
பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 86 நாட்களை நெருங்கி விட்டது. போட்டிகள் நிறைவடையும் நேரத்தில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலேவிற்கான டாஸ்க் நடந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது புரோமோவில் டிக்கெட் டு பினாலேவின் ஆறாவது டாஸ்க் காட்டப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் புகைப்படம் அடங்கிய பசர் ப்ளாக்ஸ்குகளை அடுக்க வேண்டும். மற்றவர்கள் அதனை செய்யவிடாமல் பந்துகளை எரிந்து கலைக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார்.
அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் டாஸ்க்கை ஆர்வத்துடன் செய்கின்றனர். அப்போது மற்றவர்கள் பந்துக்களை எறிகின்றனர். சாண்டி, ஷெரின், கவின் ஆகியோரின் பசர் ப்ளாக்ஸ்குகள் கீழே விழுந்து விடும் நிலையில், தர்ஷன் மற்றும் சேரனின் புகைப்படம் கலையாமல் இருக்கிறது. இதனால் இன்றைய எபிசோட் சற்று விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், தெர்மாகோல் உள்ள மூட்டையை கட்டி கொண்டு போட்டியாளர்கள் ஓட வேண்டும். அவர்களின் மூட்டையை பாதுகாத்து கொண்டு மற்ற போட்டியாளர்களின் மூட்டையை சேதப்படுத்தி உள்ளே இருக்கும் தெர்மா கோல்களை வெளியே அகற்ற வேண்டும். வட்டமாக ஓடி கொண்டிருந்ததால் லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோருக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தர்ஷன் தனது மூட்டையை யாரும் தொட விடமால் கவனமாக விளையாடுகின்றார்.
இரண்டாவது புரோமோவில், கவின் மற்றும் தர்ஷனுக்கு இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் தர்ஷன், கவினிடம் நான் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் என மூட்டையை ஓட்டையாக்கிவிட்டாய் என தர்ஷன் கேள்வி எழுப்புகிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கவின் அவரை சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால் தர்ஷனோ அவர் சொல்வதை கேட்காமல், ‘முதல் ரவுண்டில் யாரும் என் பேக்கை பிடிச்சு இழுக்கல.
என் ஸ்பீடுக்கு என்னால ஓட முடியலன்னா, என் முன்னாடி ஷெரின் ஓடிட்டு இருந்தா. அந்த நேரம் பார்த்து பேக்கை பிடித்து இழுத்தா எனக்குக் கோபம் தான் வருது’ என்றார். அதற்கு கவின் அது தான் விளையாட்டே என கூறுகிகிறார். அப்போது லாஸ்லியா குறுக்கிட்டு எல்லோரும் அப்படி தான் விளையாடுகின்றனர் என கவினுக்கு ஆதரவாக கூறுகிறார். முதல் முறையாக கவினிடம், தர்ஷன் சண்டை போடுவதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நான் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் : தர்ஷனுடன் சரிசமாக போட்டியில் சேரன்!
இந்த டாஸ்க்கில் ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகெனும் வெற்றி பெற்றார்கள். மூன்றாவது டாஸ்கில் கவின் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
நடிகர் கவின் எந்த டாஸ்கிலும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்கிற மனநிலையிலேயே இருந்தார். ஆனால் மூன்றாவது டாஸ்கில் (biggboss) கவின் கடைசிவரை விட்டு க்கொடுக்காமல் போராடினார். ஒற்றைக்காலில் நின்றுகொண்டு கட்டைகளை அடுக்கிவைத்து விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது தர்ஷன், சேரன் உள்ளிட்டவர்கள் ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்டனர். ஆனால் இறுதிவரை கவின் மற்றும் முகென் போட்டியில் இருந்தனர். கவின் 26 நிமிடம் 30 நொடிகள் பிடித்திருந்தார். முகென் அவரை விட 30 நொடிகள் அதிகம் விழாமல் பிடித்திருந்தார். இதனால் கவின் இரண்டாவது இடத்தை பிடித்தாலும் அவரது போராட்ட குணம் அந்த டாஸ்க்கில் வெளிவந்தது. கவினை பார்த்து மற்ற போட்டியாளர்கள் மிரண்டுவிட்டனர்.
அதை சேரன் ஓப்பனாகவே கவினிடம் கூறினார். கவின் நன்றாக விளையாடினாய், நீ கவனித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என வெளிப்படையாகவே தெரிவித்தார். கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வந்த நிலையில், பிரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் பெற்றோர்கள், கமலின் அறிவுரையை தொடர்ந்து அவர்கள் இருவரும் விலகி போட்டியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.
குவியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்
இருவரும் முன்பு போல நெருக்கமாக பேசிக்கொள்வதில்லை. எனினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவின், லாஸ்லியாவிடம் மீண்டும் பேச முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் லாஸ்லியாவிடம், கவின் பேச முயன்றார். ஆனால் அங்கு லாஸ்லியா மற்றும் முகென் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கவின் அப்படியே திரும்பி சென்றுவிட்டார், அதுமட்டுமில்லாமல் லாஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரின் உடன் பழகி வருகிறார்.
ஒரே தட்டில் ஷெரினுடன் சாப்பிடுவது, ஷெரின் பின்னாலே சுற்றுவது என கவின் மீண்டும் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். இதனால் லாஸ்லியா மட்டுமல்ல பார்வையாளர்களும் கவின் மீது வெறுப்பில் உள்ளனர். கவின் எப்போது இப்படி தான், அவனுக்கு பெண்கள் பின்னால் சுற்றுவது தான் வேலை என நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். இதனிடையே ஷெரின், சாண்டியின் மடி மீது ஏறி அமர்ந்துள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியில் சோஃபாவில் அமர்ந்து போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஷெரின், சாண்டியின் மடி மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பலர் விமர்சித்து வருகின்றனர். பிக்பாஸ் (biggboss) நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என பலர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷெரினின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Bigg Boss
லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!
Deepa Lakshmi
அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!
Deepa Lakshmi
கவின் – லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..
Deepa Lakshmi