Bath & Body

நீங்கள் உணர்திறன் தோல் உடையவரா? இந்த பொருட்களிடம் இருந்து விலகியே இருங்கள்!

Nithya Lakshmi  |  Feb 5, 2019
நீங்கள் உணர்திறன் தோல் உடையவரா? இந்த பொருட்களிடம்  இருந்து விலகியே இருங்கள்!

நீங்கள் உணர்திறன் தோல் கொண்டவரா? இதை செஞ்சா சரி ஆகும் !!அதை சாப்பிட கூடாது …. இப்படி இருக்கனும் … அப்படி செய்யனும்… என பல விஷயம் படிச்சு, பார்த்து, கேட்டு, சலிச்சு போச்சா?? உண்மையில் நீங்கள் சரும பராமரிப்புக்காக என்ன செய்கிறீர்கள் என்று சற்று நிதானமாக கவனியுங்கள் . உங்கள் சென்சிடிவ் ஸ்கினிற்கு முதல் எதிரி – கெமிக்கல்ஸ் , கெமிக்கல்ஸ் மட்டும்தான்!  அதாவது,சோப், ஃபேஸ் வாஷ்,மேக்கப் பொருட்களை முகத்துக்கு பயன்படுத்தும் போது, அதன் அட்டையில் எல்லா சருமத்திற்கு ஏற்றது, அல்ர்ஜி வரவே  வராது போன்ற வாக்கியங்கள் இடம் பெற்று இருக்கும். உடனே நம்பாதீர்கள்!

படிப்பறிவை கொஞ்சம் இங்கே பயன் படுத்த வேண்டும்! என்ன என்ன கெமிக்கல் எவ்ளோ பயன்படுத்தி இருக்கிறது என்ற இடத்தை உற்று பார்த்து, படித்து  கீழ் வரும் கெமிக்கல் கலந்து இருந்தால் உஷாராக அதை அகற்றுங்கள். இதனால் உங்கள் சருமத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க உதவும்.நாங்கள் உங்களுக்கு ஐந்து பொதுவாக பயன்படுத்தும் கெமிக்கல்ஸ்ஸின் விவரங்களை அளிக்கிறோம். இந்த கட்டூரையை படித்து முடித்ததும் அந்த ரசாயனம் கலந்த பொருட்களை தூக்கி போடுங்கள். 

பாரபென்(Paraben)  –

எங்கயோ பார்த்த பெயர் மாதிரி இருக்கா??

சோம்பலா தலை குளிக்கும் போது ஷாம்பூ பாட்டில் பின்னாடி பாத்துருப்போம். இந்த கெமிக்கல் பாக்டீரியாவின் பாதிப்பு வராமல் இருக்க பயன்படுத்த படுகிறது. ஆனால், 2015 மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியின் போது, பாரபென் புற்றுநோய் செல்களை வலுப்படுத்தி, நோயை அதிகப்படுத்தும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.பலரின் மார்பக புற்றுநோய் செல்களில் இந்த கெமிக்கல் காணப்படுகிறது. ஆகையால், அழகு சாதன பொருட்களில் மற்றும் ஷாம்பூக்களில் பாரபென் இல்லாதவாறு பார்த்து கொள்ளுங்கள்.

லெட் (lead) –

இன்று பல அழகிய புன்னைகைக்கு பின்னால் இருக்கும் இரகசியம் லிப்ஸ்டிக். ஆனால், இதன் பின்னால் இருக்கும் ரசாயன இரகசியம் அறிந்து கொள்வது மிக அவசியம்.இதில் லெட், கேட்மியம் (cadmium ) போன்ற உலோகம் சேர்க்க படுகிறது. உதட்டில் பயன்படுத்துவதால் உள்ளே சென்று பல பாதிப்புகளை ஏற்படுத்தும் . இதில் உள்ள நச்சு தன்மை அளவு கூடினால், கேன்சர்,இதயம், மூளை பாதிப்புகள் வரக்கூடும். கெமிக்கல் சேர்க்காத நல்ல லெட் பிரீ பிராண்டட் லிப்ஸ்டிக் வாங்குவது சிறந்தது.

சல்ஃபேட் (sulphate) – 

சோடியம் லாரில் ஸல்பேட்(SLES) , பொதுவாக நுரை அதிகம் வருவதற்க்கு  பயன்படுத்த படுகிறது. சல்ஃபேட் உங்கள் உணர்திற சருமத்தில் (sensitive skin) மிக கடினமாக இருக்கலாம். இதனால், உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய் தண்மை வறண்டு போக வாய்ப்புகள் உள்ளது. ரொம்ப நுரை வரும் பொருட்களா இருந்தால் சிந்தித்து கொள்ளுங்கள். சல்ஃபேட் பிரீ சோப்பு,ஹேர் சீரம், ஃபெஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. 

பெண்சைல் அசிடேட் ( Benzyl acetate) –

நம் சர்மத்திற்க்கு பயன்படுத்தும் வாசனை பொருட்கள் 100 சதவீதம் இயற்க்கையானது என்று சொன்னால் உடனே நம்பி விடாதீர்கள்.காரணம் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் பல இந்த வாசனை பொருட்களில் இருந்து தான் வருகிறது. நல்ல நறுமணத்திற்கு மட்டும் இது போன்ற பொருட்கள் பயன் படுத்துவதில்லை. பல கெமிக்கல்கள் கொண்டு செய்ய படும் சோப்,ஃபேர்பியும் அல்லது ஷாம்பூகள் துர்நாற்றம் வர கூடும். அதை தடுப்பதற்க்கு கூட இது போன்ற செயற்கை நறுமணத்தை சேர்க்கப்படுகிறது. அப்படி சேர்க்கும் பட்சத்தில் சென்ட் இல்லை அல்லது நறுமண பொருள் சேர்க்கவில்லை என்ற ஆங்கில வாக்கியம் இடம் பெற்று இருக்கும். இது போன்ற பொருள்களை பயன் படுத்தும் போது, விழிப்புணர்வு மிக தேவை.

பார்மாலிடீஹைடு (Formaldehyde )-

இது போன்ற கெமிக்கல் பயன்படுத்துவதில்லை என்று நீங்கள் நினைத்தால், இது ஒரு  வித்தை!! ஏன் என்றால்… இதே பயன்பாடு இருக்கும், ஆனால் வேறு (Imidazolidinyl urea or quaternium 15) பெயர்களில் இந்த பொருட்கள் விற்பனையில் இருக்கும். நைல் பாலிஷில் அதிகம் இந்த கெமிக்கல் சேர்க்க படும்.இதனால் எரிச்சல், அரிப்பு போன்ற தொல்லைகள் வர கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இனியும் விளம்பர மோகத்தில் மூழ்காமல்,விழிப்புணர்வோடு இருப்பது மிக அவசியம். ஸ்கின் சென்சிடிவ் என்றால் பயன்படுத்தும் பொருட்களை வாங்கும் போதும் இன்னும் சென்சிடிவ் ஆக இருக்க வேண்டும்.

கண்ணை மூடி அனைத்து கெமிக்கல்களையும் குறை சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு கெமிக்கல் (chemical) பின்னால் இருக்கும் ஆபத்தையும் அலட்சியம் செய்ய கூடாது. 

படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ,பேக்செல்ஸ்,பிலிக்கர் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Bath & Body