
பெண்களே! உங்களுக்காக ஒரு புதிய சிகை அலங்காரத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். அது எந்த ஒரு கவர்ச்சியான ஆண்மகனையும் இரண்டாம் முறை உங்களை பார்க்க வைக்கும். சீரற்று இருப்பது ஒரு விதத்தில் கவர்ச்சியானதும் கூட, மேலும் எந்த பெண்ணும் இத்தகைய சிகை அலங்காரத்தை செய்து கொண்டால் அதிக பாராட்டுகளை பெறுவார்கள்.
குறிப்பிடதக்க விடயம் என்னவென்றால் இந்த சிகை அலங்காரம் பி-டவுனில் கூட பிரபலமாகி விட்டது. நீண்ட கூந்தளோடு இருப்பதில் இருந்து தற்போது முடியை சிறிதாக வெட்டி கொள்வது வரை, இந்த பாலிவூட் நடிகைகள் இந்த சீரற்ற அழங்காரத்தை பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை. அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா?
தொடர்ந்து பாருங்கள்!
பாத்திமா சானா ஷேக் ஒரு அழகான பெண். அவர் எந்த வகையான சிகை அலங்காரத்தையும் செய்வார். டங்கள் படத்தில் அவருடைய பாய்-கட் ஒரு கம்பீரமான பெண் தோற்றத்தை கொடுத்தது, மற்றும் இன்று, அவர் தன்னுடைய சீரற்ற லோபை எளிதாக இழுத்து விட்டார்.
எனினும் உங்களுக்கு இயற்கையாக சுருட்டை முடி இல்லை என்றால், செயற்கையாக உருவாக்கிக் கொள்ளலாம். முடியை நன்றாக கோதிவிட்டு பின் உங்கள் விரல்களால் காயவைத்து முடியின் அடர்த்தியை கூட்டுங்கள். அடுத்து, உங்கள் அயர்ன் செய்யலாம். நீங்கள் விரல்களை உபயோகப்படுத்த எண்ணினால், உங்கள் முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு விரல்களால் சுருட்டுங்கள். பின்னர் ஒரு ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துங்கள். இது சுலபம் தானே!
யமி கெளதமின் அழகிய தோற்றம்!
யமி கௌதமின் முடி இரண்டு தோற்றங்கள் கொண்டது. அது நேராக மற்றும் சுத்தமாகவும் இருக்கும் அல்லது காட்டுத்தனமாகவும் சீரற்றும் இருக்கும். இரண்டாவது வகை எங்களுக்கு பிடிக்கும். இத்தகைய சிகை அலங்காரம் சிறப்பாக இருப்பதோடு குறைந்த ஸ்டைலிங் மட்டுமே போதுமானது.
ஒரு போனி டைல் நடுவில் அல்லது ஒரு பாதி முடிச்சு போதும் நீங்கள் எளிதாக உங்கள் தலை முடியை அழகுபடுத்தி விடலாம். தலை முடி குட்டையாக இருப்பதால் நீங்கள் விரும்பிய அலங்காரத்தை செய்ய முடியாது என்று நினைக்காதீர்கள். உங்கள் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு பல அலங்காரங்கள் உள்ளது.
பி சி லிவினின் ரெட்ரோ வாழ்க்கை (PeeCee Livin’ That Retro Life)
உங்கள் கண்களுக்கு விருந்தளியுங்கள் பெண்களே, ஏனென்றால் இது பிரியங்கா சோப்ராவின் அரிதான புகைப் படம். அலைபாயும் கூந்தலோடு ஒரு அற்புதமான ஹேண்டிட் புகைப்படம். சீரான சுருலைகள் மற்றும் பக்க வாட்டில் வகுடோடு ஒரு சீரான தோற்றம். இதை ஒப்பிடவே முடியாது.
பிசி போன்று நீங்களும் உங்கள் தலை முடியை அழகுபடுத்தி பார்க்கலாம். மேலும் இந்த சிகை அலங்காரம் உங்கள் முக வடிவமைப்பிர்க்கும் உடல் தோற்றத்திற்கும் ஏற்றதாக உள்ளதா என்று பாருங்கள்.
கங்காணனின் டைட் ரிங்க்லெட்டுகள் (Tight Ringlets Are So Bomb)
சரியான தலை முடி சுருள்கள் இருந்தால், பயப்பட வேண்டாம், உங்களது சிகை அலங்காரம் அற்புதமாக இருக்கும். எனினும் ஒரு விடயத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், சுருள்கள் ஈரத்தன்மையோடு இருப்பது அவசியம்.
அவ்வாறு செய்தால் சுருள்கள் இன்னும் நன்றாக நீடிக்கும் மேலும் சிக்குகள் இருக்காது. நீங்கள் கண்டிஷினர்கள் பயன்படுத்தி உங்கள் தலை முடி சுருள்களை சற்று பளபளப்பாக மாற்றலாம். அவ்வாறு செய்தால் அது ஒரு நாள் முழுவதும் கலையாமல் அப்படியே இருக்கும்.
பொதுவாக நாம் வெளியில், அல்லது குடும்ப விழாக்கள் மற்றும் திருவிழாக்களுக்கு செல்லும் போது இவ்வாறு நமது முடியை அழகாக மாற்றி புது வித சிகை அழங்காரத்தில் காட்சி தரலாம்.
இது போன்ற சிகை அழங்காரம் மாடர் உடைகளுக்கு மட்டுமின்றி பட்டு புடவைகள் மட்டும் லெகங்கா போன்ற சோலிகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்புறம் என்ன புது புது ஹேர் லுக்கில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று ஒரு கலக்கு கலக்குங்க… இனி நீங்க தான் ஸ்டார்.