
நேற்றைய பிக் பாஸ் (bigg boss ) சதா சண்டையிட்டு கொண்டிருந்த பெண்கள் குழுவால் மனதில் பெரிய அழுத்தங்களுடன் ஆண்கள் குழு வளைய வந்து கொண்டிருந்ததை மாற்றி வீட்டை சகஜ நிலைக்கு கொண்டுவந்தது.
இந்த வாரம் ஆரம்பம் முதலே சாக்ஷி , அபிராமி மற்றும் ஷெரின் மூவரால் பல சண்டைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. சாக்ஷியின் சுயபாதுகாப்பின்மை உணர்வால் மீரா முகேனிடம் பேசிய விஷயங்களை தவறாக புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அதை பற்றி குழுவிடம் சொல்லி பற்றவும் வைத்து விட்டார்.
ஆனால் வனிதா அதனை உடனடியாக முகேனிடமே கேட்டு க்ளியர் செய்ய பிரச்னை மீண்டும் மீராவுக்கு சிக்கலை விளைவித்தது. முகேன் வனிதா குழுவோடு நேரம் செலவழித்தார்.
லாஸ்லியா மற்றும் திவ்யா – ஆறு வித்யாசங்கள் !
மதுமிதா கடந்தவாரம் முதலே டார்கெட் செய்யப்பட்டவர் என்பதால் அவர் என்ன செய்தாலும் அவரை நோக்கி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி சண்டையும் சச்சரவுமாக போன வீட்டில் நிலைமையை நியூட்ரல் செய்ய பெரிய முதலாளி திடீரென ஒரு டாஸ்க் கொடுத்தார். ஆண்கள் எல்லோரும் வீட்டில் உள்ள பெண்களை போல மாறி அவர்களை போல நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
ஆண்கள் இதுதான் சமயம் என்று பிசிறு கிளப்பி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கவின், முகேன் இருவருமே ஷெரின் மற்றும் அபிராமியை இமிடேட் செய்வதாக பார்வையாளர்களை இரிடேட் செய்தார்கள். ஆனாலும் அது அழகாகவே இருந்தது.
லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபி க்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!
சரவணன் பாத்திமாவை இதுதான் சமயம் என்று காத்திருந்து பழி வாங்கியதாகவே நமக்கு தோன்றும் வண்ணம் நடந்து’ கொண்டார்! பாத்திமாவை போலவே ஓவர் மேக்கப் போட்டு நடந்து அப்புறம் சரவணன் என்று மற்றவரின் சுதந்திரத்தில் பாத்திமா தலையிடுவதை நாகரிகமாக சுட்டி காட்ட இதுதான் சான்ஸ் என்பதோடு முடித்து கொண்டார்.
விளையாடியதிலேயே எந்த மேக்கப் கோமாளித்தனங்கள் இல்லாமல் வெறும் ஷாலை போட்டுகொண்டு தனது நடிப்பால் அனைவர் மனதையும் கவர்ந்தவர் தர்ஷன்தான். வனிதாவை இமிடேட் செய்த அவர் தான் என்ன சொல்ல வேண்டுமோ அதனை அழகாகவே வனிதாவுக்கு கன்வே செய்தார். அவருக்கு புரிந்ததா இல்லையா என்பது அவர் சம்பந்தப்பட்டது.
இப்படி வீட்டையே சில நிமிடங்களில் ரணகளமாக மாற்றி விழுந்து விழுந்து சிரிக்க வைத்தனர் ஆண்கள் டீம்.
டீனேஜ் பெண்களுக்கான வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் ! திரும்பி பார்க்க வைக்கும் அழகை பெறுங்கள் !
இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவில் கவின் காதலில் விழுந்து விட்டதையும் அதனை சாக்ஷி புரிந்து கொண்டதையும் காட்டியிருக்கிறார்கள். பின்னணியில் மியூசிக் வேறு போட்டு ஏற்றி விடுவதில் பிக் பாஸை மிஞ்ச யார் வர முடியும்?!
கவினின் வார்த்தைகளில் சாக்ஷி வெட்கப்பட்டு சிரிப்பதை பார்க்கையில் நமக்கே ஒரு நிமிஷம் தலை சுத்தி போய்விட்டது. கவின் சொன்னது போலவே நான்கு பேரில் ஒருவரை வலையில் விழ வைத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. மீதி விஷயங்கள் இன்றிரவு தான் தெரியவரும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Bigg Boss
லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!
Deepa Lakshmi
அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!
Deepa Lakshmi
கவின் – லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..
Deepa Lakshmi