லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்! | POPxo

குவியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்

குவியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்

லாஸ்லியா .. பிக் பாஸ் சீசன் மூன்றின் ஆரம்ப காலங்களில் ஒரு சிறகில்லாத தேவதை ஆக மக்கள் மனங்களில் பறந்தவர். பின்னர் காதல் எனும் ஆப்பிளை சுவைக்க வைத்த சாத்தானாக கவின் லாஸ்லியா வாழ்வில் உள்ளே வர.. ஆரம்பித்தது தேவதையின் சரிவுகள்.

வெறும் 24 வயதே ஆன லாஸ்லியா கவின் மற்றும் சாக்ஷி இடையே ஆன உணர்வை புரிந்து கொண்டதாகக் கூறியதும், சாக்ஷி பொய் சொல்கிறார் எனக் கவின் பொய் சொல்ல அதனை நம்பியதும் அவரது வாழ்வின் வெளிச்சப் பக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக இருளாக்க ஆரம்பித்தார் கவின்.

சந்தோஷமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தேவைப்பட்ட இடங்களில் கூர்மையாக பேசிக்கொண்டு பிக் பாஸ் (biggboss) வீட்டின் பட்டம் பூச்சியாக திரிந்தவர் லாஸ்லியா. அபிராமியின் காதல் கூட பல தொலைநோக்கு பார்வையின் கீழ் அபிராமி வலுவாக ஏற்படுத்திக் கொண்ட உறவு.

ஆல்யா வீட்டுல பேசிப் பார்த்தோம்.. ஒத்துக்கல..இப்போ ஆல்யா எங்க வீட்டுலதான் இருக்கா -சஞ்சீவ்

Hotstar
Hotstar

ஆனால் லாஸ்லியா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சீரியலில் பார்த்த கவின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை உண்மை என நம்பி அதில் தடாலடியாக இறங்கினார். அதற்கு காரணம் தன்னை நல்லவன் என்று கூறிக்கொள்ளாமல் மற்றவர்களை கெட்டவர்கள் என்று எடுத்து தொடர்ந்து மூளை சலவை செய்த கவின்.

இதனால் கவின் மீது "அந்த வானத்தை போல மனம் படைச்ச " என்று பாடாமல் பாடி கவின் ஏதோ மிக சிறந்த தியாகி போல என நம்பி தொடர்ந்து லாஸ்லியா கவினுடன் பழகினார். லாஸ்லியா விலகினாலும் கவின் விடுவதாக இல்லை. சில முறைகள் லாஸ்லியா வெளியில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று கூறியும் கவின் இப்போதே சொல்லு என அவசரப்படுத்தினார்.

நல்லவேளையாக லாஸ்லியா பதில் சொல்லத் தயார் ஆகும் முன்னர் அதிரடியாக லாஸ்லியாவின் நிஜ அப்பா உள்ளே வந்தார். அம்மாவின் கண்ணீர் லாஸ்லியா மனத்தைக் கரைத்து. சகோதரிகளின் கவலை அப்பாவின் வேதனை என எல்லாம் ஒன்று சேர லாஸ்லியா அழகாக தான் முதலில் தீர்மானித்த திசையில் பறக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ்சினிமாவின் "அவதார் " டிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் - இயக்குனர் மணிரத்னம்

Hotstar
Hotstar

அதுவரைக்கும் லாஸ்லியா என்ன ஆவார் என்கிற கவலை எல்லோருக்கும் இருந்தது. ஒரு சிலருக்கு லாஸ்லியா கவினைத் திருமணம் செய்வதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும் என்று கூடத் தோன்றியது. ஆனால் எப்போது 10 வருடம் கழித்து பார்த்த அப்பா தன்னைத் திட்டுகிறார் என்பது கூடத் தெரியாமல் அப்பாவின் முகத்தையே பார்த்தபடி இருந்தாரோ அப்போதே அவர் மீதான மக்களின் கோபங்கள் இறங்கி விட்டன.

கூடவே லாஸ்லியாவின் அப்பா தங்கள் பெண்ணின் வளர்ப்பு அவர்கள் கடந்து வந்த சிரமமான பாதை போன்றவற்றை எடுத்து சொல்லி லாஸ்லியாவை சரியான நேரத்தில் திசை திருப்பி இருக்கின்றார். அப்பாவின் மீது அதீத பற்றுள்ள லாஸ்லியா கவினிடம் இருந்து காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் லாஸ்லியாவிற்கு பல்வேறு நடிப்பு வாய்ப்புகள் அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே வந்து கதவைத் தட்டுகின்றனர். அவர் சினிமாவுக்கு அவசியமானவர் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் முன்பே தொலைபேசி வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

உங்கள் காதல் ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் ஆத்ம பந்தம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

Hotstar
Hotstar

அதனை அடுத்து தற்போது விஜய் டிவியில் நன்றாக போன தொடரான ராஜா ராணி முடிவடைந்திருக்கிறது. அதில் நடித்த ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணமே முடிந்து விட்டது. ஆகவே தற்போது ராஜா ராணி பாகம் இரண்டு தயார் ஆகப் போகிறதாகவும் அதில் லாஸ்லியா நாயகியாக நடிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு முடிவு செய்திருக்கிறதாம்.

ஆனால் லாஸ்லியா அப்பாவோ கடுமையாக உன்னை நாங்க அப்படியா வளர்த்தோம் ? காசுக்காகவா அனுப்பினோம் என பொரிந்து தள்ளவே எப்படி லாஸ்லியாவிடம் சம்மதம் வாங்குவது என்று விஜய் டிவி குழுவினர் திணறிக் கொண்டிருந்தனர்.

 

Hotstar
Hotstar

ஆபத்பாந்தவனாக வந்த கமல்ஹாசன் லாஸ்லியாவின் அப்பாவை பாராட்டி பேசி விட்டு சூசகமாக இனி அடிக்கடி இங்க நீங்க வர வேண்டி இருக்கும் கனடாவிலேயே இருந்து விடாமல் அடிக்கடி வந்து லாஸ்லியாவைப் பார்க்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தார்.

கமல்ஹாசன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட லாஸ்லியாவின் அப்பா தன்னுடைய சம்மதத்தை விட லாஸ்லியா என்ன முடிவெடுக்கிறார் என்பது முக்கியம் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்.

ஆக இனி எப்படி இருந்தாலும் லாஸ்லியாவின் தேவதை தருணங்களை நாம் டிவியிலோ உள்ளது வெள்ளித்திரையிலோ அடிக்கடி காணலாம். மீண்டும் ஒரு காதல் சாத்தான் அவர் மீது குடியேறாமல் இருக்கட்டும்.

 

Hotstar
Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.