Lifestyle

பெண்களின் முதல் ஹீரோ தந்தை – தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது!

Mohana Priya  |  Jun 13, 2019
பெண்களின் முதல் ஹீரோ தந்தை – தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது!

தந்தையர்க்கு(fathers) மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர்(fathers) தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு ஜூன் 16 கொண்டாடப்படுகிறது.

இத்தினம் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர்(fathers) தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் சில பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தங்களது தந்தைக்கு(fathers) பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம்.

ஆனால் தந்தைதான் (fathers) ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். “அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் (fathers) அறிவை வாங்கலாம்’ என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் (fathers) முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் (fathers)குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக (fathers) செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் (fathers) தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

பல்வேறு விமர்சனம் மத்தியில் பேரன் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடிய ராதிகா சரத்குமார்

தந்தையர் (fathers) தினம் எப்போது கொண்டாட தொடங்கியது: அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் (fathers) தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது தந்தையர் (fathers) தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை (fathers) வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன் படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 

gifskey, pexels, pixabay, Youtube

தந்தையர் (fathers) தினத்தில் “அப்பாக்களின்’ நினைவுப் பகிர்வுகள்:
“தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை… தந்தை (fathers)சொல்மிக்க மந்திரமில்லை’ என நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றனர். அறிவியலும், விஞ்ஞானமும் அதிகம் அறிமுகமில்லாத அந்தக் காலத்தில், பிள்ளைகளும் அப்படியே வாழ்ந்தனர். இன்று ஒரு பிள்ளையை பேணி வளர்த்து, சான்றோனாக்க வேண்டு மென்றால், சுற்றியுள்ள சூழ்நிலைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. மழலைப் பருவத்தில் தந்தையின் (fathers) கைப்பிடித்து பள்ளி சென்று, பாடம் பயின்றோம். கல்லூரிப் பருவத்தில் தோழனாய் பழகினோம். இப்போது தந்தையின் (fathers), தாயின் ஸ்தானத்தில் நாம் இருந்தாலும், தந்தை காட்டிய தோழமை இன்னும் நம்மை வழிகாட்டுகின்றது.

முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்வது எப்படி?

தந்தையர் (fathers) தின கவிதை பதிவுகள்
1. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை… தந்தை (fathers)சொல்மிக்க மந்திரமில்லை
2. நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் “அப்பா”
3. நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.
4. தந்தையின் (fathers) கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்.
5. அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்.
6. தன் குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டதன் தாக்கமே தந்தையின் (fathers) கோபம் சற்று யோசித்து பார்த்தால் அவரின் கோபத்திலும் நியாயம் கலந்து இருக்கும்.
7. நான் தெய்வத்திடம் வேண்டினேன், “என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் தேவை…!” தெய்வம் சொன்னது, “மிகவும் பேராசை கொள்கிறாயே என்று…!”
8. அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில் அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என இவை அனைத்தும் அடங்கி விடும்.
9. எனக்கு முன்பே பூமியில் பிறந்து, என்னை காக்க வேண்டி அவரின் மகளாக பெற்று எடுத்து, என்னை கண்ணில் வைத்து தாங்கும் தேவதூதன் என் செல்ல “அப்பா”.
10. நீங்கள் என்னை பார்த்து கொள்ளும் விதம் போல் நானும் உங்கள் கடைசி காலத்தில் பார்த்து கொண்டு என் நன்றியை செலுத்துவேன் ஆருயிர் தந்தையே (fathers).

குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?

Fathers Day Thoughts in Hindi

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle