Fashion

‘அடியே கொல்லுதே’.. பெண்களுக்கான டிரெண்டிங் ‘பிளவுஸ்’ டிசைன்கள் உள்ளே!

Manjula Sadaiyan  |  Mar 27, 2019
‘அடியே கொல்லுதே’.. பெண்களுக்கான டிரெண்டிங் ‘பிளவுஸ்’ டிசைன்கள் உள்ளே!

நமது முன்னோர்கள் பலரும் உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஆண்கள் என்றால் வேட்டி-துண்டு, பெண்கள் என்றால் பிளவுஸ் இல்லாத சேலை அணிந்திருப்பர். ஒருகட்டத்தில் உடைகளின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆண்கள் வேட்டி-சட்டை அணிய, பெண்கள் பிளவுஸ்(Blouse) அணிந்து சேலை கட்ட ஆரம்பித்தனர்.காலப்போக்கில் வேட்டி-சட்டைகள் மறைந்து அந்த இடத்தை ஜீன்ஸ்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. பெண்கள் மத்தியில் சேலை அணிவது வசதிக்குறைவாக இருந்தது, இதனால் சேலை-தாவணிகளின் இடத்தை சுடிதார் ஆக்கிரமித்துக் கொண்டது. அணிவது எளிது, வசதி அதிகம் என்பதால் கிராமப்புறங்களிலும் சுடிதார் இயல்பாக ஊடுருவியது.

சில நேரங்களில் பழைய விஷயங்கள் திடீரென ட்ரெண்டடிப்பது உண்டு. அதேபோல ஒருகட்டத்தில் வேட்டி-சட்டை அணிவதை ஆண்கள் பெரிதும் விரும்ப, பெண்களின் கவனம் சேலையின் மீது திரும்பியது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல தொடர்ந்து ஒரேமாதிரியான விஷயங்கள் நாளடைவில் நமக்கு போர் அடித்துவிடும்.இந்த மாற்றம் சேலைக்கு அணியும் பிளவுஸ்களிலும் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் ஜன்னல் வச்ச ஜாக்கெட், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என ஒருசில ஜாக்கெட்கள் பிரபலமாக ஆரம்பித்தன. நாளடைவில் சேலைக்கு நிகராக தாங்கள் அணியும் பிளவுஸ்களும்(Blouse) இருக்க வேண்டும் என பெண்கள் விரும்ப, நாள்தோறும் ஒரு புதிய டிசைன் பிளவுஸ்களில் அறிமுகமாகியது.

தற்போதைய காலகட்டத்தில் நடிகைகள் போல, பெண்களும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளவுஸ்களில்(Blouse) கூட வெரைட்டிகளை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். திருமணம் போன்ற விழாக்களில் அணிவதற்காக பிளவுஸ் தைத்திட, பெண்கள் சராசரியாக 1500 முதல் 2000 ரூபாய் வரை செலவிடுவதாக கூறப்படுகிறது. சேலையில் அதிக வேலைப்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், தாங்கள் அணியும் பிளவுஸில் எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் செய்து தங்களை ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் பிளவுஸ் வகைகளில் லேட்டஸ்ட் டிரெண்டிங் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

மல்டி ஸ்ட்ரின்ஜ்ட் பேக்லெஸ் பிளவுஸ்(Blouse) டிசைன்(Design)-Multi-stringed backless blouse design

பாலிவுட்டில் இந்த பிளவுஸ் டிசைன் தற்போது மிகவும் டிரெண்டடித்து வருகிறது. உச்ச நட்சத்திரங்கள் பலரும் இந்த பிளவுஸ் டிசைனை மிகவும் விரும்பி அணிவதாகக் கூறப்படுகிறது.

ஹெவிலி எம்பிராய்டர்ட் பேக் பிளவுஸ்(Blouse) டிசைன்(Design)- Heavily embroidered back blouse design

பிளவுஸின் பின்புறம் எக்கச்சக்கமாக எம்பிராய்டரி வேலைகள் செய்த பிளவுஸ் அணிவதை தற்போது பலரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர். சோளி மற்றும் அதிக வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் ஆகியவற்றுக்கு இந்த பிளவுஸ் நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்.

மல்டிபிள் ஸ்ட்ராப்ட் பிளவுஸ்(Blouse) பேக் டிசைன்(Design) – Multiple strapped blouse back design

முதுகில் வரிவரியாக ஏராளமான ஸ்ட்ராப்களை வைத்து வடிவமைக்கப்படும் இந்த பிளவுஸ்களுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.முதுகின் கவர்ச்சியை அழகாக எடுத்துக்காட்டினாலும், சட்டென்று பார்த்தால் முதுகில் எதையோ ஒட்டிவைத்தது போன்று இந்த பிளவுஸின் அமைப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேங்கிள் பிளவுஸ்(Blouse) டிசைன்(Design)-Bangle blouse design

இரண்டு புறமும் ஸ்ட்ராப்களைக் கொண்டு வளையல்கள் வடிவில் பூக்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த பிளவுஸ் பார்ப்பதற்க்கு வளையல்கள் வடிவில் இருப்பதால் பேங்கிள் பிளவுஸ் டிசைன் என அழைக்கப்படுகிறது. பரந்து விரிந்திருக்கும் முதுகின் அழகை எடுத்துக்காட்டிட இந்த பிளவுஸ் நல்லதொரு சாய்ஸ் ஆக இருக்கும்.

பேஸிக் கட்-அவுட் பிளவுஸ் டிசைன்-Basic cut-out blouse design

பிளவுஸ் பார்க்க மாடர்னாகவும் இருக்கணும், அதே நேரம் பாரம்பர்யமும் முக்கியம் என்று எண்ணுபவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்க இந்த பேஸிக் கட்-அவுட் பிளவுஸ் டிசைனை டிரை செய்து பார்க்கலாம். முழங்கை வரை முன்புறமும், முதுகின் நடுவில் தேவையான இடைவெளி இருப்பது போலவும் இந்த பிளவுஸ் டிசைன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு,மூன்று வண்ணங்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த பிளவுஸ் வெரைட்டி தேடுபவர்களுக்கு நல்லதொரு சாய்ஸ்.

ஆன் ஆல் டை அப் பேக் பிளவுஸ் டிசைன்

முழங்கை வரையில் கைவைத்து தைக்கப்பட்டிருக்கும் இந்த பிளவுஸ், பின்புறம் ஏராளமான நாடாக்கள் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். நாடாக்கள் அனைத்தையும் இணைப்பது போல பிளவுஸ் அடியில் வேலைப்பாடுகள் கொண்ட மணிகளால் முடிச்சுக்கள் இருப்பது போல, இந்த பிளவுஸின் டிசைனை வடிவமைத்து உள்ளனர். தோள்களை மறைத்து முதுகின் முழு அழகையும் வெளிப்படுத்துவது போல இந்த பிளவுஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

யுனிக் கிரிஸ் கிராஸ் பேட்டர்ன்ட் பேக் பிளவுஸ் டிசைன் (Unique criss-cross patterned back blouse design)

முதுகின் பின்புறம் கிராஸ் வடிவில் பேட்டர்ன் வைத்து தைக்கப்பட்டிருக்கும். முதுகின் அடிப்பகுதியிலும், மேலேயும் பட்டை வடிவில் பிளவுஸ் அமைக்கப்பட்டு இருக்கும். உங்கள் முதுகின் அழகை எடுத்துக்காட்டிட இந்த பிளவுஸ் உங்களுக்கு நல்லதொரு சாய்ஸ்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

படங்கள் ஆதாரம்:Pinterest 

Read More From Fashion