Beauty

எண்ணெய் கொண்ட சருமத்திற்கான சிறந்த ப்ரைமர்கள் (Best Primer For Oily Skin)

Nithya Lakshmi  |  Apr 11, 2019
எண்ணெய் கொண்ட சருமத்திற்கான சிறந்த ப்ரைமர்கள் (Best Primer For Oily Skin)

நாம் அனைவரும் வெளியில் செல்லும்போது சருமம் மிக சிறப்பாக தெரிய அதற்கான முயற்சிகளை எடுத்துக்கொள்வோம் . அனைவரும் அழகாகவும் குறைபாடற்ற தோற்றத்தை மிகவும் விரும்புவீர்கள். இதை எளிதில் பெற ப்ரைமர் (primer) உங்களுக்கு உதவும். ஒப்பனையில் எக்கச்சக்கமான விஷயங்கள், வித்தைகள் மற்றும் செய்முறைகள் இருந்தும் சில முக்கியமான பொருட்கள் அடிப்படையில் மிக அவசியம் . அப்படி ஒன்றுதான் இந்த ப்ரைமர் ! இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பாப்போம்.

ப்ரைமர் பயன்கள்

சிறந்த ப்ரைமர்கல் – எண்ணெய் கொண்ட சருமத்திற்கு

ப்ரைமர் , பவுண்டேஷன் மற்றும் கன்சீலர் – மூன்றிற்கும் என்ன வித்யாசம்

ப்ரைமர்ரை எவ்வாறு பூசுவது

ப்ரைமர் என்றால் என்ன? அதன் பயன் (Primer and Its Uses)

நீங்கள் பெரும்பாலும் லிப்ஸ்டிக், ஐ லைனர் , பவுண்டேஷன் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். இருப்பினும் , ப்ரைமர் உங்களுக்கு பல பயன்கள் அளிக்க உள்ளது. ப்ரைமர் , பவுண்டேஷனை போல ஒரு கிரீம் தான். இதை நீங்கள் உங்கள் முகத்தை கழுவிக்கொண்டு பூசவேண்டும். இதனால் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், சுருக்கங்கள், கரு வளையங்கள், கருமுள் என அணைத்து குறைகளும் மறைந்து விடும்.உங்கள் பவுண்டேஷன் மற்றும் கன்சீலரை மென்மையாக பூச ப்ரைமர் ஒரு சிறந்த அடித்தளம் ஆக இருக்கும்.மேலும் இது உங்கள மேக்கப்பை நீண்ட நேரம் கலையாமல் பாதுகாக்கும்.

எண்ணெய் கொண்ட சருமத்திற்கு ஏற்ற சிறந்த ப்ரைமர்கல் (Best Primer For Oily Skin In Tamil)

நான் பெரும்பாலும் மேக்கப் போடுவதில்லை என்றாலும் அடிப்படையில் ஒரு பவுண்டேஷனை இலகுவாக தடவி செல்வேன். ஆனால் அதுவோ ஓரிரு மணி நேரத்தில் மறைந்துவிடும். மீண்டும் என் சருமம் எண்ணெய் கொண்டதாக மாரி டல் ஆகிவிடும். இதை தவிர்க்க ஒரு நாள் நான் தீர்வு தெடையில் ப்ரைமர் எனும் ஒப்பனை பொருள் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிய வந்தது.

என்னைப்போல உங்களுக்கும் எண்ணெய் கொண்ட சருமம் (oily skin) என்றால் நீங்கள் கீழ் கூறி இருக்கும் ப்ரைமர்கலை முயற்சித்து பாருங்கள். இது உங்களுக்கு எண்ணெய் தன்மையை உறிஞ்சி உங்கள் மேக்கப்பை அதிக நேரம் நீடிக்க வைக்க உதவுகிறது.

எண்ணெய் சருமத்திற்கான காரணங்களையும் படிக்கவும்

1) கலர்பாற் பெற்பெக்ட் மேட்ச் ப்ரைமர் (Colorbar Perfect Match Primer) 

உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணையை உறிஞ்சி , உங்கள் மேக்கப்பை அதிக நேரம் நீடிக்க வைக்க ஒரு சிறந்த ப்ரைமர் இந்த சிலிகான் பேஸ் கொண்ட கலர்பாற் பெற்பெக்ட் மேட்ச் ப்ரைமர்! இதை நீங்கள் பூசிக்கொண்டு உங்கள் பாவுண்டேஷன் பூசும்போது உங்கள் மேக்கப் அதிக நேரம் நீடிக்கும். இது சுருக்கங்கள் மற்றும் துளைகளை மறைத்து வெப்பமான நேரங்களிலும் உங்கள் ஒப்பனையை கலையாமல் பாதுகாக்கிறது. 

விலை – Rs.638.

இதை இங்கே வாங்கலாம்

2) பெனிபிட் போர் – பெஷனல் பேஸ் ப்ரைமர் (Benefit Pore-fessional Face Primer)

பெனிபிட் பிராண்டில் வரும் இந்த ப்ரைமர் விலையில் சிறிது அதிகமாக இருந்தாலும் இதை நீங்கள் நம்பி வாங்கலாம். இதன் எண்ணெய் இல்லா அமைப்பு உங்கள் எண்ணெய் கொண்ட சருமத்திற்கு பயனளிக்கும். மேலும் இதில் டைமண்ட் பவுடர் , வைட்டமின் இ இருப்பதால் இது உங்கள் துளைகளை மறைத்து / குறைவாக காட்டுகிறது. இதன் போர்முலா உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். இது இரண்டு சைசில் வருகிறது. 

விலை – Rs.1980.

இதை இங்கே வாங்கலாம்

இலவங்கப்பட்டை தூளின் ஆரோக்கிய நன்மைகளையும் படிக்கவும் 

3) எல்.எ கேர்ள் ப்ரோ பிரெப் ஸ்மூத்திங் பேஸ் பவுடர் (L.A Girl Pro Prep Smoothing Primer)

இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு ப்ரைமர் . சுற்றுலா செல்லும்போது அல்லது வெளியில் வெயிலில் அதிகம் சுற்றும் போது, உங்கள் முகத்தில் வரும் வியர்வை , எண்ணெய் தன்மை என்று அனைத்தையும் அட்டகாசமாக கையாளக்கூடிய ஒரு ப்ரைமர் இதுவே. இது உங்கள் மேக்கப்பை நீண்ட நேரம் கலையாமல் பிரெஷாக வைக்க உதவும். அந்த ஒரு குறைபாடாற்ற சருமத்தை எளிதில் பெற ல்.எ கிளர் ப்ரைமர் சிறந்தது. இதை நீங்கள் வெறுமனே பவுண்டேஷன் இல்லாமலும் பூசிக்கொள்ளலாம்.

விலை – Rs.570

இதை இங்கே வாங்குங்கள்

4) மேக் பிரெப்+பிரைம் பியூட்டி பாம் (MAC Prep+Prime Breauty Balm)

மேக் பிராண்டில் பெரும்பாலான பெண்கள் லிப்ஸ்டிக்க்கை அதிகம் விரும்புவார்கள். இதில் ப்ரைமரும் ஒரு சிறந்த ஒப்பனை பொருள் ! இதன் ப்ரைமர் உங்கள் சருமத்தில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்வதுடன் நீண்ட நேரம் உங்கள் மேக்கப்பை செட் செய்து, உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணையை குறைகிறது. மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் சருமம் இன்னும் மென்மையாகவும் குறைபாடாற்ற சருமமாகவும் மாறிவிடும். இதன் SPF காரணி உங்களை மேலும் சூரியனின் ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. நீங்கள் மேக் ஒரு ஸ்மூத்தா சருமத்திற்கு மேக் ப்ரைமர் சிறந்தது.

விலை – Rs.1800

இதை இங்கே வாங்குங்கள்

5) ஸ்மாஷ்பாக்ஸ் போட்டோ பினிஷ் பவுண்டேஷன்-ப்ரைமர் லைட் (Smashbox Photo Finish Foundation)

இது ஒரு மிக சிறந்த பிராண்டாக இருந்தாலும் இதன் விலை அனைவருக்கும் பொறுத்தாது! நீங்கள் அதிகமாக மகுப்பிற்கு செலவழிக்கும் நபராக இருந்தால் இது உங்களுக்கு பொருந்தலாம். இருப்பினும், சருமத்தை பராமரிக்கும் காரணிகள் மிக அற்புதமாக உள்ளது. இதில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் A மற்றும் E உள்ளது மேலும் இதன் ஆயில்- பிரீ பார்முலா ,இதன் நீர் தன்மை அதிகம் கொண்ட காரணி இதை எண்ணெய் கொண்ட சருமத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஆகையால், இது உங்கள் சருமத்திற்கு அன்பை காட்ட மிக பொருத்தமான ப்ராடக்ட் !

விலை – Rs.2800

இதை இங்கே வாங்குங்கள்

6) NYX ப்ரொபெஷனல் மேக்கப் ஏன்ஜெல் வேல் ஸ்கின் ப்ரொடெக்ட்டிங் ப்ரைமர் – (NYX Professional Primer)

இதன் கிரீமி அமைப்பு உங்கள் சருமத்தில் இருக்கும் குறைபாடுகளை அகற்றி உள்ளிருந்து ஜொலிக்கும் தோற்றத்தை அளிக்கிறது. மேலும் இது உங்கள் முகத்தை ஒரு சீரான தோற்றத்தில் பாவுண்டேஷன் பூச தயார் படுத்துகிறது. இதை எண்ணெய் கொண்ட சருமத்தில் பயன்படுத்துவது ஒரு சிறப்பான பலனை அளிக்கும்.

விலை – Rs.1521

இதை இங்கே வாங்குங்கள்

7) கிளினிக் பேஸ் ப்ரைமர் – (Clinique Face Primer)

இதில் இரண்டு ப்ரைமர் கல் உள்ளது. ஒன்று – கிளினிக் நிறமாற்றத்தை சரிசெய்யும் – அதாவது உங்கள் சருமத்தில இருக்கும் அக்னே , பருக்கள், நிறம் மாற்றம், கரும் புள்ளிகள் என்று அனைத்யும் அற்புதமாக மறைத்து உங்கள் பவுண்டேஷன் கிரீமை மென்மையாக பூச உதவுகிறது. அடுத்தது, கிளினிக் சிவத்தலை சரிசெய்வதற்கு.இதில், உங்கள் முகத்தில் சிவந்த பருக்கள், அதிகமான சிவத்தலை சரிசெய்யும். இதன் பார்முலா நீண்ட நேரம் நீடிக்க மற்றும் எண்ணெய் தன்மையை முகத்தில் கட்டுப்படுத்த உதவுகிறது.

விலை – Rs.2700

இதை இங்கே வாங்குங்கள்

8) லோட்டஸ் இன்ஸ்டா ஸ்மூத் பெற்பெக்ட்டிங் ப்ரைமர் – (Lotus Insta Smooth Primer)

உங்கள் சருமம் உணர்திறன் கொண்டதாக இருந்தால், லோட்டஸ் ப்ராடக்ட்டுகளை நீங்கள் பயன்படுத்தலாம். இதன் ஹெர்பல் பார்முலா உங்கள் சருமத்தில் இருக்கும் அக்னே, பருக்கள் , கருமுள் என அனைத்தையும் மறைத்து உங்கள் எண்ணெய் தன்மை கொண்ட சருமத்தை எளிதில் சீராகிவிடும். இது லேசாக இருப்பதினால் இதை நீங்கள் பயணத்திலும் எடுத்துக்கொண்டு செல்ல உதவும்.

விலை – Rs.521

இதை இங்கே வாங்குங்கள்

9) பேஸிஸ் அல்டிமேட் ப்ரோ பேர்பெக்ட்டிங் ப்ரைமர் (Faces Ultimate Pro Primer)

உங்கள் சருமம் எண்ணெய் கொண்டதாக இருந்தால், இதுபோல் ஒரு மேட் பினிஷ் குடுக்கும் ப்ரைமர் சிறந்தது. பேஸிஸ் பிராண்டை சேர்ந்த இந்த ப்ரைமர் உங்கள் சருமத்தை சம நிலை செய்து , குறைபாடுகளை மறைத்து ஒரு மென்மையான ஜொலிக்கும் தோற்றத்தை எளிதில் அளிக்கிறது. இது மேலும் உங்கள் சருமத்தில் மிக இலகுவான ஒரு தோற்றத்தை அளிக்கும். 

விலை – Rs.719

இதை இங்கே வாங்குங்கள்

10) மேபிளீன் நியூ யார்க் ஒன் டே பேர்பெக்ட் ப்ரைமர் (Maybelline New York Dream One Day Perfect Base Primer)

உங்கள் சருமத்தில் இருக்கும் துளைகளை மேலும் சேதமாகாமல் , மிக அற்புதமாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்யை உறிஞ்சி , உங்களுக்கு அதிக நேரம் ஒரு ஜொலிக்கும்/புத்துணர்ச்சி ஊட்டும் சருமத்தை அழிக்கும் இந்த ப்ரைமர்.இதன் 5x மொய்ஸ்சுரைசிங் பார்முலா உங்கள் சருமத்தை நாள் முழுவதும் பிரகாசமாக வைக்க உதவுகிறது.

விலை – Rs.650

இதை இங்கே வாங்குங்கள்

ப்ரைமர் , பவுண்டேஷன் மற்றும் கன்சீலர் –  மூன்றிற்கும் என்ன வித்யாசம் உள்ளது? (Difference Between Primer, Foundation and Concealer)

சரி ! ப்ரைமர் என்றால் என்ன , மேலும் அதில் சிறந்த ப்ரைமர்கலை பார்த்தோம். இப்போது உங்களுக்கு ப்ரைமர் , பவுண்டேஷன் மற்றும் கன்சீலரின் வித்தியாசத்தை அளிக்கிறோம். இது மூன்றுமே ஒரே விதத்தில் தெரிந்தாலும் இதன் பயன்கள் வேறுபட்டது.

ப்ரைமர் உங்கள் முகத்தில் ஒரு பேஸ் (base) போல் வேலை செய்யும். உங்கள் ஒப்பனையின் முன் , உங்கள் சருமத்தை தயார் செய்து , மேலும் உங்கள் ஒப்பனையை நீண்ட நேரம் நீடிக்க வைக்க ஒரு சிறந்த ப்ரைமர் அவசியம். இதற்கு மேல் நீங்கள் பவுண்டேஷனை பூசுவதினால் , இது எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை.

பவுண்டேஷன் உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற ஒன்றாக இருக்க வேண்டும். இது உங்கள் முகத்தில் இருக்கும் அணைத்து குறைபாடுகளையும் மறைத்து ஒரு சம நிலை ஆன முகத்தை அளிக்க உதவுகிறது.

கன்சீலர் என்றது ஒரு பவுண்டேஷனை போல தான். உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், கருமுள், கரு வளையம் என அனைத்தையும் சரி செய்யும். ஆனால் இதை நீங்கள் பவுண்டேஷனை போல முகத்தில் பூசாமல், தேவைக்கேற்ப பருக்கள் மேல், அக்னே மீது என டச்-அப் செய்ய வேண்டும். இது , உங்கள் ஒப்பனையின் அடிப்படையான செய்முறையில், மூன்றாவது படி. 

ப்ரைமர்ரை எவ்வாறு பூசுவது என்றதிற்கான குறிப்புக்கள் (Tips On How To Apply The Primer)

  1. முதலில் உங்கள் சருமத்தை இதற்கு தயார் செய்யவேண்டும். அதற்கு , முகத்தை கழுவிக்கொண்டு ஏதேனும் ஒரு மொய்ஸ்சுரைசர் (உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றை ) பூசுங்கள்.
  2. சிறிது நொடிகள் கழித்து, கொஞ்சமாக ப்ரைமரை உங்கள் விறல் நுனிகளில் எடுத்து, முகத்தில் உள்ளிருந்து வெளியில் போகும்படி பூசுங்கள்.
  3. இதற்க்கு பிறகு, சிறிது நேரம் கழித்து பவுண்டேஷன், கன்சீலர் என்று மற்ற கிரீம்களை பூசலாம்.
  4. இதுபோல் ப்ரைமர்ரை பயன்படுத்தும்போது உங்களுக்கு ஒரு குறைபாடாற்ற ஜொலிக்கும் சருமத்தை அளிக்கும். 

இனி அந்த எண்ணெய் கொண்ட சருமத்தை எளிதில் சமாளிக்கலாம் ! 

மேலும் படிக்க- ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்) !

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம்,இன்ஸ்டாகிராம்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty