Lifestyle

ஆங்கில பாடங்களை பாடலாக தொகுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் இவான்ஜிலின்!

Swathi Subramanian  |  Jul 5, 2019
ஆங்கில பாடங்களை பாடலாக தொகுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் இவான்ஜிலின்!

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி கற்பிப்பது ஆசிரியர்களுக்கு கடினமாகுமா என்று கேள்வி எழுப்பினால் பெரும்பாலும் ஆமாம் என்றே பதில் வரும். ஆனால் ஆங்கில ஆசிரியர் இவான்ஜிலின் (evangeline) பிரிஸ்கில்லர் என்பவர் இந்த கடினமான வேலையை மிகவும் எளிமையான முறையில் சாதித்தது காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆங்கில கவிதைக்கும் ஒவ்வொரு வித இசையில் பாடலாக பாடங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார். அதுமட்டுமின்றி ஆங்கில கவிதைகளை, தமிழில் மொழி பெயர்ந்து இரண்டு மொழிகளிலும் அருமையாக பாடுகிறார்.

youtube

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் சேவூர் அரசு உயர்நிலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியையான இவர், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு அரசுப் பள்ளிகளில்  பணியாற்றிய நிலையில் தற்போது கிராமப்புற பள்ளியான சேவூரில் பணியாற்றி வருகிறார். இது குறித்து பேசிய இவான்ஜிலின் (evangeline), எனது சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு. ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். அப்போது அங்கு சில இசை கலைஞர்கள் கவிதைகளை பாடலாக பாடுவதை கண்டேன். அவை என் மனதில் நன்றாக பதிவானது. இந்த முறையை ஏன் நாம் பாடம் கற்பித்தலில் பயன்படுத்த கூடாது என சிந்திதேன். 

மேலும் படிக்க – திருமணத்தில் விரும்பம் இல்லை, சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன் : நடிகை ஓவியா அதிரடி!

கிராமப்புற குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்பது கசப்பாகவே உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்று கருதி, பாடல்கள் மூலம் பாடங்களை எளிதாக்கி கற்றுத் தருகிறேன். முதற்கட்டமாக சில பாடங்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் பாடலாக மாற்றி மாணவர்களுக்கு கற்று கொடுத்தேன். இது நல்ல பலனைக் கொடுத்தது. ஆங்கிலத்தை முதலில் தமிழில் சொல்லித்தருவேன். அதன்பிறகு ஆங்கிலத்தில் பாடிக் காண்பிப்பேன். பின்னர் பாடத்துக்குள் செல்வேன். இதனால் குழந்தைகள் ஆங்கில பாடத்தை உணர்ந்து அருமையாக கற்கிறார்கள். 

youtube

சமீபத்தில் பிறந்த நாள் வாழ்த்து பாடலை தமிழில் எழுதி அதற்கு இசை அமைத்து, சக குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க வைத்தோம். அதேபோல் தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்து பாடலாக பாடினோம். அதற்குரிய நேரமான 52 விநாடிகளில் குழந்தைகளை பாட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 6, 7, 10ம் வகுப்பு மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் தமிழில் தேசிய கீதம் பாடுகிறார்கள் என்று தெரிவித்தார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதன் வரிகளில் சில – 

“இனங்களும்  மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரத தாயே, வடக்கே விரிந்த தேசாபிமானம், தெற்கில் குமரியில் ஒலிக்கும், இன மத வேற்றுமை உடையில் இருந்தும்,  இதயத்தில் ஒற்றுமை தானே, உலகினில் எத்திசை அலைந்தும், இறுதியில் இந்தியன் ஆவேன், உறுதியில் மூவர்ணம் தானே, இனமோ மொழியோ எதுவாய் இருந்தும் நிரந்தரம் பாரத தாயே, வாழ்க வாழ்க என்றென்றும் நீ வாழ்க”.

தேசிய கீதத்தை தமிழில் பாடியதற்கு தொடர்ந்து இவான்ஜிலின் (evangeline)  பிரிஸ்கில்லருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதோடு மட்டும் நில்லாமல் தற்போது 6, 7, 10ம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தி வருகிறார். ஸ்போக்கன் இங்கிலீஷ்’வகுப்புகள் நடத்தினால், கூடுதலாக ஆங்கில வார்த்தைகளை குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள் என்பதால் தொடர்ச்சியாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் 5 புதிய ஆங்கில வார்த்தைகள் என வாரத்துக்கு குறைந்தபட்சம் 30 முதல் 35 வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – காணாமல் போன கணவரை டிக்டாக்கில் கண்டு பிடித்த மனைவி.. காவல்துறையின் அடுத்த நடவடிக்கை !

youtube

மேலும் அரசுப் பள்ளி குழந்தைகள் மிகுந்த திறமைசாலிகள். அவர்களது திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆங்கிலத்தால் அவர்களது வளர்ச்சி தடைபட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் இவான்ஜிலின் பிரிஸில்லா. பாடங்களை  பாடல்களாக்கி, அதற்கு மெட்டும் அமைத்து எங்களுக்கு புரியும்படி எளிமையாக சொல்லித் தருகிறார் ஆசிரியை இவான்ஜிலின் என்று பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். உங்கள் சிறப்பான பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள் இவான்ஜிலின்! 

மேலும் படிக்க – காலேஜ் டேஸ் : கல்லூரிக்கு செல்வோருக்கு தேவையான 6 சிறந்த ட்ரெண்டி பைகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle