Celebrity gossip

இதனாலதான் நான் ஆர்யா கல்யாணத்துக்கு வரல… மனம் திறந்த நடிகை பூஜா !

Deepa Lakshmi  |  Dec 4, 2019
இதனாலதான் நான் ஆர்யா கல்யாணத்துக்கு வரல… மனம் திறந்த நடிகை பூஜா !

என்னதான் நம்ம ஆர்யா சாயிஷாவை கல்யாணம் பண்ணிட்டு அமைதியாக இருந்தாலும் அவரை சுற்றிலும் பின்னப்படும் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் அளவே இல்லை. சமீபத்தில்தான் சாயிஷா (sayisha) உடன் சச்சரவு என்கிற வதந்திகள் எழுந்து அடங்கின.

அடுத்ததாக அவரது தோழியும் முன்னாள் காதலியுமான நடிகை பூஜா (pooja) தற்போது தான் ஏன் ஆர்யா (arya) திருமணத்திற்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை கூறி இணையத்தை வைரலாக்கி வருகிறார்.

ஆர்யா திரைப்படங்களில் நடித்த எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது இவர் மீது வெளியாகும் வதந்திகள். ஆர்யா அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உள்ளம் கேட்குமே திரைப்படம் இவரை பிரபலமாக்கியது.                                                           

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்..!

Youtube

அதே உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா. இவர் இலங்கையை சேர்ந்தவர். முதல்படம் முதலே ஆர்யா பூஜா இடையே நல்ல நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆர்யாவுடன் அறிமுகம் ஆன பூஜா பல திரைப்படங்களில் நடித்து விட்டு ஆர்யா உடன் நடித்த நான் கடவுள் திரைப்படத்தையே தன்னுடைய கடைசி திரைப்படம் ஆக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சென்னைக்கு வந்திருக்கும் பூஜாவை சில ஊடகங்கள் பேட்டி எடுத்துள்ளன.                                                                                

அடுத்த திருமணத்திற்கு தயார் ஆகும் பிக்பாஸ் ரேஷ்மா ! காதலர் புகைப்படம் உள்ளே !

Youtube

அப்போது இதற்காகவே காத்திருந்த பேட்டியாளர்கள்பூஜாவிடம் ஏன் ஆர்யா திருமணத்திற்கு வரவில்லை என்கிற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்த பூஜா நீண்ட கால நெருங்கிய நண்பர் ஆர்யாவின் திருமணத்திற்கு தான் வர முடியாததற்கு தான் ஆஸ்திரியாவில் இருந்ததுதான் காரணம் என்று கூறி இருக்கிறார்.                                     

நடிகர் ஆர்யாவுடன் ஒரு படம் நடித்தாலே கிசுகிசுக்கள் எழும் நிலையில் ஆர்யாவுடன் நான்கு படங்கள் ஒன்றாக நடித்தவர் நடிகை பூஜா. அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இறுதியில் இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் தான் திருமணம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.                                                 

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பு..மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு புகார்!

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                        

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity gossip