Health

மாதவிடாய் காலம் கண்காணிப்பான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள் – Everything You Need To Know About Period Tracker

Akanksha Bhatia  |  Nov 30, 2018
மாதவிடாய் காலம் கண்காணிப்பான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள் – Everything You Need To Know About Period Tracker

 மாதவிடாய்! ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் தவிர்க்க முடியாத விருந்தாளி. எனினும் தற்போதைய தொழில்நுட்பத்திற்கும் கண்டுபிடிப்பிற்கும் நீங்கள் நன்றி கூற வேண்டும். இந்த மாதவிடாய் கண்காணிப்பான் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சவால் மிகுந்ததாக இருப்பது தன்னுடைய மாதவிடாய் நாட்கள். நம்மில் பலர் அந்த நாளை சரிவர ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. இதற்க்கு தற்கால வாழ்க்கை முறிவும் அதிக வேலை சுமையும் ஒரு முக்கிய காரணம். எனினும் நம்மை நாமே பாதுகாப்பான சூழலில் வைத்துக் கொள்ளவும் நிம்மதியாக நம் பணிகளை செவ்வனே ஐயம் இன்றி செய்யவும் மாதவிடாய் நாட்கள் மீது ஒரு கண் வைக்கத்தான் வேண்டும். இதை எளிதாக்க இந்த கண்காணிப்பான் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக பெண்களுக்கு 21 நாட்களில் இருந்து 40 நாட்கள் வரை தங்களுடைய மாதவிடாய் சுழற்ச்சி ஏற்படும்.  இந்த கண்காணிப்பான் இதை உங்களுக்கு எளிதாக்கி விடும்.

இனி நீங்கள் உங்களது உள்ளாடையையோ அல்லது அழகானோ ஆடையையோ உங்கள் மாதவிடாய் (periods) நாள் ஞாபகம் இல்லாததால் பாழ் படுத்த்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் இனி இந்த கண்காணிப்பான் மூலம் குறைந்தது 2 நாட்களுக்கு முன்பாகவே முன் அறிக்கை பெற்று தயாராகலாம்.

மாதவிடாய் கண்காணிப்பான் என்றால் என்ன?

மாதவிடாய் கண்காணிப்பான் பயன் படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் என்ன?

பலனுற்றதாக மாதவிடாய் கண்காணிப்பான் எப்படி பயன் படுத்துவது என்ற குறிப்புகள் 

மாதவிடாய் கண்கானிப்பானை எப்படி பயன் படுத்துவது?

கேள்விகள்

மாதவிடாய் கண்காணிப்பான் என்றால் என்ன? (What Is Period Tracker?)

மாதவிடாய்(periods) கண்காணிப்பான் (Period Tracker)உங்களது மாதவிடாவை கண்காணிக்க உதவும். இது ஒரு நாள் காட்டி போன்று உங்களது மாதவிடாய் சுழற்சியை பற்றி அனைத்து தகவளியும் கூறும். அது உங்களது வேலைகளை அலல்து முக்கிய நிகழ்வுகளில் பங்கு எடுப்பது பற்றி நீங்கள் திட்டமிட உதவும். மேலும் உங்களது தினசரி வேலைகளை தடை இன்றி செய்ய உதவும். உங்களுக்கு மாதவிடாய் பற்றியும், அண்டவிடுப்பின், கருவுறுதல், மற்றும் கர்ப்பமாவது பற்றிய தகவல்களையும் கொடுக்கும். இந்த மாதவிடாய் பயன் படுத்துவதால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் பின் வரும். இன்றைய காலகட்டத்தில் அனேக மென்பொருள் பயன்பாடுகள் உள்ளன. அவை உங்களது வேலையை எளிதாக்கும்.

மாதவிடாய் கண்காணிப்பான் பயன் படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் ஏனென்னா?(Benefits Of Using Period Tracker)

1) உங்களுக்குத் தெரியும் என்ன எதிர் பார்ப்பதென்று (You Know What To Look Forward To)

இந்த கண்காணிப்பான் உங்களுடைய மாதவிடாவை முன் கூட்டிய வரும் நாளை அறிந்து கொள்ள உதவும். உங்கள் மாதவிடாவை பற்றி முன்பே தெரிந்து கொள்வது ஒரு அற்புதமான விடயம். மேலும் உங்களுக்கு அதை பற்றின குருந்தகவலும் வரும், அதாவது உங்கள் மாதவிடாயின் சுழற்ச்சி நிறைவு பெரும் நாள் முதற்கொண்டு. குலபோ, பாப்ஜோ’ஸ் பாப்ஜோ மென்பொருளுடன் இந்த மாதவிடாய் கண்காணிபானை அறிமுகப் படுத்தி உள்ளது. இதை நீங்கள் சுலபமாக பயன் படுத்தலாம். உங்கள் முகத்தில் நிச்சயம் புன்னகையை காணலாம்.

2)நீங்கள் எப்போது கருவுரு நினைக்குறீர்கள்? (Informs You About Fertility, Pregnancy and Ovulation)

இந்த மாதவிடாய் கண்காணிப்பானை பயன் படுத்துவதால் நீங்கள் உங்களது கருவுரும் தன்மை, கர்ப்பமாவது மற்றும் அண்டவிடுப்பின் போன்ற தகவல்களை பெறுவீர்கள். உங்கள் மாதவிடாய் உச்ச காலகட்டத்தையும் இது தெரியப் படுத்தும். கருவுற முயற்சி செய்யும் பெண்கள் இதைக் கொண்டு தன் கணவனுடன் உறவு வைத்துக் கொள்ள ஏற்ற நேரத்தை எளிதாக தேர்ந்தெடுக்கலாம். 

3)உங்களுக்கு பிசிஓஸ் அல்லது பிசிஓடி இருக்கும் போது (Indicates You About PCOD and PCOS)

அனேக பெண்கள் பாலிசிஸ்டிக் ஒவரேரியன் நோய்க்குறி அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை நோய் அறிகுறியாழ் அவதிப் படக் கூடும். இதனால் சீரற்ற மாதவிடாய் ஏற்படக் கூடும். அத்தகைய சூழலில் மருத்துவர்கள் இந்த மாதவிடாய் கண்காணிப்பானை பெரிதும் பயன் படுத்த ஆலோசனை செய்கிறார்கள். குலபோ போன்ற மாதவிடாய் கண்காணிப்பான் பொத்தானை ஒரு முறை அழுத்துவதால் உங்கள் வேலையை எளிதாகிவிடும்.

4)உங்கள் மாதவிடாவை புரிந்து கொள்ள உதவும் (Get To Know About Your Mental Health)

இந்த மாதவிடாய் (periods) கண்காணிப்பான் (period tracker) உங்கள் மாதவிடாவை சரியாக புரிந்து கொள்ள உதவும். உங்கள் மாதவிடாய் சுழற்சியின் தொடக்கம் மற்றும் முடிவு மற்றும் கருவுறும் காலம் போன்ற தகவல்களை எளிதில் கண்காணிக்க உதவும். உங்களது மாதாந்தர மாதவிடாவையும் கண்காணிக்க உதவும். மேலும் நீங்கள் சில நுட்பங்களையும் அதில் செலுத்தலாம். அதாவது கடுமையான, மிதமாக மற்றும் இயல்பான போன்ற விடயங்கள். உதாரணத்திற்கு, சிவப்புக் கோடு வந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று.

5)உங்கள் கைக்குள் அனைத்து தகவல்களும் (Provide All Necessary Information)

உங்கள் மருத்துவரை எப்போது அணுக வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். உங்களது மாதவிடாய் கண்காணிப்பான் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் தெரிய படுத்த வேண்டிய அல்லது விரும்பும் தகவல்களை உங்களுக்குத் தரும். மேலும் உங்களுக்கு தேவையற்ற வலி அல்லது வேறு உடல் உபாதைகள் இருந்தால் அதையும் தெரிய படுத்த இது உதவும்.

 

6)உங்கள் செக்ஸ் வாழ்க்கையை கண்காணியுங்கள் (Keep Track Of Your Sex Life)

இந்த மாதவிடாய் கண்காணிப்பான் (period tracker) நீங்கள் உங்கள் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள சரியான நாளை தேர்ந்தெடுக்க உதவும். இது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை கண்காணிக்க உதவும். நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகுரீர்கள் என்றால், இந்த கண்காணிப்பான் உங்கள் மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தர உதவியாக இருக்கும். 

7)பிறப்பு கட்டுப்பாட்டை கண்காணிக்க உதவும் (Helps  To Monitor Birth Control)

நீங்கள் பிறப்பு கட்டுபாட்டிர்க்கான மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், இந்த மாதவிடாய் கண்காணிப்பான் நீங்கள் எப்போது அந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தகவல்களை சரியாக கூறும். 

8)குறிப்புகளையும் விருப்பங்களையும் சேர்க்கலாம் (Add Notes And Options)

உங்களுக்கு மாதவிடாய் காலங்களில் தலை வலி, வயிற்று வலி மற்றும் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. எனினும், இந்த மாதவிடாய் கண்காணிப்பானில் அதனை பற்றிய தகவல்களை நீங்கள் சேர்க்கலாம். மேலும் அடுத்த மாதம் உங்களுக்கு எது போன்ற உபாதிகள் ஏற்படும் என்பதை கணித்து அதற்க்கு தயாராகவும் செய்யலாம். இந்த விதத்தில் நீங்கள் தேவையான மருந்துகளை கைவசம் வைத்துக் கொள்ளலாம். மேலும் இத்தகைய தகவல்களை வைத்துக் கொண்டு உங்கள் மருத்துவரிடம் நீங்கள் இதை பற்றி பேசி தக்க தீர்வை பெறலாம்.

9)உங்கள் ஹார்மோன்களை கவனியுங்கள் (Informs About Hormones)

உங்கள் மாதவிடை காலத்தில் மட்டும் அல்ல, நீங்கள் மற்ற சமயங்களிலும் உங்களுக்கு ஏற்படும் சில உடல் உபாதைகள் அல்லது உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களை பற்றின தகவல்களையும் பெறலாம். இது உங்களது என்ன மாற்றங்கள் மற்றும்  மயக்கம், வாந்தி போன்ற உடல் உபாதைகளை பற்றியும் கண்காணிக்க உதவும். உங்களால் எந்த நாட்களில் அதிகம் அத்தகைய வலி அல்லது என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம். மேலும் அதற்க்கு தகுந்த மாதிரி உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கு உங்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் ஆறுதலையும் பெறலாம்.

1௦) வீக்கம் மற்றும் பிற மாற்றங்கள் (Informs About Several Other Problems)

நீங்கள் வீக்கம், நீர் தேக்கம், மற்றும் பிற சராசரியான பிரச்சனைகள், குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படுவதை பற்றின தகவல்களை சேகரிக்கலாம். இந்த வகையில் நீங்கள் சௌகரியமான உடைகள் அணிவது மற்றும் சரியான சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது மற்றும் உங்கள் உடல் பரிசோதனைகளை சரிவர செய்வது என்று அதிகம் அக்கறை எடுத்தக் கொள்ளலாம்.

மாதவிடாய் கண்கானிப்பானை திடமாக பயன் படுத்த சில குறிப்புகள் (Tips To Use Period Tracker)

நீங்கள் உங்களது மாதவிடாய் கண்காணிப்பானை பயன் படுத்தும் முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள சில விடயங்கள் உள்ளது. இங்கு தரப் பட்டுள்ள குறிப்புகள் நீங்கள் இன்னும் திடமாக இந்த கண்காணிப்பானை பயன் படுத்த உதவும்.

1) சரியான தகவல்களை பதிவேற்றுவது (Upload The Right Information)

உங்கள் மாதவிடாய் சுழற்ச்சி தொடங்கும் நேரம் முதல் இந்த மென்பொருளில் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு தகவல்களும் துல்லியமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் உறவு வைத்துக் கொண்ட நாளில் இருந்து பிறப்பு கட்டுப்பாட்டிற்கான மாத்திரை எடுத்தக் கொண்ட நாள் முதல் எதையும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

2) தொடர்ந்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும் (Continue To Post Information Regularly)

இடையில் ஒரு மாதம் கூட நீங்கள் தவற விடக் கூடாது, ஏனென்றால் அனைத்து தகவல்களும் மிக முக்கியமானது. சீரான தகவல் பதிவு உங்களுக்கு அடுத்த மாதவிடாய் சுழற்ச்சி காலத்தை சரியாக கணித்து கூறும். குறிப்பாக உங்களுக்கு பிசிஓஸ் மற்றும் பிசிஓடி இருந்தால் அனைத்து தகவலும் முக்கியமானதாக இருக்கும்.

 

3) உங்கள் வழக்கமான செயலை கண்காணிக்கவும் (Keep Track Of Your Actions)

சிறு மாற்றங்கள் கூட, தூங்கும் நேரம், சத்தற்ற உணவு, உடற் பயிற்சி, பயணம் அல்லது உடல் சோர்வுற்று அல்லது நோய்வாய் படுவது போன்ற விடயங்கள் உங்களது மாதவிடாவை அதிகம் பாதிக்க கூடும். இந்த மாதவிடாய் கண்காணிப்பான் 1௦௦% துல்லியமாக உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதனால் உங்கள் மாதவிடாய் சுழற்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கணித்து கூறும். நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை இதில் பதிவு செய்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற பயன் படுத்தலாம்.

4) எதையும் மாற்றாதீர்கள் (Do Not Change Anything)

எந்த சூழலிலும் உங்களது தினசரி விடயங்களை இந்த கண்காணிப்பானில் இருந்து மாற்றாதீர்கள். இந்த கண்காணிப்பான் நீங்கள் கருவுறும் நாளை துல்லியமாக உங்களுக்கு எடுத்துக் கூறும். எனினும் இதை வைத்துக் கொண்டு பாதுகாப்பற்ற உறவு மேற்கொள்ள நினைக்க வேண்டாம்.

மாதவிடாய் கண்காணிப்பானை எப்படி பயன் படுத்திக் கொள்வது (How To Use Period Tracker)

நீங்கள் குலபோ விட்ஜெட்டை அழுத்தி தொடங்கலாம். தேவையான தகவல்களை தந்து இந்த போபாக்ஸ் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் உங்கள் முக நூல் அல்லது மின்னஞ்சல் முகவரி கேட்கும்

குலபோ உங்கள் நாள்காட்டியில் கடந்த மாதவிடாய் நாள் பற்றின குறிப்புகளை கேட்கும்

நீங்கள் உங்களது கடந்த மாதவிடாய் எத்தனை நாட்கள் இருந்தது பற்றிய தகவலை கேட்கும். சராசரியாக பெண்ணுக்கு ஒரு சுழற்ச்சி காலம் 28 நாட்கள்
உங்களது அனைத்து தகவல்களும் தேவைப் படும் போது செட்டிங்கில் மாற்றிக் கொள்ளலாம்.  நீங்கள் உங்களது கடந்த மூன்று மாத மாதவிடாய் காலத்தை பற்றின தகவல்களை கொடுப்பது நல்லது. அது உங்களது அடுத்த மாதவிடாய் நாளை துல்லியமாக கணித்துக் கொடுக்கும்
உங்களது குலபோவில் தகவல் பரிமாற்றத்தை இயக்கிக் கொள்ளுங்கள். அது உங்களது சிவப்பு காதலர் வரும் நாளை கூறும்!
போபாக்ஸ் மாதவிடாய் கண்காணிப்பான், குலபோ சிறந்த பிரிவுகளை கொண்டுள்ளது. அதை நீங்கள் சற்று கிளிக் செய்து உங்களுக்குத் தேவையான தகவல்களை, குறிப்பாக உங்களது மாதவிடாய் சுழற்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம்

கேள்விகள் (FAQ’s)

1) மாதவிடாய் கண்காணிப்பானை பயன் படுத்துவது பாதுகாப்பானதா?

முன்பே கூறியதோ போல எந்த மாதவிடாய் கண்காணிப்பனும் உங்கள் கருத்தடையை மாற்றவோ அல்லது எஸ்டிடில் இருந்து பாதுகாக்கவோ முடியாது. கருவுறுதல் அல்லது பாதுகாப்பற்ற செக்ஸ் போன்ற விடயங்களுக்கு நீங்கள் முழுமையாக இந்த கண்காணிப்பானை சார்ந்து இருக்க முடியாது. நீங்கள் திட்டமிடாத கருவுறுதலை விரும்பும் மேலும் நீங்களும் உங்களது கணவரும் எஸ்டிடி பரிசோதனை செய்து கொள்ளும் நிலையில் இது உங்களுக்கு பயன் தரக் கூடும்.

2) இது 1௦௦% துல்லியமானதா?

அனேகமான மாதவிடாய் கண்காணிப்பான்கள் துல்லியமாக தகவல்களை தரும். எனினும் மனித தவறுகள் அதற்க்கு கானரனம் ஆகா முடியாது. உங்களது மாதவிடாய் கண்காணிப்பான் நீங்கள் சரியான தகவல் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு சரியான தகவல்களை தேவைப் படும் போது தரும். அந்த வகையில் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3) மாதவிடாய் கண்காணிப்பான் உண்மையிலேயே வேலை பார்க்குமா?

நீங்கள் கொடுக்கும் தகவல் பொறுத்தே இந்த கண்காணிப்பான் வேலை பார்க்கும். அது உங்களது மாதவிடாய் சுழற்ச்சி பற்றின கணிப்பை நீங்கள் கொடுக்கும் தகவல் கொண்டே தரும். எனினும் உங்களது தினசரி ரத்த போக்கு, மன நிலை மற்றும் கருவுறும் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள இது சுலபமான வழி. இது 1௦௦% துல்லியமான தகவல் தருகிறதோ இல்லையோ, சில தருணங்களில் பிழைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் கருவுரு திட்டமிட்டால் மருத்துவரை அணுகுவது சரியான ஆலோசனை.

படங்களின் ஆதாரம்: ஷட்டர்ஸ்டாக் 

ஜி-ஐ-எப் – ஜிஃபி 

Also read home remedies which can be used to stop periods

 

Read More From Health