முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை அடியோடு அகற்றும் டிப்ஸ்

முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை அடியோடு அகற்றும் டிப்ஸ்

நம்மில் அநேகருக்கு மிக முக்கிய பிரச்சணையாக இருப்பது இந்த கரும்புள்ளிகள்(darkspots) தான். வெயிலில் சென்று வருவதால் முகம் மாசடைவதுடன் வியர்வை மற்றும் பருக்கள் மறைவதால் கரும்புள்ளகளாக அப்படியே முகத்தில் தங்கி விடுகின்றது. இதனை உடனே நீக்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் வெகு நாட்கள் முகத்தில் தங்கி முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றது. இப்படிப்பட்ட கரும்புள்ளிகளை எப்படி சரிசெய்வது என்பதை இங்கு பார்ப்போம்.


15 நிமிட உருளை மசாஜ்


உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள்(darkspots) படிப்படியாக நீங்கிவிடும்.


வெந்தய கீரை


வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்(darkspots) நீங்கி விடும்.


கொத்துமல்லி மற்றும் மஞ்சள்


கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள்(darkspots) மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.


தயிருடன் எலுமிச்சை


இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள்(darkspots) சீக்கிரம்போய் விடும்.


natural-remedies-to-get-rid-of-darkspots-on-face003


குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?


சர்க்கரை மற்றும் எலுமிச்சை


எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்(darkspots) நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.


கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய  பேக் குறிப்புகள்


ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முக‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள்(darkspots) ‌நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.


முகப்பரு அகல


பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.


natural-remedies-to-get-rid-of-darkspots-on-face002


அழகான கால்கள் மட்டும் பாதங்களை பெற என்ன செய்ய வேண்டும்!


அம்மைத் தழும்புகள் மறைய


ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.


அம்மை வடுக்க‌ள் மறைய


சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள்.


பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.


பல்வேறு சத்துக்கள் நிறைந்த இளநீர் வெயிளிலிற்கு ஏற்றதா?


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo