Self Help

உங்கள் பாஸ்சிடம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள சில சுவாரசியமான குறிப்புகள்!

Meena Madhunivas  |  May 17, 2019
உங்கள் பாஸ்சிடம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள சில சுவாரசியமான குறிப்புகள்!

எவ்வளுதான் வேலை பார்த்தாலும், ஏன் பாஸ்சை(Boss) மகிழ்ச்சி அடைய செய்ய முடியவில்லை? என்ன தான் நான் இப்போது செய்வது? இது அலுவலகம் செல்லும் அனைவருது புலம்பல்கள்!

ஒருவர் அலுவலகம் செல்பவராக இருந்தால் அவருக்கு பல சவால்கள் காத்திருக்கும். என்ன தான் நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும், புத்திசாலியாக செயல் பட்டாலும், சில சமயங்களில் உங்கள் பாஸ்சை(Boss) முழு மனதோடு மகிழ்ச்சி அடைய செய்ய முடியாமல் போகின்றது. எதாவது ஒரு விதத்தில் அவர் கண்ணில் நீங்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்யும் தவறுகள் பட்டுவிடுகின்றது. இதனால் நீங்கள் அலுவலகத்தில் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாவதோடு, உங்கள் பாஸ்சை(Boss) எப்படி எதிர் கொள்வது என்றும் தெரியாமல் போகின்றது.

பாஸிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஊழியரின் குறிக்கோளாக இருக்கும். இதில் தவறு ஏத்தும் இல்லை. இருந்தாலும் பெரும்பாலோனர்களுக்கு எப்படி அந்த நற்பெயரை வாங்குவது என்றுத் தெரியாமல் போய்விடுகின்றது. இதற்கு உங்கள் அறியாமையும் ஒரு காரணம் என்று கூறலாம்.

ஒரு முறை நீங்கள் ஒரு சிறிய தவறு செய்து விட்டால், பின் கடைசி வரையிலும் நீங்கள் கண்காணிக்கப் படுவீர்கள். உங்கள் மீது எத்தனை கண்கள் உள்ளது என்று உங்களுக்கேத் தெரியாது. அப்படி இருக்கும் போது, நீங்கள் உங்கள் பாஸ்சை(Boss) சற்று மனம் குளிர வைக்க வேண்டியது அவசியம். எனினும், அதில் உங்களது உற்பத்தி திறனும், வேலையில் நீங்கள் காட்ட வேண்டிய அறிவுத் திறனும் இருக்க வேண்டும்.

உங்கள் பாஸ்(Boss) மட்டும் உங்களுக்கு சவால் இல்லை. உங்களுக்குத் தெரியாமல் அலுவலகத்தில் பல எதிரிகளும் இயங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அதனால், அவர்களிடம் இருந்து தப்பித்து, உங்கள் பாஸிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.

உங்கள் பாஸ்சை(Boss) எப்படி கையாளுவது என்று தெரிந்து கொள்வதற்கு முன், பல வகை பாஸ்கள் இருக்கின்றார்கள் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். அப்படித் தெரிந்து கொண்டால், உங்கள் பாஸ்சை(Boss) நீங்கள் எளிதாக சமாளித்து விடலாம்.

முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!
பல வகை பாஸ்கள்(Boss)

உங்கள் பாஸ் எந்த வகை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், அவரை எளிதில் சமாளித்து விடலாம். அதை தெரிந்து கொள்ள, உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்

சுயநலம் கொண்ட பாஸ்(Boss)

இந்த வகை பாஸ்கள் எப்போது தங்கள் நலம், தங்கள் முன்னேற்றம் மற்றும் தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு தங்களது ஊழியர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு தொழிலின் முன்னேற்றத்திற்குத் தேவையான வேலையை பார்க்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு எப்போதும் இருக்கும். இத்தகைய பாஸ்கள் தங்களது அதிகாரத்தை ஊழியர்கள் மீது எப்போதும் காட்டிக் கொண்டே இருப்பார்கள். இவர்களால் உங்களுக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

எப்போதும் மும்மரமான பாஸ்(Boss)

பிசி பாஸ் என்று கூறலாம். இவருக்கு தங்கள் ஊழியர்களிடம் நின்று பேச நேரமே இருக்காது. எனினும், வேலைகள் மட்டும் சரியான நேரத்திற்குள் முடிந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எப்போதும் ஒரு அவசர நிலையிலேயே இருப்பார்கள். அவரது நிறுவனத்தின் முன்னேற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கும். தனது வேலையை ஊழியர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு வேலையும் இல்லை என்றாலும், பிசியாக இருப்பது போல காட்டிக் கொள்வார்கள். இப்படி பாஸ் அலுவலகத்திற்கு அதிகம் வராமல் இருந்தால் அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப் படலாம்.

பிறர் விடயத்தில் ஆர்வம் காட்டும் பாஸ்(Boss)

ஒரு சில முதலாளிகள் தங்கள் வேலையை விட்டு விட்டு, பிறர் விடயங்களை அதிகம் தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். இப்படி இருந்தால், அலுவலகத்தில் ஒரு நல்ல சூழல் நிலவாமல் இருக்கும். மேலும் இவ்வாறு அவர் இருக்கும் போது ஊழியர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த முடியாமலும் போகலாம். இது ஒவ்வொருவரின் உற்பத்தித் திறனையும் பாதிக்கும்.  குறிப்பாக அவருக்கு ஊழியர்கள் மீது அவநம்பிக்கை அதிகம் இருக்கும்.

எப்போதும் கோபம் மற்றும் குழப்பத்தில் இருக்கும் பாஸ்(Boss)

ஒரு நிறுவனத்தின் முதலாளி எப்போதும் குழப்பத்திலும், கோபத்தோடும் இருந்தால், அங்கு இருக்கும் அனைவரும் ஒரு பதற்றமான சூழலிலேயே இருப்பார்கள். இதனால் நிறுவனம் சரிவர இயங்காமல் இருக்கும். இது ஒவ்வொரு ஊழியரின் உற்பத்தி மற்றும் அறிவுத் திறனையும் பெரிதும் பாதிக்கும்.

ஒருவரை மட்டுமே புகழும் பாஸ்(Boss)

சில பாஸ்கள் எப்போதும் அவருக்கு பிடித்த அந்த ஒரு ஊழியரை மட்டுமே புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார். இது மற்ற ஊழியர்களுக்கு சங்கடமான சூழலை உருவாக்கக் கூடும், மேலும் இதனால் ஒரு சமமான சூழல் மற்றும் அமைதியான நிலை அலுவலகத்தில் ஏற்படாமல், போட்டியும், பொறாமையும் அதிகரிக்கக் கூடும். சில பாஸ்கள் தங்களுக்கு பிடித்தவருக்கு அதிகம் சலுகைகள் கொடுக்கும் போது திறமை உள்ள ஒருவர் நிராகரிக்கப் பட்டு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என்று திறமை இல்லாதவருக்கு மட்டுமே கொடுக்கப் படுகின்றது.
சமயம் பார்த்து கமலை பலி வாங்கிய காயத்ரி! வச்சு செய்றதுன்னா இது தான் போல

அக்கறை அற்ற பாஸ்(Boss)

ஒரு நல்ல பாஸ் தன்னுடைய நிறுவனத்தின் முன்னேற்றம் பற்றி மட்டும் கவலைப் படாமல் தன் ஊழியர்களின் முன்னேற்றத்தை பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால், சில பாஸ்கள் எப்போதும் தங்கள் ஊழியர்களை பற்றி சிந்திப்பதில்லை. எனினும், வேலை நடக்க வேண்டும் என்பதற்காக அப்படி அக்கறை காட்டுவது போல நடிப்பார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் எந்த முன்னேற்றமும் அலுவலகத்தில் ஏற்படாமல் போய் விடும்.

அடிமைப் படுத்தும் பாஸ்(Boss)

ஒரு சில பாஸ்கள், தங்கள் ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்கின்றார்கள் என்று தெரிந்தாலும், அவர்களை பனி நேரம் போக அதிக நேரம் வேலை பார்க்க வைப்பார்கள். அவ்வாறு வேலை பார்க்க வைத்தாலும் அவர்களுக்கு அதிக சம்பளமோ அல்லது ஊக்கத் தொகையோ கொடுப்பதில்லை. ஊழியர்கள் ஒரு அடிமைகளாகவே இங்கு பணி புரிகின்றனர்.

தீராத நோயால் அவதிப்படும் சஞ்சை! புலம்பும் ஆல்யா

உங்கள் பாஸ்சை(Boss) எப்படி கையாளுவது – 1௦ முக்கிய குறிப்புகள்

மேலே குறிப்பிட்டது போல ஏதாவது ஒரு வகையில் உங்கள் பாஸும் அடங்குவார் என்றால், அவரை நீங்கள் எப்படி எளிதாக சமாளித்து உங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்வது என்பதற்கு இங்கே முக்கிய 1௦ பயனுள்ள குறிப்புகள், உங்களுக்காக;

1. உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை புரிந்து கொள்ளுங்கள். இந்த கருத்து வேறுபாட்டை புரிந்து கொண்டாலே, உங்களால் ஓரளவிர்க்காயினும் உங்கள் பாஸ்சை புரிந்து கொண்டு ஒரு நல்ல சூழலை உருவாக்க முடியும்

2. உங்கள் பஸுடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவரிடம் மனம் விட்டு உங்கள் பிரச்சனைகளை பேசி அதற்க்கான சரியான தீர்வுகளை காண முயலுங்கள். இப்படி செய்யும் போது, உங்கள் பாஸுக்கும் அவரது தவறுகளை பற்றி ஒரு புரிதல் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். இதனால் ஒரு நல்ல சூழல் அலுவலகத்தில் நிலவக் கூடும்

3. உங்கள் பாஸுக்கு இருக்கும் பலவீனங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றைத் தெரிந்து கொண்டு நீங்கள் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முயற்சிக்கும் போது ஓரளவிர்க்காயினும் பிரச்சனைகள் சரி செய்யப் படும். அப்படி அவரது பலவீனங்களை நீங்கள் புரிந்து கொண்டால், அவரை எளிதாக நீங்கள் சமாளித்து விடலாம்.

4. எது அவரை மோசமாக நடந்து கொள்ள வைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அனைவரும் விரும்பி மோசமாக பிறரிடம் நடந்து கொள்வதில்லை. எனினும், எதோ ஒரு காரணி நிச்சயம் ஒருவரை  மோசமாக சில சூழலில் நடந்து கொள்ள வைக்கின்றது. அதனால், நீங்கள் அவர் அப்படி மோசமாக நடந்து கொள்ள தூண்டும் காரணியை கண்டு பிடித்து அதற்கு தகுந்தார் போல உங்களை மாற்றிக் கொண்டு செயல் பட வேண்டும்.

5. அவருக்கத் தான் எல்லாம் தெரியும் என்ற என்னத்தை முதலில் அகற்ற வேண்டும். உங்கள் பாஸ் எப்போதும் தனுக்கத்தான் எல்லாம் தெரியும் என்பது போல நடந்து கொண்டால், அது சரியான கருத்து இல்லை, அவருக்குத் தெரியாமல் பல விடயங்கள் இருக்கின்றது என்பதை புரிய வைக்க வேண்டும். இவ்வாறு செய்து விட்டால், அவரை எளிதாக நீங்கள் சமாளித்து விடலாம்.

6. நீங்கள் எண்ணுவது போலவே மற்ற ஊழியர் யாரேனும் அலுவலகத்தில் எண்ணினால், அவரது உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இருவரும் சேர்ந்து உங்கள் பாஸுக்கு எப்படி சூழ் நிலையை புரிய வைத்து நல்ல சூழலை உருவாக்குவது என்று திட்டமிடுங்கள். இப்படி அனைவரும் ஒன்று கூடி செயல் படும் போது உங்கள் பாஸ்சை எளிதாக சமாளித்து விடலாம்

7. பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு முக்கியத் தேவை, பொறுமை. நீங்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கின்றீர்களோ அவ்வளவு வேகமாக உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதனால் உங்கள் பாஸ்சை எளிதாக கையாள வேண்டும் என்றால், பொறுமையாக இருந்து செயல் பட வேண்டும்.

8. உங்கள் பாஸிடம் சண்டை போடுவதை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரை எந்த சூழலிலும் உங்கள் பாஸிடம் நீங்கள் சண்டைப் போடக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் முயற்சி வீணாகி விடலாம். இதனை நினைவில் வைத்துக் கொண்டு முடிந்த வரை அமைதியாக உங்கள் பாஸுக்கு விடையங்களை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.

9. எப்போதும் ஒரு படி முன்னதாக இருங்கள். இது நீங்கள் எப்போதும் உங்கள் பாஸ்(Boss) உங்களிடம் ஒரு விடயம் கேட்கப் போகிறார் அல்லது உங்களிடம் ஒரு பணியைக் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்தால் அது குறித்த அனைத்து விடயங்களை பற்றியும் தெரிந்து கொண்டு அவரை ஆச்சரியப் படுத்துங்கள். இப்படி செய்தால் அவரை எளிதாக கையாளலாம்.

10.   சரியான நேரத்தில் சரியான விடயத்தை சொல்ல வேண்டும். நேரம், காலம், ஏவல் புரிந்து நடந்து கொள்ளும் போது நீங்கள் உங்கள் பாஸுக்குப் பிடித்த ஊழியராக மாறிவிடலாம். அதனால் எப்போதும் அவசரப் படாமல் சரியான நேரம் பார்த்து அவரிடம் பேசுவதோ அல்லது ஒரு வேலையை செய்வதோ நல்லது.

இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இதில் உங்களுக்கு பயனுள்ள குறிப்புகளை தேர்ந்தெடுத்து முயற்சி செய்து உங்கள் பாஸிடம் நற் பெயர் பெற்று உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை பெறுங்கள்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Self Help