உங்கள் தனித்துவத்தை கண்டறியுங்கள்!

உங்கள் தனித்துவத்தை கண்டறியுங்கள்!

இனிய பெண்ணே ! இவைகள்தான் உன்னை மற்றவரிடம் இருந்து தனித்துவம் வாய்ந்தவளாகக் காண்பிக்கிறதுபெண்களே உங்களது மரபணுக் குறியீடுதான் இருப்பதிலேயே தனித்துவம் வாய்ந்த சிறப்புத் தன்மை பெற்றவை. இதனைக் கண்டுபிடிக்க பல மில்லியன் ஆண்டுகள் ஆனதாக விஞ்ஞானம் வேடிக்கையாக கூறுகிறது!
நீங்கள் அதனை சிறப்பம்சம் வாய்ந்தவர். இருப்பினும் சில சமயங்களில் உங்களை நீங்களே தாழ்வு  மனப்பான்மையோடு பார்ப்பதும் இந்த உலகத்தோடு உங்களால் ஒன்ற முடியவில்லை என வேதனைபடுவதும் திடீரென வயதானது போலவும் பரிதாபத்திற்கு உரியவராகவும் வேற்று கிரக வாசி போலவும் என்னும் சமயங்களும் ஏற்படும் இல்லையா. அந்த மாதிரியான நேரங்களில் உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக் கொள்ளவும் உங்களை நீங்களே கொண்டாடவும் உங்கள் வாழ்வில் முக்கியமான காரணங்களை உங்களுக்கு சொல்வதற்காகவும் ஒரு சில குறிப்புகள் இதோ உங்களுக்காக.உங்கள் குடும்பம் -எப்போதுமே நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பின்னிப் பிணைந்து இருப்பதில்லை என்றாலும் அவர்களுடன் நீங்கள் பகிரும் அன்பும் பாசமும் தனித்தன்மையானது. எல்லோருக்கும் அவரவர் குடும்பம் பிடிக்கும்தான். ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசிக்கும் விதம் வேறு மாதிரியானது. எல்லோருடைய குடும்பமும் ஒன்று போலவே இருப்பதில்லை ஆகவே உங்கள் குடும்பத்தின் தனித்திறன்கள் உங்கள் தனித்தன்மைக்கு மற்றும் ஆளுமைத் திறனுக்கு  உதவி செய்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் 


உங்கள் நண்பர்கள் -நீங்கள் ஏகப்பட்ட நண்பர்களை வைத்திருக்கலாம் அல்லது ஒன்றிரண்டு நண்பர்களோடு ஆத்மார்த்தமான நட்போடு வாழ்ந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் நண்பர்கள் நம் வாழ்வின் பொக்கிஷங்கள். உங்கள் நண்பர்களின் தனிப்பட்ட பண்புநலன்களை நீங்கள் பாராட்ட நினைத்தால் நிச்சயம் அதற்கான சரியான அளவுகோல் உங்களுக்கு அமையாது . அந்த அளவிற்கு அவர்களைப் பாராட்டுவீர்கள். அதேபோல்தான் அவர்களும் உங்களைப் பாராட்ட நினைத்தால் நிச்சயம் அதன் நீளமும் அதிகமாகவே இருக்கும் இல்லையா. இதனை நினைத்து நீங்கள் பெருமை கொள்ளுங்கள்.உங்கள் விருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்குகள்-நீங்கள் ஒரு சிறந்த ஹாக்கி வீராங்கனையாக இருக்கலாம். அல்லது சிறந்த புகைப்படக்காரர் ஆக இருக்கலாம். அல்லது கேம் ஆப் த்ரோன் பார்வையாளராகக் கூட இருக்கலாம் ஏன் நீங்கள் ஒரு பெண்ணியவாதியாகக் கூட இருக்கலாம்.. உங்களுடைய பொழுதுபோக்குகள் உங்களைப் பற்றி உங்களுக்கு அடையாளம் காட்டும். காலம் செல்ல செல்ல உங்கள் விருப்பத்தைப் போலவே விருப்பம் உள்ள பலரும் உங்களோடு வந்து இணைவது உறுதி. அவர்கள் உங்களின் சிறப்பம்சத்தை கண்டுகொண்டு உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவார்கள். காத்திருங்கள்.


 


 


உங்கள் தோற்றம்-ஒரு அறிவியல் உண்மை என்ன சொல்கிறது என்றால் நீங்கள் உங்கள்  தோற்றத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதை விட 20 சதவிகிதம் கூடுதல் அழகாகத் தெரிவீர்கள்  என்பதுதான். ஆகவே உங்கள் தோற்றத்தைப் பற்றிய முழு கவனத்துடன் நீங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும் நீங்கள் 20% கூடுதல் அழகானவர். கோடிக்கணக்கான மரபணுக்களில் நீங்கள் தனித்துவம் பெற்றவர் என்பதை அறிந்து நீங்கள் கொண்டாடுங்கள்.உங்கள் உடையணியும் பாணி  (ஸ்டைல்)-நீங்கள் ஒரு ஸ்வெட் ஷர்ட் மற்றும் ஸ்நீக்கர் அணிபவராக இருக்கலாம் அல்லது தோடுகள் ஜிமிக்கிகள் கண்களில் மை என்று பாரம்பர்ய பேரழகியாக வளம் வருபவராக இருக்கலாம், நீங்கள் எப்படிப்பட்ட உடை அணிந்திருந்தாலும் உங்கள் உடைகளும் தோற்றமும் ஸ்டைலும் உங்கள் மனநிலையைப் பற்றி நீங்கள் சொல்லாமலே மற்றவர்களிடம் பிரகடனப் படுத்தி விடும். ஆகவே அந்த நிமிடங்களை நீங்கள் கொண்டாடுங்கள். நாட்கள் செல்லும் போதும் எப்போதும் நீங்கள் நிலையான அன்புடனும் அழகுடனும் தோன்றுவீர்கள்.
உங்கள் கடந்த கால அனுபவங்கள்-உங்களில் ஒரு சிலரின் கடந்த காலம் மிகப் பாதுகாப்பானதாக பத்திரமாக யாரேனும் ஒருவரால் பொத்தி பாதுகாக்கப்பட்ட பொக்கிஷமாக இருக்கலாம். ஒரு சிலரின் கடந்த காலம் ரணங்களுடன் தனியே போராடிக் கடந்து வந்த வெற்றிப் பாதையாக இருக்கலாம். எது இப்படி இருந்தாலும் உங்களது கடந்த காலம் என்பது உங்களுக்கான தனித்தன்மை பெற்றதுதான். அது யாரோடும் ஒப்பிட முடியாதது. உங்கள் தனித்தன்மையைக் கொண்டாடுங்கள்.


 உங்கள் அணுகுமுறை-நீங்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் அனைவரையும் ஆர்ப்பாட்டமாக குதூகலத்துடன் அனுகுபவராக இருக்கலாம். அல்லது மிக அமைதியோடும் அன்போடும் கருணை கொண்ட வார்த்தைகளோடும் அணுகுபவராக இருக்கலாம். உங்கள் அணுகுமுறை என்பது எப்போதும் இவ்விரண்டின் கலவையாகக் கூட இருக்கலாம். நீங்கள்தான் இந்த உலகில் தனித்தன்மை கொண்டவர் என்பதில் பெருமை கொள்ளுங்கள். உங்களைப் போல  யாராலும் நடந்து கொள்ள முடியாது என்று தைரியம் கொள்ளுங்கள் உங்களைபோன்றவர்களுக்காகவே சம்பக்கின் #மேக் ஹாப்பி பப்பே ப்ராடக்ட்ஸ் காத்திருக்கிறது. அவை நிச்சயம் உங்களை சந்தோஷபடுத்தும்.


 


 


 இது ஒரு சம்பக ஆதரவு தந்த படைப்பு.