Lifestyle

உங்கள் வாழ்க்கையில் ஊக்கத்தோடு இருப்பது எவ்வளவு முக்கியம்? இங்கே உங்களுக்காக சில வரிகள்!

Meena Madhunivas  |  Jul 19, 2019
உங்கள் வாழ்க்கையில் ஊக்கத்தோடு இருப்பது எவ்வளவு முக்கியம்? இங்கே உங்களுக்காக சில வரிகள்!

ஒருவர் எந்த காரியம் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாமல் போவதற்கு ஊக்கமின்மை ஒரு பெரிய காரணமாக கருதப்படுகின்றது. ஊக்கம் இல்லாமல் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும், அது முழுமையும் பெறுவதில்லை, வெற்றியும் பெறுவதில்லை. இந்த வகையில், நீங்கள் சிறியதோ, பெரியதோ, நிச்சயம் ஊக்கத்தோடு ஒரு காரியத்தை செய்ய முயலும் போது, அதில் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்களைத் தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

உங்களை எப்படி உற்சாகப் படுத்திக் கொள்வது என்று நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தாள், இங்கே உங்களுக்காக சில உற்சாகமூட்டும் வரிகள்!

ஊக்கமூட்டும் வரிகளின் முக்கியத்துவம் என்ன?(Importance Of Motivational)

ஒருவர் பொதுவாக ஊக்கம் குறைந்து காணப்படுவது, அவர் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் போது, அல்லது தொடர்ந்து அவர் வாழ்க்கையில் வருத்தத்திற்குரிய விடயங்கள் நடப்பது, அல்லது சுற்றி இருக்கும் உறவுகள் அவருக்கு உதவியாக இல்லாமல் இருப்பது. இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால், ஒருவர் உற்சாகத்தோடு இருப்பதற்கும், இல்லாமல் இருப்பதற்கும், அவரே முதல் காரணம் ஆவார்.

இதற்கு ஒரு சிறிய உதாரணம், பயணிக்கும் படகில் ஓட்டை இருந்தால் மட்டுமே, கடல் நீர் உள்ளே புக முடியும். அது போல, நீங்கள் இடம் கொடுத்தால் மட்டுமே, வருத்தத்திற்குரிய விடயங்கள் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய முடியும்.

ஊக்கமூட்டும் வரிகள், உங்களுக்கு ஒரு நம்பிக்கையை வளர்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அழகான நல்ல இரவு செய்திகளையும் படிக்கவும்

யாருக்கெல்லாம் ஊக்கப்படுத்தும் வரிகளை பகிரலாம்?(To Whom Should You Send The Motivational Quotes)

யாரெல்லாம் நீங்கள் முன்னேற வேண்டும், வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையோடு(motivational)இருக்க வேண்டும் என்று நினைகின்றீர்களோ, அவர்களுக்கெல்லாம் நீங்கள் இந்த உற்சாகமூட்டும் வரிகளை பகிரலாம். அது உங்கள் நண்பர்களாக இருக்கலாம், உங்கள் குழந்தைகளாக இருக்கலாம், உங்கள் சகோதர, சகோதிரிகளாக இருக்கலாம், உங்கள் பெற்றோர்களாகவும் இருக்கலாம். குறிப்பாக இத்தகைய ஊக்கமூட்டும்(motivational) வரிகள் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு நல்ல தூண்டுகோலாகவும், நம்பிக்கையை வளர்க்கும் தூணாகவும் இருக்கும்

இத்தகைய வரிகள் குறிப்பாக, எந்த வயதினர்களுக்கும் நம்பிக்கையை கொடுக்கும் வகையில் இருக்கும். ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற எந்த பாகுபாடுகளும் இல்லாமல், ஒருவரை நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று எண்ணி விட்டால், இந்த உற்சாகமூட்டும் வரிகள் அவர்களுக்கே!

pixabay

ஊக்கமூட்டும் சில வரிகள்(Motivational Quotes)

1. தோல்விகளால் அடிபட்டால் உடனே
எழுந்து விடு!
இல்லையென்றால் இந்த உலகம்
உன்னை புதைத்து விடும்!

2. முயற்சி செய்ய தயங்காதே
முயலும் போது உன்னை
முட்களும் முத்தமிடும்…!

3. மலையை பார்த்து
மலைத்து விடாதே
மழை மீது ஏறினாள்
அதுவும் உன் காலடியில்!

4. மாற்றங்கள் ஒஎன்ற ஒன்றே இந்த உலகில்
இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி
வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால்
யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது!

5. தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில்
முடியாதது என்று எதுவுமே இல்லை!

6. நீ என்ன செய்தாலும் அதற்கு
குற்றம் சொல்ல நாலு பேரு இருப்பான்!

7. தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

8. நாம் செய்யும் காரியம் அனைத்துமே சுலபமாக அமைவது இல்லை.
ஆனால், இடைவிடா முயற்சியோடு நீ செய்யும் போது அது சாத்தியமாகிறது!

9. நேரத்தை வீணாக்கும் பொழுது
கடிகாரத்தை பார்.
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை!

10. நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை!

நண்பர்களுக்கான ஊக்கமூட்டும் வரிகள்(Motivational Quotes For Friends)

1. ஒரு பலசாலி என்றுமே நம்புவது
தன்னம்பிக்கையை மட்டுமே
யாதும் சாத்தியமே உன் மனதில் திடம் இருந்தால்
அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால்!

2. எதை கண்டும் அச்சம் கொள்ள தேவை இல்லை
உன் மனசாட்சியை தவிர.
உன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட சிறந்த நண்பனும் அதுவே உன்னை பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்கும் ரகசிய உளவாளியும் அதுவே

3. எதையும் பெரிதாக எடுத்து கொல்லாதே
உன் மேல் ஒருவர் வைத்திருக்கும் உமையான அன்பை தவிர.

4. கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதி ஆன மருந்தை போலவே
சிறிதும் உன் வாழ்க்கையின் வழிக்கு அது ஆறுதல் அளிப்பது இல்லை!

5. நான் மெதுவாக நடப்பவன் தான்
ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை!

6. எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை!
அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை!

7. துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு
ஆனால், அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

8. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு!
தோல்வி கூட ஒரு நாள்
இவன் அடங்கமாட்டான்னு உன் கிட்ட தோற்று விடும்!

9. வாழ்க்கை என்பது மொட்டுக்கள் நிரம்பிய மலர் தோட்டம்
நீ சிரிக்கும் போது மட்டுமே அதில் பூக்கள் பூக்கிறது!

மாணவர்களுக்கான ஊக்கமூட்டும் வரிகள்(Motivational Quotes For Students)

1. நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள்
நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்!

2. முயற்சிகள் என்பது ஒன்றும் இல்லை
நீ தினம் இரவில் என்னவாக ஆகா வேண்டுமென்று கனவு
காண்கிறாயே, அதை நிஜமாக மாற்றுவது தான்!

3. கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி
வெற்றி கனியை எட்டுபவனே சிறந்த
சாமர்த்தியசாலி ஆகிறான்!

4. தன்னமிக்கை என்ற மெழுகுவர்த்தி
உனக்குள்ளே தீராத வரை
சாதனை என்னும் தீப ஒளி
உன் திறமைகளால்
சுடர் விட்டு எரியும்!

5. எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும்
அதற்கு தீர்வு காண வழிகள் பல உண்டு
அப்படி இருக்க
உன் பிரச்சனை எனும் வலிகளை தீர்க்கவும்
உன் சிந்தனையில் வழி உண்டு!

6. நீ அடைய முயலும் லட்சியம் வலுவாக இருந்தால்,
அதை செய்து முடிக்க வேண்டிய மனோதிடம்
உனக்குள்ளே தானாகவே வந்து விடுகிறது!

7. சிந்தனை மட்டுமே செய்ய உனக்கு தெரியுமானால்
நீயே உனக்கான மிக சிறந்த ஆலோசகர்!

8. சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிது தான்
ஆனால் அதை தக்கவைப்பது தான் மிக கடினம்!

9. எந்த ஒரு செயல்களிலும் பொறுமை இழக்காமல்
அதே சமயம் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால்
உனக்கான சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக
மாறும் தூரம் தொலைவில் இல்லை!

10. உன் தோல்விக்கான சரியான காரணத்தை தேடுவதை விடுத்து
உனது வெற்றிக்கு தேவையான காரணிகளை கண்டறி.
வாழ்வினை நீ வெல்வாய்!

pixabay

அனைவருக்கும் ஊக்கமூட்டும் சில வரிகள்(Motivational Messages For Everyone)

1. எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

2. பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

3. நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

4. எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்……

5. ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு…

6. உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…

7. எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்…

8. எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்

9. இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

10. முடியாது
என எதையும்
விட்டு விடாதே…!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்…

வேலையில் இருப்பவர்களுக்கு ஊக்கமூட்டும் வரிகள்(Motivational Quotes For Work)

1. தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

2. நேற்று என்ற ஒன்றை நீ மறந்தால் தான்
நாளை எனும் நாள் உன் வாழ்க்கையில்
உதயம் ஆகும்!

3. பெரும்பாலும் இலட்சியத்தை நோக்கி செல்பவர்கள்
பலரின் அலட்சிய பேச்சுக்களை கண்டு கொள்வது கூட இல்லை!

4. தடை தாண்டி ஓடிக்கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மாரத்தான் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே!

5. வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல…
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்
தன்னம்பிக்கைக்குமே சொந்தம் – ஹிட்லர்

6. அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்….
எல்லோர்ருக்கும் பிடிக்கும் படி
எவராலும் வாழ முடியாது
கடவளாலும் கூட…!

7. முயலும் வெல்லும்
அமையும் வெல்லும்
ஆனால் முயலாமை என்றும் வெல்லாது…

8. தோல்வி அடைந்தால்
மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர…
இலக்குகளை அல்ல!

9. வெற்றி கதைகளை படிக்காதீர்கள்
அது உங்களுக்கு தகவலை மட்டுமே சொல்லும்
தோல்விக் கதைகளை படியுங்கள்
அதில் வெற்றி பெறுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் – அப்துல் கலாம்

10. உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாவே தோன்றும்!

வாழ்க்கைக்கான ஊக்கமூட்டும் வரிகள்(Motivational Quotes About Life)

1. வித விதமாய் திட்டி பார்த்தும் தீராத கோபம்…!
வித விதமாய் அன்பு காட்டி பாருங்கள்
இல்லற வாழ்க்கை இனிமையை இருக்கும்…!

2. தன் உடம்பில் ஆயிரம் முட்கள் இருந்தாலும்…
ஒரேயொரு முள்ளில் மாட்டிக் கொள்கிறது மீன்…!

3. பழுத்த இலையொன்று நடனத்தோடு
ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றது
மரணத்தின் அதீத அழகு…!

4. என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..
வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது!

5. நீங்கள் நிற்காத வரைக்கும்,
நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே இல்லை
உங்கள் பயணத்தை தொடருங்கள்…
நம்பிக்கையோடு…!

6. போர்க்களமென்னும் போட்டிப் பரீட்சையை கடக்க
உனக்குத் தேவை
துணையல்ல துணிச்சலே!

7. சோதனை இல்லாமல் சாதனை இல்லை….
சாதனையே உந்தன் வாழ்வில் எல்லை
நீ முயற்சித்துப் பாரு
முடியாமல் போகாது…!

8. உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம்
மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு
நம்பிக்கை வைப்பவர்களிடம்
நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…!

9. ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…
ஒரு அவமானம் தந்து விடுகிறதே…!

10. வழிகள் இல்லாமல்
பாதைகள் பிறக்காது…
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை சிறக்காது…!

pixabay

வெற்றிக்கான ஊக்கமளிக்கும் வரிகள்(Motivational Quotes For Success)

1. வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது!

2. தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

3. நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரை
வெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்!

4. வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்
முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை மற்றும்
உன்னிடம் என்றுமே குறை மட்டுமே காண்பவர்களை
உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு

5. நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும்
ரோஜா தான் கண்ணில் படும்
முட்கள் இல்லை!

6. தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல
தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி..!

7. தோல்வி பட்ட உனக்கு தான்
வெற்றியின் அருமை தெரியும்
எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு
வெற்றிக்காக வரிந்து கட்டு
இந்த நவீன உலகத்தில்!

8. வாய்ப்புகளுக்காக காத்திருப்பவனை விட
வாய்ப்புகளை உருவாக்குபவனே
வாழ்க்கையில் வெற்றி பெறுவான்!

9. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்

10. ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாளியாகின்றான்…
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று
பெருமை கொள்ளும் கணத்தில்
முட்டாலாகின்றான்…

தன்னம்பிக்கையூட்டும் வரிகள்(Self Motivational Quotes)

1. உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே…
உனக்கு துணையாக நான் இருக்கிறேன்…
தைரியமாக போராடு…
இப்படிக்கு – தன்னம்பிக்கை

2. சிக்கல்களை எதிர் கொள்ளும் போது
கூடவே – பல திறமைகளும் வெளிப்படுகின்றன! – அப்துல் கலாம்

3. முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள்
இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
நீ முடியாது என்று சொல்வது
எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாக
பிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்!

4. கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்
போராடும் எண்ணமே நமக்கு
இல்லாமல் போய்விடும்!

5. குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்
ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு
அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்!

6. சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட,
நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்!

7. வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை
தோல்வி எனும் தடைகள்
உன் கண் முன்னேகாணப்படுவது இல்லை!

8. வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்
அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்!

9. நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…
அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது….

10. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை
பின்தொடராதே!
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு!

pixabay

நேர்மறை ஊக்கமூட்டும் வரிகள்(Positive Motivational Quotes)

1. சூழ்நிலைகளை மாற்ற இயலவில்லை எனில்,
உங்கள் மனதை மாற்றுங்கள்!

2. அனைத்தும் இருந்தும், சிலர் இல்லை என்பார்!
எதுவும் இருக்காது, சிலர் உண்டு என்பார்!
வாழத் தெரிந்தவர், உண்டு என்பார்!

3. என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ, அன்று
நீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்று
உறுதி செய்து கொள்ளலாம்! – விவேகானந்தர்

4. திறமையை முழுமையாக வெளிபடுத்த
உங்களுக்கு வாய்ப்பை தரும் கதாபாத்திரத்தை
விடாபிடியாக அடையுங்கள்!

5. நீங்கள் முதலில் உங்களை கட்டுப் படுத்துங்கள்
பிறகு உலகமே உங்கள் வசமாகும் – ஹென்றி டேவிட் தோரோ

6. நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன்
எப்பொழுதுமே
கதாநாயகன் தான்…! – காமராஜர்

7. செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது
போலத்தான் இருக்கும் – நெல்சன் மண்டேலா

8. உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்
உனக்குத் தேவையான எல்லா வலிமையையும் உதவியும்
உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன! – விவேகானந்தர்

9. யாருக்காகவும் உன்னை மாற்றி கொல்லாதே
ஒரு வேளை மாற நினைத்தால்
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும் – கவிஞர் கண்ணதாசன்

10. என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது போன்றே,
என்ன செய்ய கூடாது என முடிவெடுப்பதும் முக்கியம் – ஸ்டீவ் ஜாப்ஸ்

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஊன்று கோளாய் இருந்த வரிகளை பகிர்ந்துள்ளனர். இத்தகைய வரிகள் தங்களை சுய முன்னேற்றத்திற்கும் பிறரை முன்னேற்றும் வகையிலும் அமைகின்றது.

அப்துல் கலாமின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

1. வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு – போராட்டம் – வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்

2. நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்
ஆனால்அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன

3. நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்போதுமே
மண்டியிடுவது இல்லை!!

4. கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல
உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே (இலட்சிய) கனவு

5. ஒரு முறை வந்தால்
அது கனவு.
இரு முறை வந்தால்
அது ஆசை.
பல முறை வந்தால்
அது இலட்சியம்.

6. அழகை பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

7. உலகம் உன்னை அறிவதை விட,
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்!

8. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்று விடும்.
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்…

9. வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான்
வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி!

10. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால்,
நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

நெல்சன் மண்டேலாவின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

1. ­நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால்,
அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்
பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்!

2. எனது வெற்றிகளின் மூலம் எண்ணை மதிப்பிடாதீர்கள்,
எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்

3. உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் – கல்வியே!

4. ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்!

5. பணத்தால் வெற்றியை உருவாக்கி விட முடியாது!

6. உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது!

7. சூழ்நிலைகள் அனுமதிக்கும் போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை!

8. ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை!

9. தண்ணீர் கொதிக்கத் துவங்கும் போது அதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்!

pixabay

பல அறிஞர்கள் கூறும் ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

1. “முடியாது “ என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் -அப்துல் கலாம்.

2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது. – அன்னை தெரஸா.

3. இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை. – மகாகவி பாரதியார்.

4. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது. -வின்ஸ்ட்டன்ட் சர்ச்சில்.

5. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.

6. இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே…! -ஹிட்லர்.

7. கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. -காமராஜர்.

8. அனுபவம் ஓர் உயர்ந்த நகை. ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது. -ஷேக்ஸ்பியர்.

9. உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு.வாழ்வில் எளிதில் வெற்றிபெறுவாய் -சுவாமி விவேகானந்தர்.

10. இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்றிருக்கிற மனிதனிடம்
நீ சவால் விடாதே! – ஹிட்லர்

11. வாழ்க்கை நீ அழுவதற்கு நூறு காரணங்கள் சொன்னால் ,
வாழ்க்கைக்கு நீ புன்னகைக்க ஆயிரம் காரணங்களை கூறு. – ஹிட்லர்

POPxo இப்போது 6 மொழிகளில்  வெளிவருகிறது!  

ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

You Might Like This

சுதந்திர தின வாழ்த்துக்கள் குறுஞ்செய்தி

 

Read More From Lifestyle