
தற்போது யார் வேண்டுமானாலும் இலவசமாக ஒரு புதிய யூடியூப் சேனல் (youtube channel) ஆரம்பிக்கும் வசதி இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும், படிக்க, சமைக்க, நமக்கு ஒரு உந்துதல் வேண்டும் என்றாலும், நாம் ஒரு வீடியோ மூலம் கற்றுக்கொள்ளலாம், நம்மை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி உங்களுக்கு உதவும் வகையில் அமைந்த சில பிரபலமான சேனல்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
1. என்’ஓவென்(N’Oven)
கடந்த இரண்டரை வருடங்களில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் தாண்டி விட்ட இந்த சேனலில் பல வகையான கேக், குக்கீஸ் போன்ற பேக்கிங் ரெஸிபிகளை கற்றுக் கொள்ளலாம். இவருடைய சேனலில் கற்றுக்கொள்ள இருக்கும் வீடியோகளின் பட்டியல் இதோ:
- இருநூறுக்கும் மேற்பட்ட முட்டை இல்லாமல், ஓவென் இல்லாமல் செய்யக்கூடிய பேக்கிங் வகைகள்.
- டெஸெர்ட்(dessert) வகைகள்.
- பேக்கிங் செய்யாமல் செய்யக்கூடிய குக்கீஸ் போன்றவைகள்.
- ஐஸ்கிரீம் ரகங்கள்.
- எளிமையாக செய்யக்கூடிய சுவையான பிஸ்சாக்கள்.
நீங்கள் பேக்கிங்கில் மிகவும் ஆர்வமாக இருந்தால், இந்த சேனலில் இருந்து உங்கள் பாடத்தை கற்றுக்கொள்ள துவங்குங்கள்!
2. லூசி வின்தாம்-ரீட் (Lucy Wyndham-Read)
பாதுகாப்பான முறையில், வீட்டில் இருந்தபடியே எப்படி ஒர்கவுட் செய்வது என்பது பற்றி 900 க்கும்மேல் இலவசமான வீடியோக்கள் இந்த சேனலில் இருக்கிறது. 25 வருடங்களாக ஒரு பயிற்சியாளராக இருந்து, எல்லா நிலைகளுக்கும் ஜிம்க்கு போகாமலே, ஜம் என்று ஆகிட வீடியோகளை (video) உருவாக்கியுள்ளார்.
தினமும் செய்யக்கூடிய சின்ன சின்ன உடற்பயிற்சிகளில் ஆரம்பித்து, அவை 7 நிமிட ஒர்கவுட், 4 நிமிட ஒர்கவுட் என்று பல வீடியோக்கள் உங்களுக்கு ஏற்றவாறு உள்ளது. மேலும், மெனோபாஸ் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் எடையை குறைக்கும் விதத்தில் உடற்பயிற்சி, உடல் முழுவதும், தொப்பையை மட்டும் குறைக்க, கைகளில் உள்ள சதையை குறைக்க என தனித்தனியாகவும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரது வீடியோவை கேட்டுக்கொண்டே செய்தால், நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். நிச்சயம் ட்ரை பண்ணுங்கள்! ஃபிட் உடலை பெறுங்கள்!
இந்த சேனலை பார்த்து ரசிக்க இங்கு கிளிக் செய்யவும்
3. ஹெல்லி (Helly)
புத்தகங்களைப் பற்றியும், மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களைப் பற்றியும், எப்படி ஆக்கபூர்வமாக சிந்திப்பது என்பது பற்றியும் இந்த சேனலில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் வேலைகள், ஆங்கிலம் கற்றுக்கொள்ள, புத்தகங்கள் பற்றிய திறனாய்வு என பல கோணங்களில் மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோக்கள் அடங்கிய சேனல் இது. அவருடைய விளக்கங்கள் ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக அமைந்துள்ளது.
இந்த சேனலை பார்த்து ரசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
4. மெஸ்மெரைஸ் மேக்கப் (mesmereyes makeup )
சமையல், வீட்டு குறிப்புக்கள் , ஆரோக்கியம் என அனைத்தயும் பார்த்து விட்டு அழகுக்கென ஒரு சேனலை பார்க்காமல் இருக்கலாமா?! மணப்பெண் மேக்கப் கலைஞரின் அழகிய சேனல் இது. ஒப்பனை வீடியோக்கள், மேலும் ஒப்பனை குறிப்புகள் என சில வீடியோக்கள் அரம்பித்திருக்கிறார். ஆங்கிலத்தில் தெளிவான உச்சரிப்பில் அருமையான, விளக்கமான வீடியோக்களை பார்த்து, ஒப்பனை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு அற்புதமான தோற்றத்தில் வெளியில் செல்லுங்கள்!
5. ஹோம் குக்கிங் (Home Cooking)
தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் ஃபடா-ஃபட்(fata-fut) ரெஸிபிகளை, தினமும் புது புது டிஷ் செய்து கலக்கும் சேனல் இது. தெளிவான வீடியோ, தெளிவான உச்சரிப்பு, வட இந்தியா, தென் இந்தியா, சைநீஸ், கான்டினென்டல் என எல்லா ரகங்களிலும் ‘ஹேமா சுப்ரமணியம்’ கை வண்ணத்தில் எளிமையாக விளக்கி பிரமிக்க வைக்கிறார்.
இந்த சேனலை பார்த்து ரசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
6. குயின்பீபராடைஸ் தமிழ்(Queen Bee Paradise Tamil)
வீட்டை எப்படி சரியாக வைத்துக் கொள்வது, எப்படி அலங்கரிப்பது, சமையல் போன்ற பல வீடியோக்கள் கொங்கு தமிழ் ஸ்லாங்கில், மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சம்பாதிப்பது பற்றியும், ஒவ்வொரு செயலையும் எப்படி எளிமையாக செய்வது என்பது பற்றியும், ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது பற்றியும், தினசரி செய்யும் செயல்களை எப்படி எளிமையாக செய்வது என்றும், பெண்களுக்கான மோட்டிவேஷனல்(motivational) வீடியோக்களும் என அழகாக விளக்கும் ஒரு அற்புதமான சேனல் இது.புதிய விஷயங்களை எளிதாகக் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், இந்த சேனலிலிருந்து துவங்குங்கள் !
இந்த சேனலை பார்த்து ரசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
7. ரேகா பத்மநாபன் (Rekha Padmanaban official)
விழிப்புணர்வு வீடியோக்கள், விளக்க உரை வீடியோக்கள் என அழகான தமிழில் கலக்குகிறார் ரேகா பத்மநாபன்.மனம் சம்மந்தமான பேச்சுக்கள் இளைஞர்களுக்கு நல்ல விழிப்புணர்வையும், புரிதலையும் தருவதாக இருக்கிறது.நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும்போது, வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளைப் (lifestyle lesson) இந்த சேனலின் மூலமாக பெறலாம்!
வெவ்வேறு விஷயங்களுக்கான பல புதிய யூடியூப் சேனல்கள் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் தேவைக்கேற்ற வீடியோயோக்களைப் பார்த்து உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக்குங்கள்.
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi