Celebrity Life

சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு தலைவர் ரஜினிகாந்த்… தர்பார் திரை விமர்சனம்!

Swathi Subramanian  |  Jan 8, 2020
சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு தலைவர் ரஜினிகாந்த்…  தர்பார் திரை விமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். 

ரஜினிகாந்தின் 167வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். 

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான். 

twitter

குறிப்பாக சென்னையில் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. சுமார் 340 காட்சிகள் வரை இப்படத்திற்காக ஒதுக்க, இதில் 320 காட்சிகள் வரை ஹவுஸ்புல் ஆகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

தர்பார் சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 3 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது. டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது. 

மேலும் படிக்க – என்றென்றும் நயன்தாரா.. ஒரே செல்ஃபியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்!

மும்பையில் போலிஸ் பயமின்றி அனைவரும் இருக்க சார்ஜ் எடுத்த இரண்டே நாளில்  சிட்டியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார். அந்த ரெய்டில் பெரிய தொழிலதிபர்  மகனை ரஜினி கைது செய்கிறார்.  

தனது பவரை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.அதை தொடர்ந்து ரஜினி தன் தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொல்கிறார்.

twitter

பிறகு தான் தெரிகிறது இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, மிகப்பெரும் டான் சுனில்ஷெட்டி மகன் என்று, பிறகு இருவருக்குமிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே இந்த தர்பார்.

ரஜினிக்கு 70 வயது என்று நம்ப முடியாது அந்த அளவிற்கு படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.  வெறப்பான போலிஸ், நயன்தாராவுடன் காதல் என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கிறது. 

மேலும் படிக்க – புடவையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் : வைரலாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் திணறல்!

இரண்டாம் பாதியில் வரும் எமோஷ்னல் காட்சிகள்,  சண்டைக்காட்சி நிறைந்துள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவம் ஒளிப்பதிவு. மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம் நமக்கு தருகிறது. 

twitter

அனிருத் இசையில் பாடல்கள் ஓகே. யோகிபாபு காமெடி கூட பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. தர்பார் படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றனர். அவற்றில் சில, 

தர்பார் படத்தின் முதல் பாதி தீயாக உள்ளது. ரஜினி படு சுறுசுறுப்பாக இருக்கிறார். அனிருத் இசை சிறப்பு. இதுக்குமேல கெத்தா எவராலும் பிஜிஎம் போட முடியாது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமை. செமயான திரைக்கதை. என்ன ஹீரோயினுக்கு வேலை இல்லாதது தான் ஒரே மைனஸ்.

 

என்ன ஒரு முதல் பாதி… பெர்ஃபெக்ட். அனைத்து சீன்களும் தீயாக உள்ளது. ரஜினி மிகவும் இளமையாக தெரிகிறார். ரஜினி, நயன்தாரா காதல் காட்சிகள் நன்றாக உள்ளது.

தர்பார் படத்தை அமெரிக்காவில் பார்த்தேன். சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்துக்கு சிறந்த கமர்ஷியல் படம். முருகதாஸ் இஸ் பேக்

 

சிவாஜிக்கு பிறகு தலைவர் படத்தில் தர்பாரில் தான் முதல் பாதி சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தலைவர் ரசிகரும் பல ஆண்டுகளாக காத்திருந்த படம் தான் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்துவிட்டார். தலைவர் சும்மா கிழிச்சு இருக்காரு. அருமையான படம்.

ரசிகர்களை போல் ரஜினி அவர்களின் குடும்பமும் படத்தை முதல் நாள் முதல் ஷோ சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸில் பார்த்துள்ளனர். இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க – மதுமிதாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள் !

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life