பிக் பாஸில் ட்விஸ்ட் : மீண்டும் வீட்டிற்கு வரும் மூன்று போட்டியாளர்கள்.. கவின் அதிர்ச்சி!

பிக் பாஸில் ட்விஸ்ட் : மீண்டும் வீட்டிற்கு  வரும் மூன்று போட்டியாளர்கள்.. கவின் அதிர்ச்சி!

பிக்பாஸ் (biggboss) சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 70 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்தியா , ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா ஆகிய 8 போட்டியாளர்கள் வெளியே சென்றுள்ளனர். 

தற்போது வனிதா, கவின், லாஸ்லியா, சாண்டி, முகென், தர்ஷன், சேரன், ஷெரின் ஆகியோர் இருக்கின்றனர். இதில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது பந்தபாசம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. கடந்த வாரம் யாருமே பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என்று கமல் தெரிவித்துள்ளார். 

ஓபன் நாமினேஷனால் கதிகலங்கிய பிக் பாஸ் இல்லம் : கவின் - வனிதா இடையே பயங்கர மோதல்!

twitter

எனவே இந்த வாரம் சேரன், கவின், லாஸ்லியா, முகென் மற்றும் ஷெரின் ஆகியோரில் ஒருவர் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் யார் வெளியே செல்வர் என கமலஹாசன் இந்த வார இறுதியில் அறிவிப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் மீண்டும் உள்ளே வருவது வழக்கமான ஒன்று. 

இந்த வகையில் வனிதா ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். ஆனால் அவரை திடீரென்று போட்டியாளராக மீண்டும் அறிவித்தார் பிக்பாஸ். மக்கள் வாக்களித்து வெளியில் அனுப்பிய அவரை மீண்டும் பிக் பாஸ் (biggboss) வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். சிறப்பு விருந்தினராக வந்த அவர் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாகி விட்டார். வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது முதல் பல்வேறு பிரச்சனைகள் எழுத்து வருகிறது. 

 

twitter

இதனால் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று வருவது நிதர்சமான உண்மை. இந்நிலையில் மேலும் 3 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியது. அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் தான். இவர்கள் மூவரும் ஒரு வாரத்திற்கு விருந்தினர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக தற்போது பிக் பாஸ் (biggboss) வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் வர வேண்டும் என கமல் கேள்வி எழுப்பினார். அதில் பெரும்பாலும் அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா பெயரை கூறினர் என்பது குறிப்படத்தக்கது.   சாக்‌ஷி பிக் பாஸ் வீட்டில் கவினை காதலித்து வந்த நிலையில், கவினும் சாக்ஷியிடம் பழகி வந்தார். எனினும் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தனர். சாக்ஷி பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே சென்றவுடன் கவின் - லாஸ்லியா பழகி வந்தனர். 

என்னமோ இவர் பெத்து வளர்த்த மாதிரி..ஆத்திரத்தில் கவின்.. அதிர்ச்சியில் சேரன்..

twitter

இதனை வெளியில் இருந்து பார்த்து வந்த சாக்ஷி அவர்கள் இருவர் மீதும் கொலைவெறியில் இருக்கிறார். கடந்த வாரம் சாக்‌ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் கூறிய எபிசோட்டைப் பார்த்து விட்டு, அதை மறுத்து கோபமாக சாக்‌ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாக்ஷி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

இதனால் கவின் - சாக்‌ஷி இடையே புதிய பல பிரச்சினைகள் உருவாகும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏற்கனவே வனிதாவால் பல பிரச்சினைகளில் கவின் சிக்கி வருகிறார். கவினிடம் நட்பாக மட்டுமே பழகி வருகிறேன் என லாஸ்லியா முன்னதாக சாக்ஷியிடம் கூறியிருந்தார். இதனால் அவருக்கும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக இந்த வாரம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.