Beauty

அட! வாழைப்பழத் தோலில் இத்தனை நன்மைகளா ?!

Nithya Lakshmi  |  Dec 18, 2019
அட! வாழைப்பழத் தோலில் இத்தனை நன்மைகளா ?!

வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் அதன் தோள் குப்பைத் தொட்டிக்குத்தான் போகும். ஆனால், வாழைப்பழத்தோலில் எத்தனை நன்மை பயக்கும் விஷயங்கள் இருக்கிறது என்று தெரியுமா? நீங்கள் வாழைப்பழத் தோளை வருக்கலாம், பொரிக்கலாம் அல்லது வேக வைத்து சாப்பிடலாம். அதனால் தோள் தடிமனாக இல்லாமல், மென்மையாகிவிடும். வாழைப்பழம் எவ்வளவு பழுத்திருக்கிறதோ அவ்வளவு வாழைப்பழத் தோலில் இனிப்பு அதிகமாக இருக்கும். சரி, வாழைப்பழத்தோல் நம் சரும அழகிற்கும் உடலுக்கும் மற்றும் பல விஷயங்களில்(banana peel benefits) பயனளிக்கிறது. அவை என்னென்ன என்று அறிவோம் வாருங்கள்!

சருமம் & அழகிற்கு – வாழைப்பழத் தோல்

1. பருக்களை எதிர்த்துப் போராடும்

Pexels

வாழைப்பழத் தோளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏவில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின், தொற்று உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழத் தோளை நறுக்கி, முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில், மெதுவாக தேய்க்கவும். பத்து நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால், நாள் முழுவதும்கூட கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்குவதற்கு முன் கூட இப்படி செய்து தூங்கி விடலாம். நீண்ட நேரம் சருமத்தில் (skin) இருந்து கொண்டு நன்றாக வேலை செய்யும். 

2. கருவளையங்களை போக்கும்

இரவு நீண்ட நேரம் படிப்பதாலும், வேலை செய்வதாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின்மீது பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வாராமல் தடுத்து, வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.

3. பற்களை பளிச்சிடச் செய்யும்

Pexels

வாழைப்பழத்தோலை பற்கள்மீது தேய்த்து கொள்ளுங்கள். சிறிது நேரம் களித்து பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். பற்கள் பளிச்சிடும்.

4. மருக்களை நீக்கும்

மருக்கள் மீது வாழைப்பழத் தோளை சிறிது நறுக்கி வைத்து டேப்பை பயன்படுத்தி ஒட்டி விடுங்கள். வாழைப்பழத் தோள் கருப்பானால், மற்றொரு வாழைப்பழத் தோளை மாற்றிக் கொள்ளுங்கள். தோள் உரிந்து வருவது போல மருக்கள் நீங்கி விடும். 

மேலும் படிக்க – அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு – பீட்ரூட் !

உடல் ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு – வாழைப்பழத் தோல்

1. காலில் உள்ள ஆணிகளை நீக்கும்

Pexels

கால் மிகவும் வறண்டு இருந்தால், மேலும் காலில் ஆணி இருந்தால், வாழைப்பழத் தோளை பாதத்தின்மீது வைத்து கட்டிவிடுங்கள். சாக்ஸ் அணிந்து தூங்கி விடுங்கள். காலில் உள்ள ஆணி கொஞ்சம் கொஞ்சமாக மறையும் வரை தினமும் இரவு தூங்கும்போது இப்படி செய்யலாம்.

2. வலியை போக்கும்

வலிக்கும் இடத்தில் வாழைப்பழத் தோளை வைத்துத் தேய்த்துக்கொள்ளுங்கள். வலி நீங்கி விடும். மேலும், எங்காவது இடித்ததினால் ரத்தக்கட்டு ஏற்பட்டிருந்தால், அதன்மீது வாழைபழத்தோளை வைத்து கொண்டால், சிவப்பு நிறம் மறைந்து, வலியும் நீங்கி விடும்.

3. பூச்சி கடியை சரி செய்யும்

கொசு, பூச்சி போன்றவை கடித்து எரிச்சல், அரிப்பு போன்றவை சருமத்தில் தோன்றினால், வாழைப்பழத்தோலை தேய்த்துப் பாருங்கள். சருமத்தில் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் சிவப்பு நிறம் மறைந்துவிடும். அரிப்பு நீங்கிவிடும்.

4. மன உளைச்சலை சரி செய்யும்

Pexels

வாழைப்பழத்தோளின் சாறை பருகினால், உங்கள் மன நிலையை சீராக வைக்கும் செரடோனியம் ஹார்மோன் சரியான அளவு சுரக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்திற்கு முன்பும், மெனோபாஸ் காலங்களிலும், மனநிலையில் ஏற்ற இரக்கங்கள் தோன்றும், அப்போது இதைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.

5. உடலில் முள் குத்தி இருந்தால் வெளியே வரும்

வாழைப்பழத் தோளில் உள்ள என்சைம் காயத்தில் உள்ள தூசுகளை வெளியே கொண்டுவரும் ஆற்றல் கொண்டது. காயத்தில் ஏதாவது சிறிய கண்ணாடித் துண்டோ அல்லது முள் குத்தியிருந்தால், வாழைப்பழத் தோளை அதன்மீது போட்டு ஒரு டேப்பை கொண்டு ஒட்டி விடுங்கள்.  இரவு தூங்கும்போது அப்படியே விட்டு விடுங்கள். காலையில் பார்த்தால், முள் வெளியில் வந்திருக்கும். 

6. செரிமானத்தை அதிகரிக்கும்

வாழைப்பழம் சாப்பிட்டாலே நல்ல ஜீரணம் ஆகும். அதன் தோளில் அதைவிட அதிக சக்திதானே இருக்கும். வாழைப்பழத்தோலை வேக வைத்தோ, பொரித்தோ சாப்பிட்டால் செரிமானம் நன்றாக இருக்கும். மூலை நோய் வராமல் தடுக்கும்.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

Pexels

வாழைப்பழத்தோளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உங்கள் உடலின் சக்தியை அதிகரிக்கும். மேலும், நீரழிவு நோய் வராமல் தடுக்கும். வாழைப்பழத்தோளில் உள்ள,

வாழைப்பழத்தோலின் மற்ற பயன்கள்

1. பாலிஷ் போடலாம்

வாழைப்பழத்தோளின் உட்பகுதியை ஷூவின் மீது தேய்க்கலாம். சிறிது நேரத்தில் பாலிஷ் போட்டது போல பளிச்சிடும். மேலும், வெள்ளி பொருட்கள், உலோகங்கள் கருத்திருந்தால், வாழைப்பழத்தோலை பசைபோல அரைத்து பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யுங்கள். உடனே பளிச் என்று ஆகிவிடும். 

Pexels

2. செடிகளுக்கு ஊட்டம் அளிக்கும்

ஒரு பக்கெட் தண்ணீரில் வாழைப்பழத்தோலை போட்டு வையுங்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குப்பின் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுங்கள். வாழைப்பழத்தோளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளை நன்றாக வளர வாய்க்கும்.

வாழைப்பழத்தை விட வாழைப்பழத்தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா! இதற்கு மேல் நிச்சயம் நீங்கள் வாழைப்பழத்தோலை தூக்கி எறிய மாட்டீர்கள் தானே?!

மேலும் படிக்க – சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty