Lifestyle

ஸ்மார்ட்டான பெண்களுக்கு தேவையான சில ஸ்மார்ட் ஆப்ஸ்!

Nithya Lakshmi  |  Sep 22, 2019
ஸ்மார்ட்டான பெண்களுக்கு தேவையான சில ஸ்மார்ட்  ஆப்ஸ்!

தற்போது கைபேசி இல்லாத ஆட்களே கிடையாது. வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, எது இருக்கிறதோ இல்லையோ கைபேசியை  கட்டயமாக எடுத்துச்செல்கிறார்கள். வெளியே மட்டுமா, வீட்டில் இருக்கும்போதும், தூங்கும்போதும்கூட 24 மணி நேரமும் நம்மோடு இருப்பது ஸ்மார்ட் போன் (smart phone). அப்படி இருக்கும் பட்சத்தில், நம் வேலைகளை எளிமையாக்கிக்கொண்டு, அன்றாட  வாழ்க்கைக்கு உதவும் சில ஆப்ஸ்/ஆப்களை (apps) இங்கே பார்க்கலாம்.

1. படிக்க வேண்டாம் கேட்க வேண்டுமா(eReader app)

இந்த ஆப்பில்(eReader Prestigio) நீங்கள் 7 விதமான புத்தகங்களை தொகுத்துக்கொள்ளலாம். நீங்கள் திரையில் பார்த்தும், புத்தகங்களை இந்த ஆப் வழியாக படிக்கலாம். எளிமையாக கையாள முடியும். உங்களுக்கு தெரியாத வார்த்தைகளுக்கு சரியான மொழிபெயர்ப்பும் கிடைக்கும். மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு அதை படிக்கச் சொல்லி(voice out) கேட்கலாம். உங்கள் கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும், புத்தகத்தையும் முடிக்க முடியும்!

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2. பிளாஷ் கார்ட்ஸ்(Flashcards app)

Pexels

நிறைய விஷயங்களை, வெவ்வேறு தலைப்புகள் கொண்ட கருத்துக்களை நியாபகம் வைத்துக்கொள்ள பிளாஷ் கார்ட்ஸ் பயன்படும். அன்கிட்ராய்டு(AnkiDroid Flashcards) என்ற பிளாஷ் கார்ட்ஸ் ஆப்பை டவுன்லோட் செய்து, நீங்கள் படிக்கும்போது/ விஷயங்களை கற்றுக்கொள்ளும் போது உருவாக்கிக்கொள்ளுங்கள். பிறகு, அலுவலக விளக்கக்காட்சிகள், மீட்டிங், நேர்காணல் தேர்வுக்கோ செல்லும்போது ஒருமுறை உங்கள் பிளாஷ் கார்ட்ஸை பார்த்து சென்றால் போதும், அத்தனையும் நினைவு வரும்.

மேலும், 6000 வகையான வெவ்வேறு தலைப்புகளில் இந்த ஆப்பில் ஏற்கனவே பிளாஷ் கார்ட்ஸ் இருக்கின்றது. அதையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3. குறிப்பு எடுத்துக்கொள்ள(handwritten/ note making app )

பேப்பர் பேனா இல்லாத தருணத்தில், குறிப்பு எடுக்க வேண்டுமென்றால் எவெர்னோட்(evernote) பயன்படுத்துங்கள். நீங்கள் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு எண்ணம், ஒரு திட்டம் தோன்றுகிறது. ஐயோ, பேப்பர் பேனா இல்லையே என்று எத்தனை முறை யோசித்திருப்பீர்கள்! இனி கவலையை விடுங்கள். இந்த ஆப் பயன்படுத்துங்கள். இனி பேப்பர் பேனாவை மறந்து விடுவீர்கள். மேலும் ,நோட்டபிலிட்டி(notability) என்ற ஆப்பில் உங்கள் கைகளாலேயே எழுதலாம். டைப் செய்வதை விட உங்களுக்கு இது வசதியாக இருந்தால் இந்த ஆப்பை பயன்படுத்தலாம்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

4. அமைதியான ஓசை(tide app)

Pexels

நீங்கள் எப்போதும் அமைதியான ஒரு சூழலில், மெல்லிய ஒரு இசை கேட்டுக்கொண்டு இருந்தால், என் மன நிலை நன்றாக இருக்கும். நான் படிப்பதாக இருந்தாலும், வேறு எந்த வேலை செய்வதாக இருந்தாலும், கூர்ந்து என்னால் செய்ய முடியும் என்று நினைத்தீர்களானால், டைட்(tide) ஆப் பயன்படுத்துங்கள். நீங்கள் வசிக்கும் இடம் சற்று இரைச்சலாக இருந்தால் கூட இது சரி செய்து விடும்.

மழையின் சப்தம், காற்றின் சப்தம், கடல் ஆலைகளின் சப்தம் என அற்புதமான சப்தங்கள் நிறைந்திருக்கும் . இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

5. டர்போஸ்கேன்(turboscan app)

இன்றைய வாழ்க்கை முறையில் எந்த நேரம் எது தேவைப்படும் என்ற உறுதியான நிலை கிடையாது. உங்களுக்கு திடீர் என உங்கள் சான்றிதழ்கள் வேண்டுமெனில், அல்லது யாருக்காவது அனுப்ப வேண்டுமெனில், இந்த ஆப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து புகைப்படமாக நொடியில் அனுப்பி விடலாம். இதனால் பல மையில் தூர பயணத்தையும், நேரத்தையும் சேமிக்கலாம்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

6. அன்றாட வேலைகளைத் திட்டமிடல்(To-do lists app)

Pexels

இந்த டு-டூ லிஸ்ட்(todoist) ஆப் மிகவும் பொதுவான ஒன்றாக ஆகிவிட்டது. உங்கள் வேலைகளைத் திட்டமிட இந்த ஆப் உங்களுக்கு உதவும். உங்கள் இலக்குகளை நிர்ணயித்து, அதை நோக்கி பயணிக்கவும், உங்கள் செயல்களை திட்டமிடவும் இந்த ஆப் ஒரு பி.ஏ. போல செயல்படும். ஒரு நாளிற்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு என உங்கள் திட்டங்களை வகைப்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு வேலைக்கும் நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துகொண்டுளீர்கள், வரும் நாட்களில் அவற்றை எப்படி கையாளுவது போன்ற திட்டமிடல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு ஆப்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

7. பெண்களுக்கான மாதவிடாய் நாட்களை குறித்துக்கொள்ள(period tracker app)

பெரும்பாலும், நம் மாதவிடாய் நாட்களை மறந்து விடுவோம். அப்படியில்லாமல், உங்களுக்கு ஒரு அலாரம் தருவது இந்த பீரியட் ட்ராக்கர்(period diary). உங்கள் சுழற்சி சரியாக இருக்கிறதா, எந்த தேதிகளில் வரக்கூடும், அப்போது நாம் என்ன திட்டமிடலாம் என்பன போன்ற ஆப்கள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்தி, எப்போதும் இதை நினைவில் கொண்டு கலங்கிக்கொண்டு  இருக்காமல், ஆப் பார்த்தாலே போதும்.இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

அல்லது, எங்கள் POPxo App பதிவிறக்கி, உங்கள் மாதவிடாயை குலாபோவுடன் கண்காணிக்கவும்!

8. பணத்தை கையாளுவதற்கு (money manager app)

Pexels

நீங்கள் தனியாக எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை இந்த மனி மேனேஜர்(money manager) ஆப்பில் குறித்துவைத்துக் கொள்ளலாம். பின் நாளில் நீங்கள் எந்த விஷயங்களுக்கு அதிகம் செலவிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு, வரும் நாட்களை திட்டமிட இந்த ஆப் உதவும். உங்கள் சேமிப்பு, வரவு, செலவு கணக்கு என்று அனைத்தையும் எளிதாக குறித்து வைத்து கொள்ள இந்த ஆப் பயன்படும்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இப்படி, பல ஆப்கள் கூகுள் பிலே ஸ்டோரில் இருக்கிறது. இவை உங்களுக்கு ஒரு அறிமுகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்களில் உங்களுக்கு எது அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து பயன்பெறுங்கள். இங்கு கொடுக்கப்பட்ட ஆப்கள் அதிக ரேட்டிங் உள்ள அப்களே. இருப்பினும் உங்களுக்கு இந்த பயன் தரக்கூடிய வேறு ஆப் அறிமுகமானால் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் இப்படி எத்தனையோ ஆப்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. நமக்கு ஏற்றவற்றை, நல்ல விமர்சனங்களைப் படித்துப்பார்த்து பின்னர் டவுன்லோட் செய்து என்ஜாய் பண்ணுங்க!

 

மேலும் படிக்க – உங்கள் ஸ்மார்ட் போனில் குறுஞ்செய்தி / தட்டச்சு விளையாட்டுகளை விளையாட தயாரா?

பட ஆதாரம்  – Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

Read More From Lifestyle