
பிக் பாஸ் 3 நேற்றைய நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் (cheran) ரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு , மூன்று பேர் விருந்தினர்களாக திரும்பவும் வந்தனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட அபிராமி, மோகன் வைத்யா, சாக்ஷி ஆகிய மூவரும் மீண்டும் விருந்தினர்களாக ஒருவாரம் பிக் பாஸ் வீட்டில் தங்க வைக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவாரம் விருந்தினர்களாகத் தங்கியிருந்த அந்த மூவரும் சனிக்கிழமை நிகழ்ச்சியோடு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினர். அவர்களை மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் அவர்களோடு கலந்துரையாடி, கருத்துகளையும் கேட்டறிந்தார். ஷெரின் உறவை தவறாக பேசிய வனிதாவிடம் கமல் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய ஷெரின் எங்கள் உறவை தவறாக வனிதா பேசுகிறார்.
தர்ஷனுடனானஉறவை விமர்சனம் செய்ய உனக்கு உரிமையில்லை : வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்!
இது தேவையில்லாத ஒன்று என கூற, வனிதாவுக்கு கமல் அறிவுரை வழங்கினார். உங்களது விளையாட்டுகளை மட்டும் கவனமாக விளையாடுங்க மற்றவர்கள் விசயத்துல மூக்க நுழைக்க கூடாது என் கூறினார். அதற்கு வழக்கம் போல புரியாதது போல வனிதா முழித்தார். அதற்கு கமல் நீங்க வெளியே வாங்க புரிஞ்சிடும் என கூறினார். இதனை தொடர்ந்து நாமினேஷன் ப்ரோசஸ் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் ஐந்து பேர் இந்த வாரம் எலிமினேஷன்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
முகென், ஷெரின், சேரன் (cheran) , லாஸ்லியா, கவின் ஆகியோர் லிஸ்டில் இருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது, அவர்களிடம் யாரெல்லாம் இருக்க விரும்புகிறீர்கள், யாரெல்லாம் வெளியில் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கமல் கேள்வி எழுப்பினார். இதற்கு தன்னம்பிக்கையுடன் தனக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்பதால் தான் இங்கு இருப்பேன் என்று முகென் கூறினார்.
ஷெரின் தனக்கு இதுதான் முதல் நாமினேஷன் என்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்றார். தொடர்ந்து சேரன், லாஸ்லியா இருவரும் தங்களுக்கு வெளியில் செல்ல ஆசையிருப்பதாக கூறினர். கடந்த வாரமே செல்லலாம் என்று ஆசைப்பட்டேன், இந்த வாரம் வரை வந்துவிட்டேன். எனக்கு எது நடந்தாலும் ஓகேதான் என்று கவின் கூறினார்.
இதனை தொடர்ந்து முதலில் காப்பாற்றப்படுவது யார் என அறிவித்த கமல்ஹாசன் தன்னம்பிக்கையோடு நான் வெளியேற மாட்டேன் எனக் கூறிய முகென் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். அடுத்து இரண்டாவதாக ஷெரின் காப்பாற்றப்படுவதாகவும், அதை தொடர்ந்து கவினும் காப்பாற்றப்படுவதாகவும் கமல் அறிவித்தார். இறுதியில் எஞ்சியிருந்தது லாஸ்லியா, சேரன் இருவரில், சேரன் வெளியேற்றப்படுகிறார் என அட்டையைக் காட்டி கூறிய கமல் அவரை வெளியே வருமாறு அழைத்தார்.
பிக் பாஸ் வீட்டில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை : லாஸ்லியாவை தாக்கிய ஷெரின்!
இதனை எதிர்பார்க்காத ஹவுஸ்மேட்கள் அதிர்ச்சியாகினர். குறிப்பாக அறிவிப்பு வெளியானதும், லாஸ்லியா கண்ணீர்விட்டு கதறி அழுதார். வனிதா, ஷெரின்நம்ப முடியாமல் இருந்தனர். லாஸ்லியா நீங்கள் போக்கூடாது அது நியாயம் இல்ல, நான்தான் போக வேண்டும் என்று கூறி அழுதார். மேலும், அவரிடம் மன்னிப்பு கேட்டு கட்டியணைத்து அழுதது குறிப்பிடத்தக்கது.
ஷெரின் என்னை விட்டு போகாதீங்க என்று கூறி தழுதழுத்தார். சேரன் (cheran) வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து வனிதா இது ஏமாற்று வேலை, உள்ளே ஒன்று பேசுகிறார்கள். வெளியில் ஒன்று பேசுகிறார்கள், அப்படியிருக்கும் போது சேரன் வெளியேற்றப்பட்டது தவறு என்றார். எல்லாமே தப்பாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். எல்லோரையும் சமாதானப்படுத்தி புறப்படத் தயாரானார் சேரன்.
பிக் பாஸில் ட்விஸ்ட் : மீண்டும் வீட்டிற்கு வரும் மூன்று போட்டியாளர்கள்.. கவின் அதிர்ச்சி!
அப்போது கூட ஷெரினையும், வனிதாவையும் சமாதானப்படுத்தி மீண்டும் பழையபடி நண்பர்களாக்கிவிட்டார் சேரன். ஆனால் சேரன் வெளியேறுவதை கொஞ்சமும் விரும்பாத வனிதா நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில்தான் நான் இங்கு இருந்தேன், இனி நான் எப்படி இருப்பேன் என கூறி கண்ணீர்விட்டார். பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு ஆதரவாக இருந்தது சேரன் மட்டுமே. மற்ற அனைவரும் அவரை எதிரியை போல் பார்க்கின்றனர் என்பதால் சேரன் வெளியேற்றம் வனிதாவுக்கு வருத்தத்தை தந்தது.
சேரனை வழியனுப்பி வைக்க நினைத்த போது பிக் பாஸிடம் இருந்து திடீரென்று முக்கியமான அறிவிப்பு வந்தது. அதில் சேரன், நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தொடர ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீங்கள் ரகசிய அறைக்கு செல்லலாம் என்று அறிவித்தார். ஆனால் அங்கு எத்தனை நாட்கள் இருப்பார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது.
ரகசிய அறையில் வார்னிங், டிவி, உணவு ஆகியவற்றிற்கு உரிய லைட் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேரன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கமல் ஹாசன் அறிவித்தார். பின்னர் ரகசிய அறைக்கு சென்ற சேரன், இதுவும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் தேர்வுக்கான டாஸ்க் நடைபெறுகிறது. டாஸ்க் தொடங்கியவுடனே என்னால் இதை தொடர முடியாது என்று கூறி விட்டு விலகுகிறார் வனிதா. இதேபோல் தர்ஷனும் கால் வலிக்கிறது என்று கூறி கேப்டன் டாஸ்க்கில் இருந்து விலகி விடுகிறார். இருவரும் விளையாடாமல் விட்டுக்கொடுப்பதால் லாஸ்லியா வெற்றி பெறுவதாக தெரிகிறது.
ஆனால் லாஸ்லியா எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று கூறுகிறார். மேலும் தர்ஷனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கவின் மற்றும் லாஸ்லியா கேட்கின்றனர். இதனை ரகசிய அறையில் இருந்தவாறு சேரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுவரை கேப்டன் பதவிக்கு வராத லாஸ்லியா இம்முறை கேப்டனாக வேண்டும் என்று தர்ஷன் விட்டுக்கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது புரோமோவில் தர்ஷன் போட்டியில் விட்டுக்கொடுத்தது குறித்து லாஸ்லியா பேசுகிறார். அப்போது தர்ஷனிடம் நீ பைனல் செல்ல மற்ற போட்டியாளர்கள் விட்டுக்கொடுப்பதை விரும்பாத போது, தற்போது நீ மட்டும் எனக்கு ஏன் விட்டுக்கொடுக்கிறாய் என கேள்வி எழுப்புகிறார். அதற்கு நான் தியாகம் செய்யவில்லை. நீ இந்த வீட்டில் தலைவர் பதவியில் இருந்து உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை இங்குள்ள போட்டியாளர்களுக்கும், மக்களுக்கும் நீ நிரூபிக்க வேண்டியது அவசியம்.
உனக்கு அந்த வாய்ப்பு தேவை நான் பாதுகாப்பாக இருக்கேன் என்பதால் இதனை நீ பயன்படுத்தி கொள் என்று லாஸ்லியாவிடம் தர்ஷன் கூறுகிறார். எதுவுமே நடக்காமல் சேரன் வெளியே சென்றிருக்கிறார் என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, அதனால் இந்த மாதிரி முடிவுகளை நீ எடுக்காதே என லாஸ்லியா கூறுகிறார். இதனை ரகசிய அறையில் இருந்து சேரன் பார்த்து கொண்டிருக்கிறார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Bigg Boss
லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!
Deepa Lakshmi
அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!
Deepa Lakshmi
கவின் – லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..
Deepa Lakshmi