உங்கள் சிகைக்கு எளிமையான மற்றும் வேறுபட்ட ஜடை வகைகள் (Stylish Braid Hairstyles For Long Hair)

உங்கள் சிகைக்கு எளிமையான மற்றும் வேறுபட்ட ஜடை வகைகள் (Stylish Braid Hairstyles For Long Hair)

பின்னல் ஜடை (braids) எப்போதுமே அழகு தான்.இது பழங்காலத்து சிகை அலங்காரம்  இல்லை. மாடர்ன் ஹேர்ஸ்டைல் (hair style) என்ற பெயரில் இன்று பல பெண்கள் பிரீ ஹேரில் இருப்பது சகஜம் ஆகிவிட்டது. ஆனா,பின்னல் பழமை என்று நினைக்காதீங்க... பழமையும் புதுமையும் கலந்து பின்னலை  வைத்து எப்படி எல்லாம் அழகாக இருக்கலாம், எளிமையான பின்னல் (braid) ஹேர்ஸ்டைல் எப்படி பண்ணலாம் என்று நாங்கள் உங்களுக்கு வழிமுறை அளிக்கிறோம். முயற்சி செய்து மகிழ்ச்சி அடையுங்கள்!


உங்கள் கூந்தலில் செய்து பார்க்க வேறுபட்ட ஜடை வகைகள் (Different Types Of Braids)


டைப் 1 -


braid-hairstyles-for-long-hair-1


 1. முன்னால் நேர் வகுடை சின்னதாக எடுக்கவும். புருவம் முடியிற இடத்தை அளந்து,அதுக்கு நேர் முடி எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முடி எடுத்து வலது புறம் பின்னால்  பின்னல் போடவும்.அதே மாதிரி இடது புறத்தில் பின்னல் போட்டு கொண்டே வரவும்..

 2. இப்போது  இரண்டு சைடில் வரும் பின்னல்களை நடுவில் சேர்க்க வேண்டும். சேர்த்து பின்னலாக போட வேண்டும்.கடைசியில் அதற்கு கருப்பு நிறத்தில் பாண்டு போட்டு கட்டுங்கள். அல்லது உங்கள் தலை முடியை ஜடையில் சுற்றி ஒரு பாண்ட்  போல் இழுத்து கட்டுங்கள்.

 3. மீதி இருக்கும் முடியை பிரீ ஸ்டைலில்  விட்டுவிடுங்கள் . பின்னால் இருந்து பார்க்கும் போது ‘Y’ வடிவில் பின்னல் தெரியும்.


அளவான முடிக்கு இது மிக அழகாக இருக்கும்.அலுவலகம் செல்பவர்களுக்கு ,செமி வெஸ்டர்ன் உடைகள் உடுத்தும் போது இந்த ஹேர்ஸ்டைல் அசத்தலாக இருக்கும்!


டைப் 2 -


braid-hairstyles-for-long-hair-in-tamil-2


 1. வலது புறம் காதோரம் முடியை எடுத்து பின்னலை ஆரம்பம் செய்யுங்கள்.உச்ச தலையில் கொஞ்சம் பின்னந்தலையில் கொஞ்சம் என்று எடுத்து  பின்ன வேண்டும்.

 2. அப்படி எடுக்கும் போது பின்னல் குழந்தைகள் வைக்கும் ஹெட் பேண்ட் போல பின்னல் ஒரே நேரில் அமைய வேண்டும்.அப்படியே இடதுபுறம் காதோரத்தில் பின்னலை கொண்டு வந்து அனைத்து முடியையும் இடது புறம் காதோரம் பின்னல் வரும் படி முடிக்க வேண்டும்.

 3. இரண்டு காது ஓரத்தில் சிறிய முடியை முன்னால் தொங்க விடலாம்.பார்க்க மிக அழகாக இருக்கும்.


அணைத்து  வெஸ்டர்ன் ஆடைகளுக்கும்  இந்த ஹேர்ஸ்டைல் பொருந்தும்.


மேலும் படிக்க - டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்ற 10 வகையான அற்புதமான ஹேர் கலரிங்


டைப் 3 -


braid-hairstyles-for-long-hair-in-tamil-3


 1. பின்னல் மற்றும் அழகிய கொண்டை இரண்டும் கலந்து வரும் ஸ்டைல் தான் இது.இடது புறம் ஓரத்தில் இருந்து முடியை எடுத்து வலது புறம் வரும் வாக்கில் பின்னலை தொடங்க வேண்டும்.பின்னி முடித்த பின், தனியாக வைத்து விட்டு..

 2. முன்னால்  வலது புறம் கொஞ்சம் முடியை எடுத்து விடனும்.அதனை கர்லிங் போல சுருட்டி விடவும்.

 3. இப்போ பின்னால் இருக்கும் மீதி கூந்தலை கீழ் இருந்து இரண்டு விரல்களை வைத்துக்கொண்டு சுருட்டி வளைத்து கொண்டை ஊசி வைத்து கொண்டை போடவும்.சிறிது முடிகள் சிலிர்த்து வெளியே வந்தால் அதை சரி செய்ய வேண்டாம்.அப்படியே விட்டால் உங்கள் சிகை அழகாக இருக்கும்.

 4. இப்ப அந்த பின்னலை எடுத்து கொண்டைக்கு மேலே வரும் படி சுற்றி கொண்டை ஊசி கொண்டு சேர்த்துவிடுங்கள் .


இது நைட் பார்ட்டிகளுக்கு மிக அருமையான ஹேர்ஸ்டைல்.ஒரு நீளமான மாக்ஸி டிரஸ் அணிந்தால் இதுபோல் ஒரு சிகை அலங்காரம் மிக அருமையாக இருக்கும்!


Also Read About பெண்கள் சிறந்த சிகை அலங்காரங்கள்


டைப் 4 -


braid-hairstyles-for-long-hair-in-tamil-4


 1. நீட்ட வடிவு முகம்  உள்ளவர்களுக்கு இது பெஸ்ட் ஹேர்ஸ்டைல்.முன்னால் நேராக  கொஞ்சம் முடி எடுத்து, வலது புறம் கொஞ்சம், இடது புறம் கொஞ்சம், என மூன்று தகுதி முடி எடுத்து ஒரு பின்னலை உச்ச தலையில் தொடங்கவும் .

 2. அடுத்த பின்னலுக்கு, வலது புறம் கொஞ்சம் முடியை எடுத்து, அடுத்த பின்னலுக்கு இடது புறம் கொஞ்சம் முடியை எடுத்து, அடுத்த பின்னலை போடவும்.

 3. இப்படி மாரி மாரி முடி எடுத்து ஒவ்வொரு பின்னலை  போடவும்.எட்டு அல்லது ஒன்பது பின்னல் வந்ததும் உங்கள் முடிக்கு ஏத்த நிறத்தில் பேண்ட் ஒன்றை போடுங்கள் அல்லது முன்னதாக சொல்லி இருந்த படி உங்கள் கூந்தலை பயன்படுத்தி கட்டுங்கள்.

 4. அந்த பின்னலை கைகள் வைத்து இழுத்து விடவும். பார்க்க அடர்த்தியான பின்னல் போல தெரியும் படி செய்ய வேண்டும்.


ஜீன்ஸ்-குர்தி அல்லது டீ ஷர்ட் , பாரம்பரிய உடைகள் அனைத்திற்கும் இந்த ஹேர்ஸ்டைல் சிறந்தது .அடர்த்தியான நீளமான  கூந்தலுக்கும் இது ஒரு அசத்தலான ஹேர்ஸ்டைல் !


டைப் 5 -


braid-hairstyles-for-long-hair-in-tamil-5


 1. முன்னாடி கொஞ்சம் முடி எடுத்து பஃப்(puff) வைக்க வேண்டும்.பின்னர், அதற்கு கீழே கொஞ்சம் முடி எடுத்து பஃப் வைக்க வேண்டும்.மீண்டும் அதற்கு கீழ் அதே அளவில் முடி எடுத்து பஃப் வைக்க வேண்டும். ஆக தொடர்ச்சியாக மூன்று ஃபப் வச்சாச்சு.

 2. இப்போ இடது பக்கமா இருக்கும் முடியை கிராஸ் பின்னலா பின்னுங்கள்.இதை மீதி இருக்கும் கூந்தலுடன் சேர்த்து, போனி ஸ்டைல் போல் சேர்த்து , கொஞ்சம் முடி எடுத்து ஹேர் பேண்ட் மாதிரி சுத்தி கட்டுங்கள்.


இது ரொம்ப ஸ்டைலிஷ்ஷான ஹேர்ஸ்டைல்.ஷர்ட், டிரஸ், பார்ட்டி ஆடைகளுக்கு இந்த ஹேர்ஸ்டைல் அட்டகாசமாக இருக்கும்.


டைப் 6 -


braid-hairstyles-for-long-hair-in-tamil-6


 1. தலையில் நடுவில் வலது காதுக்கு மேல் இருந்து இடது காதுக்கு மேல் வரை வகுடு எடுத்து கொண்டு முன் பாகத்தில் இருக்கும் முடியை இடது காதோரம் இருந்து ஆரம்பித்து பின்னல் தொடங்க வேண்டும்.

 2. கொஞ்ச கொஞ்சமாக ஒவ்வொரு பின்னலுக்கும் முடி எடுத்து ஹெட் பேண்ட் வைத்தது போல பின்னலை கொண்டு வர வேண்டும்.

 3. வலது காதுக்கு கொஞ்சம் அருகில் வரும் போது முடியை எடுக்காமல் தொடர்ந்து பின்னல் போட்டு கடைசியில் பேண்ட் வைத்து முடித்து கொள்ளுங்கள்.

 4. இன்னொரு பாகம் முடியை அப்படியே பிரீ ஸ்டைல்லில் விடுங்கள் .


டீ ஷர்ட், ஜீன், கிராப் டாப்-ஷார்ட்ஸ் என்னும் எல்லா நவீன உடைகளிலும் இது பொருந்தும். எளிமையில் ஒரு மாடர்ன் லுக் தரும்  சிகை இது! சரி தானே?


டைப் 7 -


braid-hairstyles-for-long-hair-in-tamil-7


 1. வலது புறம் வாக்கில் கோணல் வகுடு எடுத்து, இடது புறம் இருக்கும் முடியை அழகாக சீவி கொள்ளுங்கள்.

 2. வலது புறம் இருக்கும் முடியை கொஞ்ச கொஞ்சமாக காது வரை நெருக்கமாக இருபுறமும் எடுத்து பின்னல் போட வேண்டும்.

 3. காதுக்கு அருகில் வந்ததும் முடி எடுத்து பின்னுவதை நிறுத்திவிட்டு, உங்கள் முடியின் சராசரி நீளம் வரை பின்னல் போட்டு கொண்டு, மீதும் இருக்கும் முடியை பிரீ ஸ்டைலில் விடுங்கள் .மிகவும் எளிதில் போடக்கூடிய பின்னல் இது. பார்க்கவும் அழகாக இருக்கும்!


பளபளப்பான நேர் கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த ஸ்டைல்  மேலும் அழகூட்டும்.எல்லாவிதமான வெஸ்டர்ன் ஆடைகளிலும் பொருந்தும் இனொரு ஹேர்ஸ்டைல் உங்களுக்காக! 


ஹேர் ஸ்டைல் அடிப்படைகள்: 


POPxo பரிந்துரைக்கிறது -


பஃப் ஹேர் வழிமுறை


கூந்தலில் பெண்டு செய்து கட்டும் முறை 


எளிதில் கொண்டை போட 


பின்னல் என்றால் போரிங்னு  இனிமே அழுதுட்டு இருக்க வேண்டாம். இது மாரி ஸ்டைலிஷ் பின்னல் போட்டு ஒரு கலக்கு கலக்குங்க...


படங்களின் ஆதாரங்கள் - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.