Bigg Boss

பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பிக் பாஸ் : வில்லுப்பாட்டில் கலக்கிய போட்டியாளர்கள்!

Swathi Subramanian  |  Aug 29, 2019
பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பிக் பாஸ் : வில்லுப்பாட்டில் கலக்கிய போட்டியாளர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் (bigg boss) 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 10வது வாரத்தை நெருங்கிவிட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லாஸ்லியா என்று மொத்தம் 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரத்தில் சேரன், தர்ஷன், ஷெரின், கவின் ஆகியோர் ஒரு கிராமமாகவும், வனிதா, சாண்டி, முகென், லாஸ்லியா ஆகியோர் ஒரு கிராமமாகவும் தனித்தனியாக இரு கிராமங்களாக பிரிந்துள்ளனர். அவர்களுக்கு தினமும் நாட்டுப்புற கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு, பிக் பாஸ் வீட்டில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை போட்டியாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர். 

twitter

நேற்று முன்தினம் பொம்மலாட்டம் நிகழ்ச்சியும், நேற்று தெருக்கூத்து நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி டியோ டியோ டோலு தான் என்ற பாடலுடன் தொடங்கியது. பின்னர் லாஸ்லியா – கவின் எதிர்கால வாழ்க்கை பற்றி இப்போதே பேச தொடங்கினர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். வெளியில் சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று லாஸ்லியா தெரிவிக்க, கவின் கடந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் ஃபாஸ்ட் என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிடலாம். 

ஆனால் எதிர்காலத்தைப் பற்றி வேண்டும் என்றால் பேசலாம் என்றார். மேலும் இந்த வாரம் நான் தான் வெளியில் போவேன். நான் வெளியில் சென்ற பிறகு நீ என்ன செய்ற என்று டிவியில் பார்ப்பேன் என்று கவின் கூறினார். பின்னர் போட்டியாளர்களுக்கு வில்லுப்பாட்டு கற்றுக்கொடுக்க தொடங்கினர். நாட்டுப்புற கலைஞர் காளீஸ்வரன் வில்லுப்பாட்டு கற்றுக்கொடுத்தார். இதையடுத்து, சேரன் தனது குழுவினருடன் இணைந்து முதலில் வில்லுப்பாட்டு பாடினார். இவருக்கு பக்கவாத்தியங்களாக முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் இருந்தனர்.

பிக் பாஸில் தனது முன்னாள் காதல் குறித்து உருக்கமாக பேசிய கவின் : மவுனத்தில் லாஸ்லியா!

twitter

சேரன் அணியினர் நகர வாழ்க்கையில், வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்து கடன் பெற்றவர்கள் பற்றி வில்லுப்பாட்டு பாடினார். அதே போன்று சாண்டியும் வில்லுப்பாட்டு மூலம் தனது மகளைப் பற்றி பாடினார். பின்னர் பிக் பாஸ் (bigg boss) வீட்டில் காதல் மன்னனாக திகழும் கவின் காதலை கலாய்க்கும் வகையில் சாண்டி வில்லுப்பாட்டு பாடுனார். ஆரம்பத்தில் 4 பேரை காதலித்த கவின் தற்போது லாஸ்லியாவை காதலிப்பதை கலாய்த்தனர். அதனை தொடர்ந்து தர்ஷனையும், ஷெரினையும் வைத்து சாண்டி வில்லுப்பாட்டு பாடினர். 

பிரிந்த பெற்றோர்.. தனித்த வாழ்க்கை.. முகேனின் கோபம் தரும் பாடம் என்ன?

twitter

தர்ஷன் பின்னாடி சுத்துதம்மா பொண்ணு ஒன்னு. அது வேற யாருமில்ல நம்ம ஷெரின் கண்ணு. பார்ப்பதற்கு மைதா மாவு மாதிரி இருக்கும் என்று சாண்டி கலாய்த்தார். இதனால் நிகழ்ச்சி சற்று கலகலப்பாக போனது. இதில் சேரன் அணியினர் வெற்றிபெற்றனர். பாரம்பரிய கலைகள் கற்றுக்கொடுத்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டதோடு இந்த கலைநிகழ்ச்சி டாஸ்க் முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனது அப்பா விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கண்ணீர் விட்டு வனிதா அழுதார். எப்போதும் நான் வனிதா விஜயகுமார்தான் அப்பா என்று கேமரா முன்பு கதறி அழுதார். உங்களை பெருமைப்படுத்துவேன், உங்கள் மரியாதையை காப்பாற்றுவேன் என்று கூறினார். 

உங்களை மிஸ் பண்றேன், பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கண்ணீருடன் கேமரா முன் தெரிவித்தார். இதன் பின்னர் இந்த வாரம் நடந்த 3 கலைநிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்த ஒருவராக முகென் தேர்வு செய்யப்பட்டார். முகெனுக்கு பிக் பாஸ் பாராட்டு தெரிவித்தார். இந்த வார தலைவர் போட்டிக்கு வனிதா மற்றும் முகென் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த லக்‌ஷுரி பட்ஜெட் டாஸ்க்கை சிறப்பாக செய்யாதவர்கள் என்று கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 

மோசடி வழக்கில் கவின் குடும்பத்தினர் கைது.. 5 வருடம் சிறை.. திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு..!

அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் தனியாக போராடுவோம் என்று ஷெரின் தெரிவிக்க இந்த வாரம் சிறை தண்டனை கிடையாது என்று பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த வாரம் நல்லவிதமான ஐடியாக்களை வாரி வழங்கிய சேரனுக்கு மியூச்சுல் ஃபண்ட் காயின் வழங்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில், சாண்டியின் மகள் குறித்து லாலா குட்டி, டாடி அண்ட் மாம் மிஸ் யூ என்று கண்ணாடியில் கவின் எழுதினார். இதனை பார்த்த சாண்டி, கவினை கட்டியணைத்து முத்தமிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரோமோவில் ஷெரின் நாளை பிக் பாஸ் (bigg boss)  வீட்டை விட்டு செல்கிறாயா என தர்ஷன் கேள்வி எழுப்பினார். ஷெரின் இந்த வார நாமினேஷனில் இருக்கிறார். ஆனால் இந்தவாரம் எலிமினேஷன் கிடையாது என உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது. இதனையடுத்து ஆமாம் செல்கிறேன், மகிழ்ச்சியாக இரு என ஷெரின் , தர்ஷனிடம் கேட்கிறார். அதற்கு என்னை விட்டு நீ பிரியாதே …. நொடியும் என் மனம் தாங்காதே … என தர்ஷன் பாட்டு படுகிறார். அதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது தர்ஷன் என ஷெரின் கூறுகிறார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More From Bigg Boss