் சிறப்புகளை பேசப் போகிறது.

POPxoWomenWantMore

இதில் முதலாவதாக நான் எடுத்திருப்பது திரையில் ஆளுமை செய்த முக்கிய பெண் இயக்குனர்கள் (directors)பற்றிய செய்திகள் உங்களுக்காக !

டி பி ராஜலக்ஷ்மி

சினிமா எனும் செல்லுலாய்டு உலகில் பெண்மைக்கு பெருமை சேர்ப்பதில் திருமதி டி பி ராஜலக்ஷ்மியின் பங்கு முதன்மையானது என்றுதான் கூறலாம். தமிழ் சினிமா உலகின் முதல் பெண் நடிகையும் இவர்தான். தெலுங்கிலும் முதல் பெண் நடிகை இவர்தான். பிற்காலத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் ஆக்க்ஷன் கட் சொன்ன முதல் பெண் இயக்குனரும் இவரேதான். மிகப்பெரிய வெற்றிப்படங்களான “மிஸ் கமலா” (1936) மற்றும் “மதுரை வீரன்” (1939) இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் பெண்களுக்கான பல முன்னேற்றங்களுக்கு இவர் பாடுபட்டுள்ளார். சதி எனும் மாபெரும் கொலை முயற்சியை எதிர்த்து போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். இதனால் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை பலமுறை கைது செய்தது. டி பி ராஜலக்ஷ்மி பெண் இனத்தின் பெருமைக்குரியவர்.

சுஹாசினி மணிரத்னம்

தமிழ் சினிமாவின் பெருமை என்று போற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம். என்றாலும் இவர் திருமணத்துக்கு முன்பாகவே தனது அற்புதமான நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர். பல முக்கிய விருதுகளுக்கு சொந்தக்காரர். திருமணத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இந்திரா. சாதி வன்முறைகளை எதிர்த்து போராடும் ஒரு சிறு பெண் பற்றிய கதை. இந்தப்படம் தமிழக அரசின் விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா V

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பிரியா.v அதன் பின் தனியாக இவர் இயக்கிய படம் இரண்டுமே நல்ல பெயரையும் வெற்றியையும் இவருக்கு கொடுத்தது. கண்ட நாள் முதலாய் எனும் இந்தப் படம் எல்லோரும் எப்போதும் பார்க்கும் எவெர்க்ரீன் மூவி ஆனது. அதன் பின் கண்ணாமூச்சி ஏனடா எனும் படத்தையும் இவர் இயக்கினார். இரண்டுமே மிக சிறப்பான கதையம்சம் கொண்ட நேர்த்தியான படங்கள் என்று கூறலாம்.

சுதா கொங்கரா

இவரும் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின் முதல் முதலாக இயக்கிய படமே இரண்டு மொழிகளில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. இறுதி சுற்று எனும் படம். விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வித்யாசமான கரு கொண்ட படமான இறுதி சுற்று இந்தியிலும் தயார் ஆனது. சாலா கடூஸ் எனும் பெயரில் இந்தியிலும் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. தற்போது நடிகர் சூர்யாவுடன் இவர் ஒரு படம் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா R தனுஷ்

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின் அவர் எடுத்த படம்தான் மூணு. இரண்டுவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் கணிசமான இடத்தை பிடித்தது. அதன் பின் இவர் எடுத்த வை ராஜா வை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சௌந்தர்யா R விஷாகன்

தந்தையின் படங்களின் டைட்டில்களுக்கு கிராபிக் டிசைனிங் செய்ய ஆரம்பித்த சௌந்தர்யா விரைவில் தனிப்பட்ட படங்களான அன்பே ஆருயிரே சிவகாசி மஜா சென்னை 28 போன்ற படங்களுக்கு கிராபிக் டிசைனிங் செய்தார். அதன் பின் தமிழில் முதல் அனிமேஷன் படமான கோச்சடையானை இயக்கினார். பின்னர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் இயக்கினார். இப்போது பொன்னியின் செல்வன் எனும் படத்தை தயாரிக்கிறார்.

நந்தினி

தமிழ் சினிமாவில் இன்றளவும் பார்த்து ரசிக்கக் கூடியவகையில் ஒரு படம் என்றால் அது நகைச்சுவை படங்கள்தான். திரு திரு துரு துரு எனும் அழகிய காமெடி வகை கதையை நமக்கு படமாக்கியவர் இயக்குனர் நந்தினி. இப்போது நினைத்தாலும் அஜ்மலின் துறுதுறுப்பும் மஞ்சரியின் சமாளிப்பும் நம்மை புன்னகைக்க வைக்கிறது. மௌலியின் நடிப்பில் படத்தின் உயரம் அதிகமானது. குழந்தையின் மழலையில் படம் பார்த்த அனைவருமே சில நொடிகள் மழலை ஆனார்கள். இந்தப் படத்திற்கு பின்பு கொலை நோக்கு பார்வை எனும் படம் இவர் இயக்கத்தில் வருவதாக இருந்தது அதன்பின் தயாரிப்பாளர் சிக்கல் காரணமாக நிறுத்தப்பட்டது.

மதுமிதா

வல்லமை தாராயோ எனும் பெண் சமூகத்தின் வலிமையை உணர்த்தும் ஒரு முக்கியமான படத்தை மதுமிதா இயக்கினார். தனியாக வாழ விரும்பும் பெண்களுக்கான முக்கிய படமாக இது 2008ல் அமைந்ததது. தமிழக அரசின் விருதையும் வென்றது. அதன் பின் இவர் கொலை கொலையா முந்திரிக்கா எனும் படத்தையும் மூணே மூணு வார்த்தை எனும் படத்தையும் இயக்கியுள்ளார்.

 

க்ரித்திகா உதயநிதி

தமிழ் சினிமாவின் ட்ரெண்டுக்கு தகுந்த படங்களை இவர் இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் மனைவி க்ரித்திகா. வணக்கம் சென்னை காளி போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார். முன்னதாக உயிர் உறவு உண்மை எனும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Celebrations