Entertainment

சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் : இயக்குனர், நடிகர் குறித்த முழு விவரங்கள்!

Swathi Subramanian  |  Jun 24, 2019
சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் : இயக்குனர், நடிகர் குறித்த முழு விவரங்கள்!

தமிழ் சினிமா (About Tamil Cinema)

தமிழ் சினிமாவில் நாள்தோறும் எண்ணற்ற படங்கள் (movies) வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எம்.ஜி. ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி என எண்ணற்ற நடிகர்கள் வலம் வருகின்றனர். தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் குறித்து விரிவாக காணலாம்.

1.. காதல் படங்கள் (Romantic Movies)

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த காதல் படங்களில் (movies) ஒன்றாகும். ஷாலினிக்கு மாதவனுக்கும் இது தான் முதல் படம். இளைஞர்களின் மாதவன் சாக்லெட் பாயாக தெரிய இந்த படம் தான் முக்கிய காரணம். இருவருக்கும் இடையேயான காதலை மிக அழகாக இப்படம் வெளிப்படுத்தியிருக்கும்.

இயக்குனர் – மணிரத்னம்

நடிகர், நடிகைகள் – மாதவன், ஷாலினி, விவேக்

இசை  – ஏ. ஆர் ரகுமான்

ரேட்டிங் – 8.3/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும். 

அலை பாயுதே ( Alai payuthey)

எஸ். ஜே. சூர்யாவின் முதல் காதல் திரைப்படமான (movies) இந்த படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். ஈகோவை தாண்டி இருவரின் காதல் வெற்றி பெற்றதை இந்த படத்தில் அழகாக காட்டியிருப்பார்கள். விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முதல் திரைப்படம் இது.

கலக்கலான போட்டியாளர்களால் களை கட்டும் பிக்பாஸ் வீடு !

இயக்குனர் – எஸ். ஜே. சூர்யா

நடிகர், நடிகைகள்- விஜய், ஜோதிகா, மும்தாஜ்  

இசை  – தேவா

ரேட்டிங் – 7.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

குஷி (kushi)

விண்ணை தாண்டி வருவாயா கவுதம் மேனன் இயக்கிய காதல் காவியம் என்றே சொல்லலாம். இந்த படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிம்பு மற்றும் த்ரிஷா இடையேயான காதலை நேர்த்தியாகவும், இயல்பாகவும் இயக்குனர் கவுதம் மேனன் காட்டியிருப்பார்.

இயக்குனர் – கவுதம் மேனன்

நடிகர், நடிகைகள் – சிம்பு , த்ரிஷா, விடிவி கணேஷ்

இசை  – ஏ. ஆர் ரகுமான்

ரேட்டிங் – 8.0/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

விண்ணை தாண்டி வருவாயா (Vinai thandi varuvaya)

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான மற்றொரு காதல் படமான இந்த படத்தில் மாதவன் மற்றும் ரோம சென் காதல் காட்சிகளில் அற்புதமாக கட்டியிருந்தனர். நெஞ்சை பூப்போலே கொய்த்தாயே என பாடி அனைத்து பெண்களின் மனதையும் வென்றார் மாதவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த வசீகரா பாடல் இன்றைய இளசுகளின் விருப்ப பாடலாக இருந்து வருகிறது.

கலகலப்பாக நடந்த நடிகை சமீரா ரெட்டியின் சீமந்தம் : கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

இயக்குனர் – கவுதம் மேனன்

நடிகர், நடிகைகள் – மாதவன், ரீமா சென், விவேக்

இசை  – ஹாரிஸ் ஜெயராஜ்

ரேட்டிங் – 7.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

மின்னலே (Minnale)

இந்த திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நயன்தாராவிற்கு பெறும் வரவேற்பு கொடுத்தது. அட்லீ இயக்கத்தில் வெளியான முதல் படமான இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. காதல் தோல்விக்கு பிறகும் ஒரு அழகான வாழ்க்கை இருப்பதை இந்த படத்தில் (movies) வித்தியாசமாக கட்டியிருப்பார்கள். நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ராஜா ராணி படத்திற்கு விருது கிடைத்தது.

இயக்குனர் – அட்லீ

நடிகர், நடிகைகள் – ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா

இசை  – ஜி. வி. பிரகாஷ் குமார், ஆர்.டி.பர்மன்

ரேட்டிங் – 7.6/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ராஜா ராணி (Raja Rani)

தெலுங்கு திரைப்படமான நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டா என்ற படத்தை தமிழில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா இயக்கினார். இந்த படத்தில் த்ரிஷா கிராமத்து பெண்ணாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நடிகர் ஜெயம் ரவி, த்ரிஷா தங்களது காதலை காட்சிகளில் இயல்பாக நடித்திருப்பார்கள்.

இயக்குனர் – மோகன் ராஜா

நடிகர், நடிகைகள் – ஜெயம்  ரவி, த்ரிஷா, பிரபு, பாக்கியராஜ்

இசை  – தேவி ஸ்ரீ பிரசாத்

ரேட்டிங் – 6.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

உனக்கும் எனக்கும் (Something Something)

மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் காதல் வாழ்க்கையை வித்தியாசமாக கட்டியிருப்பார்கள். திருமணம் ஆகாமல் லிவிங் டு கெதர் முறையில் வாழும் இளைஞர்கள் குறித்தது இந்த படமாகும். மலையாள நடிகர் துல்கர் சல்மான், நித்யா மேனனும் உண்மையான காதலர்கள் போலவே இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.

இயக்குனர் – மணி ரத்னம்

நடிகர், நடிகைகள் – துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ்

இசை  – ஏ. ஆர். ரஹ்மான்

ரேட்டிங் – 7.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஓ காதல் கண்மணி (OK Kanmani)

என். கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். சூர்யாவும், பூமிகாவும் காதலித்து பிரியவே பின்னர் ஜோதிகாவுடன் திருமணம் நடைபெறும். எதிரும், புதிருமாக இருக்கும் இவர்கள் பின்னர் கததிப்பதே கதை. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் முன்பே வா அன்பே வா பாடல் எவர் கிரீன் பாடலாக உள்ளது.

இயக்குனர் – என். கிருஷ்ணா

நடிகர், நடிகைகள் – சூர்யா, ஜோதிகா, பூமிகா

இசை  – ஏ. ஆர். ரஹ்மான்

ரேட்டிங் – 6.9/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சில்லுனு ஒரு காதல் (Sillunu Oru Kadhal)

அறிமுக இயக்குனர் இளன் இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காதல் நிறைந்த திரைப்படமான இந்த படத்தில் இருவரும் நன்றாக நடித்திருந்தனர் என்று செல்வதை விட, இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர் என்றே கூறலாம். காதலர்களுக்கு இடையேயான ஈகோ, பிரிவை கலகலப்பாக இயக்குனர் சொல்லி இருப்பார்.

இயக்குனர் – இளன்

நடிகர், நடிகைகள் – ஹரிஷ் கல்யாண், ரைசா

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 6.6/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பியார் பிரேமா காதல் (Pyar Prema Kadhal )

இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். த்ரிஷாவிற்கு இந்த படம் மீண்டும் ஒரு பிரமாண்ட வரவேற்பை கொடுத்துள்ளது. பிரேம் குமார் இயக்கிய இந்த படம் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது. 96 படத்தை பார்த்த அனைவருக்குமே அவர்களது முதல் காதலின் ஞாபகம் வந்து சென்றது நிதர்சமான உண்மை. கோவிந்த் மேனன் இடையில் காதலே காதலே பாடல் மற்றும் பின்னணி இசை மனதை வருடி செல்கிறது.

இயக்குனர் – சி. பிரேம் குமார்

நடிகர், நடிகைகள் – விஜய் சேதுபதி, த்ரிஷா

இசை  – கோவிந்த் மேனன்

ரேட்டிங் – 8.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

96

2. நகைச்சுவை படங்கள் (Comedy Movies)

சூர்யாவும், விஜய்யும் இணைந்து நடித்த முதல் படமாகும். விஜய்க்கு ஜோடியாக தேவையாணி நடித்திருப்பார். படத்தில் வடிவேலு காமெடி சிறப்பாக இருக்கும். நேசமணி என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு தனது காமெடியை கலாட்டாவாக செய்திருப்பார். சமீபத்தில் கூட பிரே போர் நேசமணி என்ற ஹாஸ்டேக் சமீபத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் – சித்திக்

நடிகர், நடிகைகள் – விஜய், சூர்யா, தேவையாணி, வடிவேலு

இசை  – இளையராஜா

ரேட்டிங் – 7.5/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ப்ரெண்ட்ஸ் (Friends)

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான காமெடி படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா, மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். காமெடி நடிகனாக சந்தானம் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருப்பார். ஆர்யா, சந்தானம் இணைந்த காட்சிகள் ரசிக்கும் வகையில் இருக்கும். மேலும் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரனும் இந்த படத்தில் நடித்திருப்பார்.

இயக்குனர் – ராஜேஷ்

நடிகர், நடிகைர்கள் – ஆர்யா, நயன்தாரா, சந்தானம்

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 7.3/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பாஸ் என்கிற பாஸ்கரன் (Boss Engira Baskaran)

மணிகண்டன் இயக்கத்தில் காமெடி திரைப்படமான இந்த படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேது ஆகியோர் நடித்திருந்தனர். காமெடிக்கு பஞ்சம் இல்லாத வகையில் படம் ஆரம்பத்தில் இருந்து இருந்து வரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் காம்பினேஷன் ஒவ்வொரு காட்சிக்கும் சிரிக்க வைத்தனர். விசாகா சிங்கை மூன்று பேறும் காதலிப்பதே கதை.

ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!

இயக்குனர் – மணிகண்டன்

நடிகர், நடிகைர்கள் – சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங், சேது

இசை  – எஸ். தமன்

ரேட்டிங் – 5.5/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா (Kanna Laddu Thinn Aasaiya)

ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை. ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, சினேகா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி கோவாவிற்கு சென்று காதலிப்பதை காமெடியாக கட்டியிருப்பார்கள்.

இயக்குனர் – வெங்கட் பிரபு

நடிகர், நடிகைர்கள் – ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ்,பிரேம்ஜி  

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 6.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கோவா (Goa)

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மற்றொரு காமெடி படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்தில் உதயநிதியும், அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மற்றும் அவரது அம்மாவாக சரண்யா நடித்திருப்பார். உதயநிதி, சந்தானம் இடையிலானா அனைத்து காட்சிகளிலும் காமெடியாக கட்டியிருப்பர். மேலும் மதுபாபாலா சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து காமெடி செய்திருப்பார். இந்த படத்தில் இருந்து தான் அவரது ரசிகர்கள் ஜாங்கிரி என அவரை அழைக்க தொடங்கினர்.

இயக்குனர் – ராஜேஷ்

நடிகர், நடிகைர்கள் – உதயநிதி, சந்தானம், ஹன்ஷிகா

இசை  – ஹாரிஸ் ஜெயராஜ்

ரேட்டிங் – 6.2/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி (Oru Kal Oru Kanadi)

விஜய் சேதுபதிக்கு திருமணம் நடக்க இரண்டு நாட்கள் இருக்கும் போது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் போது கால் தவறி கீழே விழுந்து அவருக்கு பின் மண்டையில் அடிபட்டுகிறது. அதனால் தற்காலிக மறதி ஏற்படுகிறது. இந்த மறதியால் ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி இருப்பார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். படத்தில் ப்பா யார்டா இந்த பொண்ணு என்கிற வசனம் அனைவராலும் பேசப்பட்டது.

இயக்குனர் – பாலாஜி தரணீதரன்

நடிகர், நடிகைர்கள் – விஜய் சேதுபதி, காயத்ரி, விக்னேஸ்வரன்

இசை  – வேத் சங்கர், சித்தார்த் விபின்

ரேட்டிங் – 8.2/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (Naduvula Konjam Pakkatha Kanom)

வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக முதன் முதலாக நடித்த இந்த திரைப்படத்தினை சிம்புதேவன் இயக்கியுள்ளார். வடிவேலு இந்த படத்தில் அரசனாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நாசர், ஸ்ரீமன், இளவரசு, மோனிக்கா, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் – சிம்பு தேவன்

நடிகர், நடிகைர்கள் – வடிவேலு, நாசர், மனோரமா  

இசை  – சபேஷ் சொக்கலிங்கம், முரளி சொக்கலிங்கம்

ரேட்டிங் – 7.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி (Imsai Arasan 23m Pulikesi)

ஜெர்மன் திரைப்படமான சோல் கிட்சென் என்ற திரைப்படத்தை தழுவி சுந்தர். சி இந்த படத்தை தயாரித்தார். மசாலா கஃபே என்று முதலில் பெயரிடப்பட்டு பின்னர் கலகலப்பு என மாற்றப்பட்டது. விமல், சிவா, அஞ்சலி  மற்றும் ஓவியா ஆகியோர் இணைந்து நடித்தனர் என்று சொல்வதை விட ஒரு காமெடியான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்றே கூறலாம்.

இயக்குனர் – சுந்தர் .சி

நடிகர், நடிகைர்கள் – விமல், சிவா, அஞ்சலி  

இசை  – விஜய் எபினேசர்

ரேட்டிங் – 6.9/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கலகலப்பு (Kalakalappu)

தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து தில்லுக்கு துட்டு 2 படத்தை ராம் பாலா இயக்கினார். ரத்தானம், மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷனில் உருவான இந்த படம் நல்ல ஹிட்டை கொடுத்தது. பேயின் பிடியில் இருக்கும் ஹீரோயினை காப்பாற்றுவதை நான் ஸ்டாப் காமெடி கலாட்டாவாக காட்டியிருப்பார்கள்.

இயக்குனர் – ராம்பாலா

நடிகர், நடிகைர்கள் – சந்தானம், ஸ்ரீதா சிவதாஸ், ராஜேந்திரன்

இசை  – சபீர்

ரேட்டிங் – 5.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

தில்லுக்கு துட்டு 2 (Dhilluku Dhuddu 2)

அரசியல் நிகழ்வுகளையே வெளிப்படியாக கிண்டலடித்தும், விமர்சித்தும் இயக்குனர் பிரபு படத்தை எடுத்துள்ளார். தாடி பாலாஜி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். அவரின் காமெடிகள் ஆரம்பத்தில் சிரிக்கும் வகையிலும் பின்னர் சிந்திக்கும் வகையிலும் இருக்கும். மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கான படமாக அமைந்தது.

இயக்குனர் – கே. ஆர். பிரபு

நடிகர், நடிகைர்கள் – தாடி பாலாஜி, ப்ரியா ஆனந்த்

இசை  – லியோன் ஜேம்ஸ்

ரேட்டிங் – 7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

எல்.கே.ஜி (LKG)

3. குடும்ப படங்கள் ( Family Movies)

பாபநாசம் திரைப்படத்தில் கேபிள் டிவி நடத்துபவராக கமலஹாசன் நடித்துள்ளார். அவரது மனைவியாக கவுதமி மற்றும் இரண்டு மகள்கள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள். மூத்த மகளான நிவேதா தாமஸ் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டி அது கொலையில் முடிவது குறித்து கதையை கட்டியிருப்பார்கள்.

இயக்குனர் – ஜீத்து ஜோசப்

நடிகர், நடிகைர்கள் – கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ்

இசை  – மொஹமட் கிப்ரான்

ரேட்டிங் – 8.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பாபநாசம் (Papanasam)

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படமான இந்த படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். விக்ரமிற்கும் அவரது காதல் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. விக்ரமனின் மனைவி இறந்து விடவே குழந்தையை வளர்க்கும் பொறுப்புக்கு விக்ரமிற்கு வருகிறது. ஜி. வி. பிரகாஷ் இசையில் தந்தை பாடும் தாலாட்டு பாடலாக ஆரிரோ ஆராரிரோ பாடல் ஒலிக்கிறது.

இயக்குனர் – ஏ. எல். விஜய்

நடிகர், நடிகைர்கள் – விக்ரம், சாரா, அனுஷ்கா

இசை  – ஜி. வி. பிரகாஷ் குமார்

ரேட்டிங் – 8.2/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

தெய்வ திருமகள் (Deiva Thirumagal)

மகள் மீது அதீத பாசம் கொண்ட  ராம், மகளுக்குகாக குறைவான சம்பளத்தில் உள்ளூரில் வேலை பார்க்கிறார். தந்தை மீதுள்ள பாசம் காரணமாக குளத்தில் மூழ்கி தங்கமீனாய் மாறவும் தயாராகும் மகள் செல்லம்மா. இந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் தான் தங்க மீன்கள் திரைப்படம். யுவன் இசையில் ஆனந்த யாழை பாடல் நெகிழ  வைக்கிறது.

இயக்குனர் – ராம்

நடிகர், நடிகைர்கள் – ராம், சாதனா, செல்வி

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 7.9/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

 

தங்க மீன்கள் (Thanga Mengal)

2019ம் ஆண்டில் டாப் வசூல் படங்களில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒன்று. அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவா தான் இந்த படத்தையும் இயக்கினார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, மாடர்னாகவும், முக்குத்தி, புடவை என கிராமத்து பெண்ணாகவும் அழகாக நடித்திருப்பார். இந்த படத்தில் கண்ணான கண்ணே பாடல் ரசிங்கர்களை வெகுவாக கவர்ந்தது.

இயக்குனர் – சிவா

நடிகர், நடிகைர்கள் – அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர்  

இசை  – டி. இமான்

ரேட்டிங் – 6.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

விஸ்வாசம் (Viswasam)

கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான குடும்ப படமாகும். அண்ணா, அக்கா, மாமன், மச்சான், முறைப்பெண் என இந்த கால தலைமுறையினர் பார்க்காத ஒரு பாசமான குடும்ப கதையை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கார்த்திக்கு இரண்டு முறைப்பெண்கள் இருக்கும் நிலையில் அவர் ஆயிஷாவை காதலிப்பார். இறுதியில் யாரை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பதை குடும்ப கதையாக கட்டியிருப்பார்கள். மேலும் இந்த படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் – பண்டிராஜ்

நடிகர், நடிகைர்கள் – கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், சாயிஷா  

இசை  – டி. இமான்

ரேட்டிங் – 7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam)

அப்பா, மகள் இடையிலான அளவில்லாத பாசமும், அவர்களது பிரிவுமே அபியும் நானும் திரைப்படம். பிரகாஷ் ராஜ் அப்பாவாகவும், த்ரிஷா மகளாகவும் நடித்திருப்பார்கள். அம்மாவாக நடிகை ஐஸ்வர்யா தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். படத்தின் முதல் பாதி ஒவ்வொரு கட்சிக்கும் தந்தை, மகள் பாசமும் இரண்டாம் பாதியில் த்ரிஷாவின் காதல், கல்யாணம் என்று நகரும்.

இயக்குனர் – ராதா மோகன்

நடிகர், நடிகைர்கள் –  பிரகாஷ் ராஜ், த்ரிஷா

இசை  – வித்யாசாகர்

ரேட்டிங் – 7.6/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

அபியும் நானும் (Abiyum Nanum)

அன்பு, பாசம் கொண்ட செட்டிநாடு நகரத்தாரின் கூட்டு குடும்ப வாழ்க்கை கதையே சைவம் திரைப்படம். பேபி சாரா முக்கிய கதாத்திரத்தில் நடித்திருப்பார். நாசர் குடும்ப தலைவராக இருப்பார். சாமிக்கு வேண்டிய சேவல் தொலைந்து விடவே அதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் சேவல் கிடைத்ததா என கூறுவதே கதை.

இயக்குனர் – ஏ. எல். விஜய்

நடிகர், நடிகைர்கள் –  

இசை  – ஜி. வி. பிரகாஷ் குமார்

ரேட்டிங் – 6.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

சைவம் (Saivam)

விஜய் ஆண்டனி ஒரு பணக்கார குடுமப்பத்தை சேர்ந்தவராவர். அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரை காப்பாற்ற 48 நாட்கள் விஜய் ஆண்டனி சாமியார் ஒருவர் அறிவுறுத்தலின் படி துறவு வாழ்க்கை வாழ்கிறார். தன் அம்மாவிற்காக பிச்சைக்காரனாக வாழ்கிறார். ஒரு பிச்சைக்காரனாக தன்னை தயார்படுத்தி பிச்சை எடுக்கையில், பல பேரின் மூலம் இவருக்கு இன்னல்கள் வருகின்றது. விஜய் ஆண்டனியின் வேண்டுதல் நிறைவேறி அவருடைய அம்மா குணமானாரா என்பதே கதை. விஜய் ஆண்டனி இசையில் நூறு சாமிகள் இருந்தாலும் பாடல் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் – சசி

நடிகர், நடிகைர்கள் –  விஜய் ஆண்டனி, சட்னா தித்டசு

இசை  – விஜய் ஆண்டனி

ரேட்டிங் – 7.6/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பிச்சைக்காரன் (Pichaikaran)

விமல், அனந்தி இருவரும் பெரிய குடும்பத்து பிள்ளைகள். இருவரும் காதலிக்கவே அவர்களது திருமணம் நடந்ததா என்பதே கதை. சரண்யா குரும்பு கலந்த நடிப்போடு தாய் பாசத்தை கட்டியிருப்பார். இந்த படத்தில் ஊர் தலைவராக பிரபு நடித்திருப்பார்.

இயக்குனர் – பூபதி பாண்டியன்

நடிகர், நடிகைர்கள் – விமல், பிரபு, கயல் ஆனந்தி, சரண்யா

இசை  – ஜேக்ஸ் பேஜோய்

ரேட்டிங் – 5.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

மன்னர் வகையறா (Mannar Vaigaiyara)

இந்த படத்தில் ஐந்து அக்காக்களுக்கு தம்பியாக கவுதம் கார்த்திக் நடித்திருப்பார். ஐந்து பேறும் தம்பியாக நினைக்காமல் மகனாகவே நினைத்து வளர்க்கின்றனர். அக்கா, மாமா, அக்கா மகள் என சென்டிமென்டிற்கு பஞ்சமில்லை. பெண்களை பாதுகாப்பதே ஆண்களின் நேரம் என்ற வசனத்தை இயக்குனர் முத்தையா படத்தில் முன் வைக்கிறார்.

இயக்குனர் – முத்தையா

நடிகர், நடிகைர்கள் –  கவுதம் கார்த்தி, மஞ்சிமா மோகன், சூரி

இசை  – நிவாஸ் பிரசன்னா

ரேட்டிங் – 4.1/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

தேவராட்டம் (Thevarattam)

4. அக்க்ஷன் படங்கள் (Action Movies)

வழக்கமான போலீஸ், தாதா திரைக்கதையை வித்யாசமான முறையில் விறுவிறுப்பாக கட்டியிருப்பார்கள். மாதவன் போலீசாகவும், அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா நடித்திருப்பார். விஜய் சேதுபதி தாதாவாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருப்பார்.

இயக்குனர் – புஷ்கர், காயத்ரி

நடிகர், நடிகைர்கள் – மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா

இசை  – சாம்

ரேட்டிங் – 8.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

விக்ரம் வேதா (Vikram Vedha)

அஜித் குமார், த்ரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா என ஒரு திரை பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. அஜீத் குமாரின் 50வது படமான இந்த படம், பில்லா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. சிறப்பு புலனாய்வு அதிகாரியான அர்ஜுன், ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை தெரிந்து கொண்டு, மும்பையில் தன் குழுவுடன் களமிறங்குகிறார். அஜித், மகத் உள்ளிட்ட பலர் அதனை அபகரிக்க திட்டமிடுகின்றனர். இறுதியில் பணம் யாருக்கு சென்றது என்பது தான் கதை.

இயக்குனர் – வெங்கட் பிரபு

நடிகர், நடிகைகள் –  அஜித், அர்ஜுன், த்ரிஷா

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 7.5/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

மங்காத்தா (Mankatha)

அருண் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். ஒருவர் என்ஜினீயராகவும், மற்றொருவர் திருடனாகவும் நடித்திருப்பார். இதனிடையே ஒரு கொலையில் இருவரும் சிக்க யார் கொலையாளி என்ற விசாரணையில் கதை விறுவிறுப்பாக நகர்கிறது. கேஸை விசாரிக்கும் பெண் போலிஸாக வித்யா ப்ரதீப் ரசிகர்களை கவர்கிறார்.

இயக்குனர் – மகிழ் திருமேனி

நடிகர், நடிகைகள் –  அருண் விஜய், தான்யா ஹோப்

இசை  – அருண் ராஜ்

ரேட்டிங் – 8.3/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

தடம் (Thadam)

ஏ. ஆர்.  முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ளார். இராணுவத்தில் வேலை செய்யும் விஜய் விடுமுறைக்கு வந்த போது வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

இயக்குனர் – ஏ.ஆர். முருகதாஸ்

நடிகர், நடிகைகள் –  விஜய், காஜல் அகர்வால்

இசை  – ஹாரிஸ் ஜெயராஜ்

ரேட்டிங் – 7.9/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

துப்பாக்கி (Thuppakki)

இந்த படத்தில் சூர்யா போலீசாக நடித்திருப்பார். வில்லனான பிரகாஷ் ராஜ் ஒரு பிரச்சனையில் சூர்யாவின் ஸ்டேஷனில் கையெழுத்திட உத்தரவிட நிலையில் அவருக்கு பதிலாக மற்றொருவர் வந்து கையெழுத்து போடுகிறார். இதனை எதிர்த்த சூர்யா பிரகாஷ்ராஜை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னையில் இருந்து நெல்லை வர வைக்கிறார். இதற்கு பிரகாஷ் ராஜ் பழிவாங்குவதே படம். சூர்யா போலீசாக அதிரடியாக நடித்திருப்பார்.

இயக்குனர் – ஹரி

நடிகர், நடிகைகள் –  சூர்யா , அனுஷ்கா, பிரகாஷ் ராஜ்  

இசை  – தேவி ஸ்ரீ பிரசாத்

ரேட்டிங் – 6.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சிங்கம் (Singam)

இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனே எழுதி, இயக்கியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். கமலஹாசன் கதக் கலை நிபுணராக இருப்பார். பூஜா குமார் தன் கணவரான கமல் குறித்து துப்பற்றி ஒருவனை நியமிக்கிறார். பின்னர் ஜிஹாதி தீவிரவாதிகளிடம் அவர்கள்  சிக்கிக்கொள்கின்றனர். அங்கிருந்து எவ்வாறு தப்பி செல்கின்றனர். என்ன நடந்தது என்பதை விறுவிறுப்புடன் கட்டியிருப்பார்கள்.

இயக்குனர் – கமல்ஹாசன்

நடிகர், நடிகைகள் –  கமல்ஹாசன் , ஆண்ட்ரியா, பூஜா குமார்

இசை  – ஷங்கர் எஹசான் லாய்

ரேட்டிங் – 8.3/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

விஸ்வரூபம் (Vishwaroopam)

கெமிக்கல் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டதற்கு மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் கெமிக்கல் பேக்ட்ரி ஒன்றில் வேலைக்கு சேர்கின்றனர். அப்போது விஜயகுமார் நண்பர் ஒருவர் கெமிக்கல் தாக்கி உயிர் இறக்கின்றார். இது போல் மேலும் உயிரிழப்புகளை வேண்டும் என விஜயகுமார், சுதாகர் நடத்தும்உணர்ச்சி போராட்டம் தான் உறியடி2.

இயக்குனர் – விஜயகுமார்

நடிகர், நடிகைகள் –  விஜயகுமார், சுதாகர், விஸ்மயா

இசை  – கோவிந்த் மேனன்

ரேட்டிங் – 7.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

உறியடி 2 (Uriyadi 2)

இளமையான ரஜினியை இனி பார்க்க முடியாத என ஏங்கி தவித்த ரசிகர்களுக்காக கார்த்திக் சுப்பாராஜ் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் ஸ்டைல், மேனரிசம், பன்ச் என அனைத்தையும் அனைவரையும் கவரும் வகையில் படத்தில் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் ஹாஸ்டல் வார்டனாக காட்டி பின்னர் தாதாவாக ரஜினி தனது கதாபாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ்

நடிகர், நடிகைகள் –  ரஜினி, த்ரிஷா,சிம்ரன், விஜய் சேதுபதி

இசை  – அனிருத்

ரேட்டிங் – 7.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பேட்ட (Petta)

எம். ராஜாவின் இயக்கத்தில் வெளியான அதிரடியுடன், திகில் கலந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரீமேக் படங்களின் ராஜா என விமர்சிக்கப்பட்ட மோகன் ராஜா, முதல் முறையாக தன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டோடு தனி ஒருவனாக வந்து அதிரடியாக படத்தை வெற்றி பெற செய்துள்ளார். சமூகத்தில் குற்றம் செய்யும் பலரை, ஐபிஎஸ் பயிற்சி முடித்த ஜெயம் ரவியும் அவர் நண்பர்களும்சட்டத்தின் முன் நிறுத்துவதே கதை. மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்சன் த்ரில்லர் படம் என்றால் அது தனி ஒருவன்தான் என்றால் அதில் மிகையில்லை.

 இயக்குனர் – மோகன் ராஜா

நடிகர், நடிகைகள் –  ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா

இசை  – ஹிப்ஹாப் தமிழா ஆதி

ரேட்டிங் – 8.5/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

தனி ஒருவன் (Thani Oruvan )

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் தான் செக்க சிவந்த வானம் படம். பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா,  விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. கேங்ஸ்டர் அப்பா பிரகாஷ் ராஜ், அவருக்கு மூன்று மகன்கள். பிரகாஷ் ராஜ் இறந்து விடவே தந்தையின் இடத்தை பிடிக்க மகன்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை இரத்தமும் சதையுமாக சொல்கிறது செக்கச் சிவந்த வானம்.

இயக்குனர் – மணி ரத்னம்

நடிகர், நடிகைகள் –  விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அர்விந்த் சுவாமி, ஐஸ்வர்யா ராஜேஷ்

இசை  – ஏ. ஆர். ரஹ்மான்

ரேட்டிங் – 7.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும். 

செக்க சிவந்த வானம் (Checkka Chivantha Vaanam)

5 . கதை சார்ந்த திரைப்படங்கள் (Story Based Movies)

பேரன்பு படத்தின் மூலம் 12 வருடத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் மம்மூட்டி. அவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் மகளாக தங்க மீன்கள் படத்தில் சிறுமியாக நடித்த சாதனா நடித்துள்ளார். முடக்குக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவராக தனது இடத்தை சரியாக நிரப்பியுள்ளார். அஞ்சலி, மம்முட்டியை விட்டு பிரிந்து செல்லவே சாதனைவை அவர் எப்படி வளர்க்கிறார் என்பதே கதை. மேலும் மாற்றுத் திறனாளியான ஒரு பெண் குழந்தையின் பருவ வளர்ச்சி, தந்தையை அணு அணுவாய்ப் பிளந்து பார்ப்பதும், அந்தத் தந்தையோ, குழந்தையின் வளர்ச்சியை அன்பால் நிரப்பி அழகு பார்ப்பதுதான், பேரன்பு தரிசனம்.

இயக்குனர் – ராம்

நடிகர், நடிகைகள் –  மம்முட்டி, அஞ்சலி, சாதனா

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 9.4/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பேரன்பு (Perambu)

வாடகைக்கு வீடு தேடும் ஒரு குடும்பத்தின் அவல நிலை குறித்து விலகி இருப்பதே டுலேட். சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ், மனைவி ஷீலா, மகன் தருண் வசித்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இந்த படம் நேஷனல் பிலிம் அவார்ட் பெற்றுள்ளது.

இயக்குனர் – செழியன்

நடிகர், நடிகைகள் –  சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார்  

ரேட்டிங் – 8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

டுலெட் (To let)

பல வருடங்களாக குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே அடைபட்டுக்கொண்டிருக்கும் ஓர் இசையை, அந்த இசையின் கருவியை அதே பல காலமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒருவரது மகன், அதன் சர்வத்தையும் கற்று, தாளமயத்தோடு வாசிக்க ஆசைப்படுவதுதான் சர்வம் தாளமயம். மிருதங்கம் செய்யும் ஜி.வி . பிரகாஷ் பல்வேறு தடைகள் தாண்டி எப்படி இசையமைப்பாளர் ஆகிறார் என்பதை மையமாக வைத்து படத்தை காட்டியிருப்பார்கள்.

இயக்குனர் – ராஜிவ் மேனன்

நடிகர், நடிகைகள் –  ஜி. வி. பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு

இசை  – ஏ. ஆர். ரஹ்மான்

ரேட்டிங் – 7.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சர்வம் தாளமயம் (sarvam thaala mayam)

டாய்லட் கட்டுவதில் கூட கொள்ளை நடைபெறுவதை சுட்டிக்காட்டி இந்த படத்தை இயக்குனர் ராஜு எடுத்துள்ளார். அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் தான் வாழ்க்கையில் பட்டு வரும் துயரத்தை, பிறர் படக்கூடாது என போராடும் சற்றே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனின் கதையே ஜோக்கர். படத்தில் நடித்த யாரும் நடிகர்களாய்த் தெரியவில்லை என்பதுதான் சிறப்பு. குரு சோமசுந்தரம், ராமசாமி, பவா செல்லத்துரை, ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா என மொத்த நடிகர் குழுவுக்கும் தங்களது கதாபாத்திரங்களில் திறமையாக நடித்திருந்தனர்.

இயக்குனர் – ராஜு முருகன்

நடிகர், நடிகைகள் –  குரு சோமசுந்தரம் , ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணன்

இசை  – சீன் ரோல்டன்

ரேட்டிங் – 8.5/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஜோக்கர் (Joker)

இந்த படத்தில் தமன்னா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அரசியல் காரணத்தினால் ஒரு கல்லூரி பேருந்தை கொளுத்தியதில் 3 மாணவிகள் உயிரிழந்த உண்மை சமபவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் – பாலாஜி சக்திவேல்

நடிகர், நடிகைகள் – தமன்னா  

இசை  – ஜோசுவா ஸ்ரீதர்

ரேட்டிங் – 7.3/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கல்லூரி (Kalloori )

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் சிக்கல்களை ஒரு காதல் கதையின் ஊடாக அலசுகிறது. பெண்கள், இளைஞர்களுக்கு இந்தப் படம் சொல்லும் எச்சரிக்கை செய்திகள் ஏராளம். நடிகர் ஸ்ரீ இந்த படத்தில் மிகவும் எதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் – பாலாஜி சக்திவேல்

நடிகர், நடிகைகள் –  ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி

இசை  – பிரசன்னா

ரேட்டிங் – 8.2/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

வழக்கு என் 18/9 (Vazhakku en 18/9)

சூப்பர் ஸ்டார் நயன்தாரா சோலோ ஹீரோயினாக மாயா, டோரா படத்தை தொடர்ந்து அறம் படத்திலும் மிரட்டியுள்ளார். இந்தியாவில் ஆழ்துளை கிணற்றால் பல குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் கணக்கில் வந்தது ஒரு சில தான், ரூ. 800 கோடி செலவில் ராக்கேட் விடும் நாம், இன்னும் ஆழ்துளையில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கையிறை பயன்படுத்துகின்றோம் என்பதை மையமாக வைத்து படத்தை அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். ராமசந்திரன் அவருடைய மனைவி மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் தங்களது எதார்த்தமான நடப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் – கோபி நயினார்

நடிகர், நடிகைகள் –   நயன்தாரா, ரமேஷ், விக்னேஷ்

இசை  – முகமது ஜிப்ரான்

ரேட்டிங் – 7.9/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும். 

அறம் (Aram)

மகளிர் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி இந்த படம் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பிளேயர்ராகவும், அவரது அப்பா சத்யராஜ் விவசாயியாவும் நடித்துள்ளனர். இரண்டிலும் இருக்கும் பிரச்னைகளை அழுத்தமாக இயக்குனர் கூறியுள்ளார். விவசாயிகளின் இன்றய நிலைமை அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதால் கனா படம் மக்களுக்கான ஒரு செய்தித் திரைப்படம் போல் அமைந்துள்ளது. மேலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம்.சுகந்த் இந்த படத்தினைப் பிரசித்திபெற்ற விளையாட்டுப் படமாக மேற்கோள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் – அருண்ராஜா காமராஜ்

நடிகர், நடிகைகள் –  ஐஸ்வர்யா ராஜேஷ், சிவ கார்த்திகேயன், சத்யராஜ்

இசை  – திபு நினன் தாமஸ்

ரேட்டிங் – 8.1/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

Kanaa (கனா)

நம் நாட்டில் பணம் படைத்தவர்களுக்கு விளையாட்டுத் துறையும் விலை போதும் விபரீதத்தை எடுத்துரைக்கும் விறுவிறுப்பான திரைப்படம் தான் எதிர் நீச்சல்.  விளையாட்டு வீராங்கனையான ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நந்திதா சிலரின் சூழ்ச்சியால் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற முடியாமல் போகிறது. அதை அறிந்த சிவ கார்த்த்திகேயன் அவரிடம் பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவதே கதை.

இயக்குனர் – ஆர்.எஸ் துரை செந்தில்குமார்

நடிகர், நடிகைகள் –  சிவா கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், சதீஸ்

இசை  – அனிருத் ரவிச்சந்தர்

ரேட்டிங் – 6.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

எதிர் நீச்சல் (Ethir Neecha)

காவல் துறையின் உதவியுடனேயே ஆதாரம் இல்லை எனக் குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க முடியாத காவல் துறை அதிகாரி ஒருவர், பணியில் இருந்து விலகி அதே பாணியில் ஆதாரம் இல்லாமல் அத்தனைபேரையும் தண்டிப்பதே அடங்க மறு. ஐ.பி.எஸ் கனவோடு இருக்கும் கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடடித்துள்ளார். வில்லனின் மகனை அவர் கைது செய்யவே ஜெயம் ரவியின் குடும்பத்தினரை கொலை செய்கின்றனர். அவர்களை பலி வாங்குவதே கதை.

இயக்குனர் – கார்த்திக் தங்கவேல்

நடிகர், நடிகைகள் –  ஜெயம் ரவி, ராசி கண்ணா

இசை  – சாம் சி.எஸ்.

ரேட்டிங் – 7.1/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

அடங்க மறு ( Adanga Maru)

6. பேய் படங்கள் (Horror Movies)

அருள்நிதி, `சூது கவ்வும்’ ரமேஷ் திலக், சனத், அபிஷேக், சிங்கம்புலி, மதுமிதா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சென்னையின் ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனி இப்போதும் பேய் வீடுகள், பேய் பங்களா என கூறப்பட்டு வரும் நிலையில் அதனை மையமாக வைத்து இயக்குனர் இந்த படத்தை திரிலாக எடுத்துள்ளார். அருள்நிதி அவரது நண்பர்கள், அவர்களை சுற்றிய கதையாக படம் நகரும்.

இயக்குனர் – ஆர்.அஜய் ஞானமுத்து

நடிகர், நடிகைகள் –  அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், அபிஷேக், மதுமிதா

இசை  – கெபா எரேமியா, எஸ்.சின்னா

ரேட்டிங் – 6.9/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

டிமான்டி காலனி (De Monte Colony)

ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் அடிப்படை அவரை ஹீரோ நாகா மருத்துவனையில் சேர்க்கிறார். ஆனால் அவர் உயிரிந்து நாகாவுடன் அவரது வீட்டில் ஆவியாக சுற்றி திரிகிறார். வழக்கமாக ஆக்ரோஷமான பேயாக இல்லாமல் நாகா மீது காதல் கொண்ட பேயாக இயக்குனர் காட்டியுள்ளார்.  

இயக்குனர் – மிஷ்கின்

நடிகர், நடிகைகள் –  நாகா, ப்ரயாகா, ராதாரவி

இசை  – அரோல் கோரெல்லி

ரேட்டிங் – 7.6/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

பிசாசு (Pisaasu)

நகைச்சுவை, திகில் திரைப்படமான முனி படத்தை  ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இவரே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வேதிகா குமார், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். முனி திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் – ராகவா லாரன்ஸ்

நடிகர், நடிகைகள் –  ராகவா லாரன்ஸ், வேதிகா, ராஜ்கிரண்

இசை  – பரத்வாஜ்

ரேட்டிங் – 6.3/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

முனி (Muni)

கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான பீட்சா படத்தில் விஜய் சேதுபதியும், அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனுக்கு நடித்துள்ளனர். பிட்சா விற்கும் வாலிபரின் காதல், துரோகம் ஆகியவற்றை த்ரில்லாக காட்டி இருப்பார் இயக்குனர். விஜய் சேதுபதி இரவு ஒரு மாளிகைக்கு பீட்சா அளிக்கச் செல்கிறான். அங்கு அடுத்தடுத்து கொலைகள் நிகழ்வது போலவும் அங்கு பேய்கள் உலாவுவது போலவும் குழப்பமான நிகழ்வுகள் அமைகின்றன. அந்த மாளிகையில் என்ன நடந்தது என்பதே கதை. தமிழில் முதல் முறையாக இப்படத்திலேயே 7.1 சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ்

நடிகர், நடிகைகள் –  விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன்

இசை  – சந்தோஷ் நாராயணன்

ரேட்டிங் – 8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பீட்சா (Pizza)

காதல், திகில் மற்றும் சென்டிமென்டல் படமாக டார்லிங் படத்தை இயக்குனர் சாம் அன்டன் எடுத்துள்ளார். சிருஷ்டி டாங்கே ஜி.வி. பிரகாஷை காதலித்து ஏமாற்றி விடவே அவர் தற்கொலை செய்ய முயல்கிறார். ஆனால் நிக்கி கல்ராணி அவரை ஒரு தலையாக காதலித்து தெரியவே அவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் நிக்கியை ஆவர் நெருங்கும் போதெல்லாம் அவர் உடம்புக்குள் பேய் புகுந்து மிரட்டும் படி கதை நகரும்.

இயக்குனர் – சாம் ஆன்டன்

நடிகர், நடிகைகள் –  ஜி. வி. பிகாஷ், நிக்கி கல்ராணி , சிருஷ்டி டாங்கே

இசை  – ஜி. வி. பிரகாஷ் குமார்

ரேட்டிங் -6 /10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

டார்லிங் (Darling)

திகில், திரில்லர் திரைப்படமான தியா படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீன் ஏஜில் நாக சௌரியாவை காதலிக்கும் சாய் பல்லவி எதிர்பாராவிதமாக கர்ப்பமாகிறார். அந்தக் குழந்தை பிறந்தால் இருவரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என அந்தக் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். பிறகு 5 வருடங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சாய் பல்லவியின் நினைவில் தியாவாக வாழும் அந்தக் கரு தன் உயிரிழப்புக்கு காரணமான ஒவ்வொருவராகப் பழி வாங்குவதே படத்தின் கதை.

இயக்குனர் – ஏ. எல். விஜய்

நடிகர், நடிகைகள் –  நாக ஷௌரியா, சாய் பல்லவி

இசை  – சாம் சி. எஸ்

ரேட்டிங் – 5.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

 

தியா (Diya)

சிந்து மேனனும், ஆதியும் காதலித்து வர சிந்துவின் தந்தை ஆதி போலீஸ் வேலையில் இருப்பதை காரணம் காட்டி நந்தாவிற்கு திருமணம் செய்து வைக்கிறார். சந்தேக பேர்வழியான நந்தாவிற்கு சிந்து ஏற்கனவே காதலித்து வந்தது தெரிய வரவே அவரை கொலை செய்து விட்டு அவரை தரைகுறைவாக பேசுகிறார். பின்னர் நந்தா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை சிந்து பழிவாங்குவார்.

இயக்குனர் – அரிவாசகன் வெங்கடாச்சலம்

நடிகர், நடிகைகள் – ஆதி, சிந்து மேனன்

இசை  – எஸ்.தமன்

ரேட்டிங் – 7.6/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஈரம் (Eeram)

சித்தார்த் தனது மனைவி அண்ட்ரியாவுடன் வாழ்ந்து வருகின்றார். அப்போது அவர்களுக்கு அருகில் இருந்த வீட்டில் சில அம அமானுஷியா விஷயங்கள் நடைபெறுகிறது. அந்தக் குடும்பத்துக்கு உதவிகள் செய்கிறார் சித்தார்த். அந்த வீட்டுக்குள் நிஜமாக என்ன நடக்கிறது, அதன் காரணம் என்ன, பிரச்னைகளில் இருந்து அவர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் அவள் சொல்லும் கதை.

இயக்குனர் – மிலிந்த் ராவ்

நடிகர், நடிகைகள் –  சித்தார்த், ஆண்ட்ரியா ஜெரெமையா

இசை  – கிரிஷ் . ஜி

ரேட்டிங் – 6.8/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்

அவள் (Aval)

பத்திரிகையில் பணியாற்றி வரும் நயன்தாராவிற்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார். தன் பாட்டி வீட்டுக்கு சென்று அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என பிளான் போட்ட மிகவும் பிரபலமும் ஆகிறார். ஆனால் ஒரு நிஜ பேய் அவரை கொலை செய்ய முயல்கிறது. நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில் நயன்தாரா பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள் கருப்பு வெள்ளையில் திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார், அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்க காரணம் என்ன என்பதை எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.

இயக்குனர் – சர்ஜுன் கே.எம்

நடிகர், நடிகைகள் –  

இசை  – சுந்தரமூர்த்தி கே.எஸ்

ரேட்டிங் – 4.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஐரா (Airaa)

ஹாரர் படம் எடுப்பதற்காகக் கதை தேடி வெளியூர் செல்லும் இயக்குநர் ஒருவர், அங்கு உண்மையிலே பேய்களைச் சந்திக்கிறார். அதன் பின் என்ன ஆனது, பேய்களுக்கும் இயக்குநருக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற ஒன்லைனை ஊதிப் பெரிதாக்கினால் அதுதான்  `பலூன்’ . முதல்பாதி முழுவதும் பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார். பேயைவிட யுவனின் இசையைக் கேட்கும்போதுதான் பயந்து வருகிறது. காமெடியுடன் கலந்த திகில் படமாக பலூன் படம் இருக்கிறது.

இயக்குனர் – சினிஷ் ஸ்ரீதரன்

நடிகர், நடிகைகள் –  ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர்

இசை  – யுவன் சங்கர் ராஜா

ரேட்டிங் – 4.7/10

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

பலூன் (Balloon)

7. திரைக்கு வர இருக்கும் படங்கள் (Up Coming Movies)

நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள இந்த படம் அதிரடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பிரச்னைகளால் படம் ரிலீஸ் அதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் – சக்ரி டோலெட்டி

நடிகர், நடிகைகள் –  நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன்

இசை  – யுவன் சங்கர் ராஜா

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கொலையுதிர் காலம் (Kolaiyuthir Kaalam)

இந்த படத்தில் ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக சாலினி பாண்டே நடிக்கிறார். படத்தில் கொரில்லா ஒன்றை வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். இதற்காக ஒரு கொரில்லாவை பபடக்குழு வாங்கியுள்ளனர்.

இயக்குனர் – சக்ரி டோலெட்டி

நடிகர், நடிகைகள் –  ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு

இசை  – டான் சாண்டி

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

கொரில்லா (Gorilla)

விமல், ஓவியா நடித்துள்ள தமிழ் காதல் படம். ஏற்கனவே களவாணி 1 படம் வெளியாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் – ஏ.சர்குனம்

நடிகர், நடிகைகள் –  விமல், ஓவியா

இசை  – நடராஜன் சங்கரன்

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

களவாணி 2 (Kalavani 2)

ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை படம். அஜித் இந்த படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பு பெற்றது. பெண்களுக்கு எதிராக நடைக்கும் வன்முறைகள் குறித்து படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் –  எச். வினோத்

நடிகர், நடிகைகள் –  அஜித், ஷ்ரத்தா

இசை  – யுவன் சங்கர் ராஜா

படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்.

நேர்கொண்ட பார்வை (Nerkonda Parvai)

வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இயக்குனர் –  வெற்றிமாறன்

நடிகர், நடிகைகள் –  தனுஷ், மஞ்சு வாரியார்

இசை  – ஜி. வி. பிரகாஷ் குமார்

அசுரன் (Asuran)

என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வெளியாக இருக்கும் படம் ‘காப்பான்’. மாற்றான் படத்திற்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் இது. மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். முதல் படம்‘அயன்’ஹிட்டை போல இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் –  கே.வி. ஆனந்த்

நடிகர், நடிகைகள் –  சூர்யா, மோகன்லால், ஷாயிஷா

இசை  – ஹாரிஷ் ஜெயராஜ்

காப்பான் (Kaapan)

தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படத்தின் தழுவலே 100% காதல் படம். இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். இதனால் ரொமான்ஸிற்கு பஞ்சமிருக்காது.

இயக்குனர் –  எம்.எம் சந்திரமவுலி

நடிகர், நடிகைகள் –  ஜி. வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே

இசை  – ஜி. வி. பிரகாஷ் குமார்.

100% காதல் (100% kadhal)

ஆடை படத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளதாக காட்டியுள்ளனர்.

இயக்குனர் –  ரத்ன குமார்

நடிகர், நடிகைகள் – அமலா பால்

இசை  – பிரதீப் குமார்

ஆடை (adai)

லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி இயக்க, பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இந்த படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது.

இயக்குனர் –  லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகர், நடிகைகள் – பசங்க கிஷோர், லவ்லின்

இசை  – மொஹமட் கிப்ரான்

ஹவுஸ் ஓனர் (House Owner)

அட்லீ, நடிகர் விஜய் காம்போவில் மற்றொரு படமான தளபதி 63 படம் தயாராகி வந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் பிரஸ்ட் லுக் வெளியானது. பிகில் என பெயரிட்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் –  அட்லீ குமார்

நடிகர், நடிகைகள் – விஜய், நயன்தாரா

இசை  – ஏ. ஆர். ரஹ்மான்

பிகில் (Bihil)

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Entertainment