Beauty

அனைத்து வித சரும பிரச்சனைகளையும் தீர்த்து பொலிவான சருமத்தை பெற ஆக்ஸிஜன் பேஷியல்!

Swathi Subramanian  |  Dec 5, 2019
அனைத்து வித சரும பிரச்சனைகளையும் தீர்த்து பொலிவான சருமத்தை பெற ஆக்ஸிஜன் பேஷியல்!

பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது. பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. 

முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும். பேஷியலில் பல வகைகள் உள்ளன. அதில் ஆக்ஸிஜன் பேஷியலும் ஒரு வகையாகும். இளம் வயதில் வரும் சரும சுருக்கங்களை தவிர்க்கவும், பொலிவான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக்ஸிஜன் பேஷியல் செய்து கொள்ளலாம். 

ஆக்ஸிஜன் பேஷியல் சிறந்த மாய்சரைசராக செயல்படுகிறது. உங்கள் சருமத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படும் பட்சத்தில் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  ஆக்ஸிஜன் பேஷியல் (oxygen facial) செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம். 

twitter

மாசற்ற சருமம் : ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். அதோடு இறந்த செல்களை நீக்கிடுவதால் மாசுமருவற்று பொலிவுடன் காணப்படும். 

சுருக்கங்களை நீக்க :  ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற வரிகளும், சுருக்கங்களும் நீங்கும்.

பருக்களை தடுக்க : ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் அழுக்குகள் எல்லாம் நீங்குவதோடு எண்ணெய் சுரப்பும் குறைகிறது. இதனால் பருக்கள் வரும் என்ற அச்சம் தேவையில்லை. இயற்கையாகவே எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் பேஷியல் சிறந்த தேர்வாக இருக்கும். 

உடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம்… தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

இளமையுடன் இருக்க : ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும்.  வயதாவதை உணர்த்தும் வகையில் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் போன்ற அறிகுறிகள் வராமல் செய்திடும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமம் டைட்டாக இருக்கச் செய்கிறது. இதனால் சருமத்தின் இளமை தக்கவைக்கப்படும்.

twitter

ஆரோக்கியமான சருமத்திற்கு : ஆக்ஸிஜன் பேஷியல் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும். இதனால் எப்போதும் முகத்தில் தோன்றும் நிறமாற்றங்கள், பரு, வறட்சி போன்றவை இல்லாமல் பொலிவுடன் காணப்படும். 

சருமம் பிரகாசமடைய : இந்த ஃபேஷியல் (oxygen facial) முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கவல்லது. சூரியனால் ஏற்பட்ட புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் சருமம் கருமையடையும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் இந்த பேஷியல் செய்தால் உடனடி பலன் கிடைக்கும். 

சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

புத்துணர்ச்சிக்கு : அலுவலகத்தில் லைட்டுகளுக்கு நடுவே வேலை செய்வதாலும், கணினியில் அதிக நேரம் கழிப்பதால் அதிலிருந்து வெளிவரும் வெளிச்சத்தாலும் சருமம் பாதிப்படைகிறது. இவறையெல்லாம் சரிசெய்து சருமத்தை பாதுகாக்க ஆக்ஸிஜன் ஃபேஷியல் உதவுகிறது. 

twitter

பொலிவான சருமத்திற்கு : ஆக்ஸிஜன் பேஷியலில் உள்ள 02 என்பது சருமத்திற்கு ஆக்ஸிஜன் அளித்து சுவாசம் பெறச் செய்கிறது. C2 என்பது பப்பாளி மற்றும் அன்னாசி பழ நொதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ்ட். இது முகத்திற்குத் தேவையான ஹைட்ரஜன் ஃபெராக்சைடை ஊக்குவித்து முகத்தை பொலிவுறச் செய்கிறது.

இந்த ஆக்ஸிஜன் பேஷியல் (oxygen facial) சென்சிடிவ் மற்றும் முகப்பருக்கள் கொண்ட சருமத்திற்கு ஏற்றது அல்ல. இவை தவிர்த்து மற்ற எல்லா வகையான சருமத்திற்கும் உகந்தது.

சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty