முகப்பருக்கள் எப்போதுமே பருவ வயதினருக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுக்கிறது. பருக்கள் வருவதால் தான் பருவ வயது என்கிற பெயரே வைக்கப்பட்டதோ என யோசிக்கும்படியான நிலைக்கு டீனேஜர்ஸ் (teenagers) தள்ளப்படுகின்றனர்.
முகப்பருக்களால் தன்னம்பிக்கை இல்லாத நிலையில் பலரின் பருவ வயது பல சமயங்களில் இருளில் கரைகிறது. முகப்பருக்களை மறைக்க நாம் இடும் மேக்கப் பொருள்கள் அதனுடைய ரசாயன தன்மையால் மேலும் பருக்களை முகமெங்கும் பரவ செய்து விடுகிறது.
மேலும் பருக்கள் (acne) முகத்தில் மட்டும் வருவதில்லை. முதுகு பகுதி மார்பு பகுதி மற்றும் பின்புறங்களில் கூட வரலாம். இவை எதனால் வருகிறது என்று பார்த்தல் தூசி, கிருமி மற்றும் இறந்த செல்கள் ஆகியவற்றின் கலவையானது சருமத்தில் தேங்கி அதனால் ஒருவித பேக்டீரியா உருவாவதால் பருக்கள் வெளியே வருகின்றன.
லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபி க்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!
youtube
இதனை தவிர பெண்களுக்கு இருக்கும் பி சி ஓ எஸ் , கர்ப்பம் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் கொண்ட சருமம் கூட பருக்களை உருவாக்க காரணம் ஆகிறது. உடல் சூடு மூலம் வரும் பருக்களை விடவும் எண்ணெய் பசை சருமத்தால் வரும் பருக்கள் அதிகமாக இருக்கிறது.
பருக்களை முற்றிலும் நீக்க இயற்கை வழிமுறைகள்தான் சரியானது மற்றும் பாதுகாப்பானது. அதற்கான சில இயற்கை முறைகளை இங்கே தருகிறோம். நம்பிக்கையுடன் செய்தால் உங்கள் முகம் நிலவை விடவும் அழகாக மாறி ஜொலிக்கும் பேரழகை பெறுவீர்கள்.
ஆவி பிடிப்பது
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்துளைகள் திறந்து இறந்த செல்கள் வெளிவருகின்றன. ஆவி பிடித்த பின்னர் பஞ்சு மூலம் துடைத்து எடுத்தால் தூசு அழுக்கு எண்ணெய் பசை போன்றவை வெளியேறி பருக்கள் உருவாவதை தடுக்கிறது.
கிராம்பு
பருக்களை போக்குவதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம்பினை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது வெந்த உடன் இறக்கி வைத்து குளிர செய்து அதன்பின்னர் வெந்த கிராம்பை அரைத்து பருக்களில் தடவி வர வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.
அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி
youtube
சந்தன பொடி
இரண்டு ஸ்பூன் சந்தன பொடியுடன் தயிர் மற்றும் கடலைமாவை சேர்த்துக் கொள்ளவும். இதனோடு சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி உலரவிடவும், அதன் பின்னர் முகம் கழுவி வர பருக்கள் மறைவதோடு முகமும் பொலிவாகும்.
தேன்
தேன் என்பது முக அழகிற்கான முக்கிய பொருள். சருமத்தின் நண்பன். தேனை பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியாக முதலில் பால் மூலம் முகம் கழுவி அதன் பின்னர் நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் பருக்கள் மறைந்து விடும்.
இப்படி தொடர்ந்து செய்து வர பருக்கள் உங்கள் முகத்தில் மாயமாகி பொலிவும் அழகும் மின்னும் தேவதை முகத்தை பெறுவீர்கள்.
youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Acne
பார்லருக்கு போகாமலே அழகைப் பாதுகாக்கலாம்! கரும்புள்ளிக்கு வைக்கலாமா ஒரு முற்றுப்புள்ளி!
Deepa Lakshmi