
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். அதேபோல அசத்தலாக காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா (aranthangi nisha). புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த இவர் பல ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார்.
விஜய் டிவியில் அறிமுகம்
கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா (aranthangi nisha). மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் சேர்ந்து நகைச்சுவை செய்து வந்தார். இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் ஏராளம். இதனை தொடர்ந்து இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இடையிடையே விஜய் டி.வி நிகழ்ச்சிகள் என நிஷா (aranthangi nisha) செம பிஸியாக உள்ளார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் கறுத்த குட்டியாக இருந்த நான் செவத்தக் குட்டியாகிவிட்டேன் என நிஷா வேடிகையாக கூறினார். பேச்சுதான் எனது மூலதனம். எனது திறமையை கண்டறிந்து, அதனை மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்தது தொலைக்காட்சிதான். ஒரு சாதாரண கும்பத்தில் பிறந்த என்னை பிரபலமாக்கி விஜய் டிவிக்கு எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் நிஷா கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட நிஷா
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிஷா, குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை விமர்சித்தும் பேசினார். இந்த பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.இந்த பிரச்சனையால் இனி அரசியல் சார்ந்த பட்டிமன்றங்களில் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்திருப்பதாக அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். இதுகுறித்து 10 நாள்களாக மிகவும் வருத்தப்பட்டு வருத்தப்பட்டதாகவும், இனி மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
பட்டிமற்ற பேச்சாளரான நிஷா
விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னர் சுமார் 13 வருடங்கள் பட்டிமன்ற பேச்சாளராக இருந்துள்ளார். அறந்தாங்கி மற்றும் அதன் வட்டார பகுதிகளான வேதாரண்யம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்கள், ஆடி மாத விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வந்துள்ளார். பட்டிமன்றம் என்பது எனக்குத் தாய் வீடு. 13 வருடங்கள் பட்டிமன்றம் தான் எங்கள் குடும்பத்துக்கு சோறுபோட்டது.
நாங்கள் தற்போது வசிக்கும் வீடு பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது என்று நிஷா உணர்வுபூர்வமாக தெரிவித்தார். திடீரென விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் பலருக்கும் பிரபலமாகி இருக்கிறார். ஆனாலும் தற்போதும் பழசை மறக்காதவராக இருக்கிறார். என்னதான் விஜய் டிவி தொலைக்காட்சி, திரைப்படம் என நான் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாலும்கூட பட்டிமன்றங்களில் பேசுவதை இப்போதும் நேசிக்கிறேன் என நிஷா கூறியுள்ளார்.
கின்னஸ் சாதனை பெண் இயக்குனரும், நடிகையுமான விஜய நிர்மலா காலமானார் : திரை உலகினர் இரங்கல்!
பட்டிமன்றத்தில் பேசும் போது மக்களுடன் மிக சுலபமாக பழக முடிந்ததாகவும், திருவிழாக்களில் பட்டிமன்றப் பேச்சாளராக மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்களிடமிருந்து பேசி அதையும் மேடையில் பேசும்போது கிடைக்கும் வரவேற்புகள் அதிகம். அப்படியான பட்டிமன்றங்களில் பேசுவதை எப்போதும் விரும்புகிறேன் என்கிறார் நிஷா.
குடும்ப வாழ்க்கை
நிஷாவின் குடும்பத்தினர் அறந்தாங்கியில் இருப்பதாகவும், அவரது கணவர் ரியாஸ் அலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிவதாகவும் தெரிவித்துள்ளார். நான் நன்றாக பேசுவேன், ஆனால் என் கணவர் எனக்கு நேர்மறையாக இருப்பார். அவரை பேச வைக்க நான் போராட வேண்டும் என்றார் சிரிப்புடன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் & மிஸஸ்’ நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர், அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரியும் என கூறினார். ஆனால் என் கணவர் பெண்களை மதிக்கும் நல்ல குணம் கொண்டவர். சொந்தத்தில் கட்டி வைக்க வேண்டும் என்பதே என் அப்பாவின் விருப்பம். அதனால் என் அத்தை மகனான அவருக்கே கட்டி வைத்தனர்.
வினய் விஜயனை கரம் பிடித்தார் மலையாள நடிகை விஷ்ணு பிரியா : குவியும் வாழ்த்துக்கள்!
திருமணத்தின் போதே என் அப்பா, கணவரிடம் மாப்ள, நான் நிஷாவை பார்க்க நினைக்கும்போது உடனே அழைத்துவந்து காட்டணும்னு கண்டிஷன் போட்டு தான் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் நான் தற்போது ஊருக்கே செல்ல முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறேன். நான் ஊரில் இல்லாத சமயங்களில் குடும்பத்தை மாமியார் கவனித்துக்கொள்வதால் நான் பாக்கியசாலி என்றார் நெகிழ்ச்சியாக.
நிஷாவின் ஆசை
ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆசையில்லை, ஆனால் வடிவேல் சாருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் நீண்ட கால ஆசையாம். நல்ல கதையில் காமெடி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அக்கா கதாபாத்திரங்களில் நடிப்பேன். அக்கா-தம்பி பாசத்தை விரும்புவதாகவும், அவருக்கு போகும் இடங்களில் எல்லாம் பாசமான தம்பிகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிஷா வீடியோ வைரல்
தற்போது அறந்தாங்கி நிஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜே மணிமேகலை மற்றும் நிஷா இருவரும் கடற்கரை அருகில் நின்று நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது இருவரும் அருகில் இருந்த டேபிள் ஒன்றின் மீது ஏறி ஆடியுள்ளனர். அப்பொழுது நிஷா நிலைதடுமாறி கீழே விழுகின்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அவமானத்திற்கு பயந்து யாருக்கும் தெரியக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த வீடியோ இப்பொழுது உங்களுக்காக என கூறி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அத்திபழத்தின் நன்மைகள் – சரும மற்றும் உடல் ஆரோக்கியம் பெற அத்திப்பழம்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian