மோசடி வழக்கில் கவின் குடும்பத்தினர் கைது.. 5 வருடம் சிறை.. திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு..!

மோசடி வழக்கில் கவின் குடும்பத்தினர் கைது.. 5 வருடம் சிறை.. திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு..!

பிக் பாஸ் வீட்டில் கவின் (kavin) செய்து வரும் லீலைகளால் பல்வேறு விமர்சனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. வந்த நாள் முதலாகவே கவின் தனது காதல்களை ஆரம்பித்து வைத்து கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தங்களுடைய துயரங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வொன்றில் ஒரு பிரச்னையினால் குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்ததாகக் கூறி இருந்தார். அப்போது எந்த உறவினரும் அடைக்கலம் தராத நிலையில் நண்பர்கள் உதவினார்கள் என்று அவர் கூறி இருந்தார்.

அது என்ன பிரச்னை என்பதும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. சீட்டு மோசடி வழக்கில் நடிகர் கவின் ராஜ் குடும்பத்தினர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பாகி இருக்கிறது. இதனால் பிக் பாஸ் வீடு மீண்டும் பரபரப்பாகி இருக்கிறதாம்.

பிரிந்த பெற்றோர்.. தனித்த வாழ்க்கை.. முகேனின் கோபம் தரும் பாடம் என்ன?

 

Youtube

திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் கவின். அவரது அம்மா ராஜலக்ஷ்மி என்கிற ராஜி, சொர்னாதன் , ராணி அருணகிரிநாதன், தமயந்தி ஆகியோர் ஒன்றிணைந்து ஏல சீட்டு நடத்தி வந்தனர். தங்களை நம்பி பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த கவின் குடும்பத்தார் 2007ம் ஆண்டு தலைமறைவாகினர்.

பாதிக்கப்பட்ட 29 பேர் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் கவின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலம் ஆனார். தற்போது பிக் பாஸ் வீட்டில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் சென்ற வாரம் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

லாஸ்லியாவிற்கு இதைவிட சிறந்த தண்டனை வேறு என்ன இருக்க முடியும்? 

 

Youtube

31 நபர்கள் குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொன்ன நிலையில் குறுக்கு விசாரணையும் முடிந்து இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருபாகரன் மதுரம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளான கவின் குடும்பத்தாரிடம் இதுகுறித்து நீதிபதி உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவாக இத்தனை பேர் சாட்சியம் கூறி உள்ளனர் இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

அதன் பின் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கவினின் பாட்டி சோர்வாக இருக்க அவரை இருக்கையில் அமரவைத்தனர். பின்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கவின் குடும்பத்தாருக்கு எதிராக 31 பேர் சாட்சி சொல்லியிருப்பதால் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அடுத்தவர் காதலனை காதலிக்கும் லாஸ்லியா மற்றும் அபிராமி இந்த உலகிற்கு சொல்ல வருவது என்ன ?

 

Youtube

ஆகவே குற்றவாளிகள் அனைவரும் 5 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி கிருபாகரன்.

கூடவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குற்றவாளிகள் தலா 1 லட்சம் தர வேண்டும் என்றும் வழக்கு ஆரம்பித்த 2007ம் ஆண்டில் இருந்து 5 சதவிகிதம் வட்டி கணக்கிடப்பட்டு ரூ.55.10 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் கட்டவில்லை என்றால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பித்தது முதலே போலீஸ் கோர்ட்டு என்று போட்டியாளர்கள் பெயர் அடிக்கடி அடிபடுகிறது. மீராமீதுன், வனிதா, மதுமிதா வரிசையில் தற்போது கவினும் இணைந்திருக்கிறார். சீட்டு மோசடி வழக்கில் தனது குடும்பம் உள்ளே சென்றது தெரியாமல் கவின் தற்சமயம் லாஸ்லியாவோடு காதல் வசனம் பேசிக்கொண்டிருப்பார் என்று நினைக்கும்போது நெஞ்சம் வலிக்கிறது.

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.