Lifestyle

அதிக சம்பளம் வாங்கும்.. ‘டாப்-10’ பணக்கார தென்னிந்திய ‘நடிகைகள்’ இவர்கள் தான்!

Manjula Sadaiyan  |  Mar 15, 2019
அதிக சம்பளம் வாங்கும்.. ‘டாப்-10’ பணக்கார தென்னிந்திய ‘நடிகைகள்’ இவர்கள் தான்!

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் டாப்-10 நடிகைகள் குறித்து இங்கே பார்க்கலாம். நடித்த படங்கள், விளம்பரங்கள், மார்க்கெட் வேல்யூ ஆகியவற்றை கணக்கில் கொண்டு எடுத்திருக்கும் இந்த முடிவுகளில் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளம், நடிக்கும் படங்கள் மற்றும் நடித்து சம்பாதித்த பணம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் அழகிகளைப் பற்றிய ஒரு சிறு பார்வை உங்களுக்காக இங்கே.

அனுஷ்கா ஷெட்டி(Anushka Shetty)

‘பாகுபலி’ புகழ் ராணி அனுஷ்காவிற்கு(Anushka) இந்தப் பட்டியலில் முதல் இடம். சொத்து மதிப்பினைப் பொறுத்தவரையில் முதலிடத்தில் இருக்கும் அனுஷ்கா(Anushka) புகழில் நயன்தாராவை(Nayanthara) விட குறைந்து இருந்தாலும், பாகுபலி படத்தில் அதனை ஈடுகட்டி நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார். ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடிகள் வரை சம்பளம் வாங்கும் அனுஷ்காவின்(Anushka) மொத்த சொத்து மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர்கள்களுக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா (Nayanthara)

தனியாகவும், ஹீரோக்களுடனும் இணைந்து தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்துவரும் நயன்தாராவின்(Nayanthara) புகழோ, மதிப்போ சற்றும் குறையவில்லை. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளுத்துக் கட்டும் நயன்தாரா(Nayanthara) ஒரு படத்திற்கு 2.5 முதல் 3 கோடிவரை வாங்குவதாக கேள்வி. இவரது சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

தமன்னா

தனது வசீகர நடிப்பாலும், கிறங்கடிக்கும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா இந்தப் பட்டியலில் 3-மிடம் பிடித்திருக்கிறார். பாகுபலி உள்ளிட்ட படங்களின் வெற்றியால் மார்க்கெட் மதிப்பு இன்னும் ஏறியிருக்கிறது ஒரு படத்திற்கு சுமார் 2-3 கோடி வாங்குகிறார் என்று கேள்வி, சொத்து மதிப்பு உறுதியாக தெரியவில்லை.

சமந்தா

திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா ஒரு படத்திற்கு சுமார் 2.25 கோடிகள் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் படங்கள் தவிர்த்து விளம்பரப்படங்கள் வழியாகவும் சமந்தா வருமானம் ஈட்டி வருகிறார். நடிக்கும் படங்கள், புகழ், விளம்பரப்படங்கள் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் சமந்தா.

காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் இனிப்பான நடிகை காஜலிற்கு இந்தப் பட்டியலில் 5-வது இடம். படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் இந்த இடத்தை தக்க வைத்திருக்கும் காஜல், ஒரு படத்திற்கு 2 கோடிகள் சம்பளமாக வாங்குகிறார். காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்து உறுதியாக தெரியவில்லை.

சுருதிஹாசன்

இந்தியில் ஹிட்டடித்தாலும் தென்னிந்திய மார்க்கெட்டில் மேலே சொன்ன நடிகைகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால் இந்தப் பட்டியலில் சற்று கீழிறங்கி 6-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் சுருதிஹாசன். படமொன்றிற்கு 1 முதல் 1.5 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகிறார் சுருதி.

ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் படமொன்றுக்கு சுமார் 1 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார். நடிக்கும் படங்கள், புகழ் மற்றும் சம்பளம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரகுல்.

ஸ்ரேயா சரண்

தமிழில் உச்சத்தில் இருந்த ஸ்ரேயாவிற்கு கைவசம் தற்போது படங்கள் அதிகமாக இல்லை.எனினும் அவரின் சொத்து மதிப்பு மற்றும் புகழ் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் அவருக்கு 8-வது இடம்.ஸ்ரேயாவின் சம்பளம் 1 கோடிக்கும் சற்று அதிகம் என்று கூறுகிறார்கள் சம்பளம் அந்தளவிற்கு இருக்கிறதோ இல்லையோ அம்மணிக்கு சொத்து இருக்கிறது, ஸ்ரேயாவின் சொத்து மதிப்பு 12.5 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாம்.

த்ரிஷா

தமிழின் முன்னணி நடிகையாக இருந்தாலும் பல படிகள் கீழிறங்கி த்ரிஷா இந்தப் பட்டியலில் 9-வது இடத்தை தக்க வைத்துள்ளார், எவ்வளவு சர்ச்சைகள் வந்தபோதும் த்ரிஷாவின் புகழ் சற்றும் குறையவில்லை. படமொன்றிற்கு 80 லட்சம் முதல் 1 கோடிவரை சம்பளமாகப் பெறுகிறார். த்ரிஷாவின் சொத்து மதிப்பு தெரியவில்லை.

ஹன்சிகா மோத்வானி

தமிழ்நாட்டின் சின்ன குஷ்பூவிற்கு இந்தப் பட்டியலில் கடைசி இடம். தொடர்ந்து சில ஆண்டுகள் புகழின் உச்சத்தில் இருந்த ஹன்சிகா கைவசம் தற்போது ஒருசில படங்கள் மட்டுமே உள்ளன. படமொன்றுக்கு சுமார் 80 லட்சங்கள் வரை ஹன்சிகா சம்பளமாகப் பெறுகிறார்.

மணி, மணி, மணி……

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle