சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய பின்பற்ற வேண்டிய வீட்டுக் குறிப்புகள்!

சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய பின்பற்ற வேண்டிய வீட்டுக் குறிப்புகள்!

இன்றைய இளம்வயது பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையற்ற மாதவிடாய் பிரச்சினை இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணமே ஹார்மோன் சமநிலையின்மையும், ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையும் தான். 

மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இருப்பது மற்றும் சீரற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை ஆகியவை பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும். 

சீரற்ற மாதவிடாய் என்பது குறிப்பிட்ட நாள் தாண்டி வருதல், மாதவிடாய் அம்மாதத்தில் வராமல் இருப்பது, அதிக நாட்கள் இருப்பது, சில நாட்கள் மட்டுமே இருப்பது, கொஞ்சமாக இருத்தல், அதிகமாக இருத்தல், அதிக வலி போன்ற பல வகைகளில் குறிப்பிடலாம். 

pixabay

எப்போதாவது மாதவிடாய் வராமல் இருப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் அடிக்கடி இது நடந்தால் சற்று நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக மாறுகிறது. நம்முடைய பாரம்பரிய முறைப்படி வீட்டில்  இருக்கும் பொருட்களை கொண்டே முறையற்ற மாதவிலக்கை சரிசெய்யும் முறையைப் பற்றி இங்கே பார்க்கலாம். 

இஞ்சி 

இஞ்சி பெண்களின் மாதவிடாய் சீர்படுத்தப் பெரிதும் உதவுகின்றது. இது மாதவிடாயின் தன்மையைச் சீராக்குவது மட்டுமில்லாமல் வலியையும் குறைக்கிறது. இஞ்சி துண்டை எடுத்து தண்ணீரில் 5 நிமிடம் சூடு செய்து பின்பு அந்த தண்ணீரில் சிறிது தேன் கலந்து தினமும் 3 முறை சாப்பாட்டிற்குப் பின் குடித்து வந்தால் நல்லது.

இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணமிக்க அமிலங்கள் உடலின் ஹார்மோன் சுரப்புகளை சரிசெய்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் கருப்பை சம்பந்தமான அனைத்து குறைபாடுகளையும் போக்குகிறது. 

மேலும் படிக்க - பனிக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல் குணமாக வீட்டு மருத்துவம்!

பெருஞ்சீரகம் 

பெருஞ்சீரக விதைகள் மாதவிடாயை சீர்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெருஞ்சீரகத்தில் இயற்கையாகவே கிருமிநாசினி தன்மை உள்ளது. இது மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்த  பெருமளவில் உதவி செய்கிறது. மேலும் சீரான மாதவிடாய்க்கு உதவுகிறது. இரண்டு தேக்கரண்டி அளவு பெருஞ்சீரக விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலை அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் மிகவும் நல்லது. இதை தினமும் செய்து வந்தால் மாதவிடாய் சீராக இருக்கும். 

pixabay

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட் உடலில் நீச்சத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. இது சீரற்ற மாதவிடாய் பிரச்னை மட்டுமின்றி, பெண்கள் பொதுவாக மாதவிடாய் காலங்களில் (irregular menstrual) அனுபவிக்கும் சிக்கலைகளைத் தீர்க்கும். குறிப்பாக அந்த சமயத்தில் இருக்கும் கால் வீக்கத்தை குறைக்கும். இதனால் பீட்ரூட்டை வாரம் இரண்டு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஜூஸ் செய்து கூட அருந்தலாம். 

மஞ்சள்

மஞ்சள் இயற்கையிலேயே ஒரு சிறந்த நோய் நிவாரணியாகும். மேலும் கருப்பை மற்றும் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும் ஒரு இறந்த உணவு ஆகும். மஞ்சள் உடலில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவைக் கொண்டிருக்கிறது,

இது கருப்பையை விரிவடையச் செய்து மாதவிடாயைத் தூண்டுகிறது. மாதவிடாய் முறைகேடுகளைக் குறைக்க, தவறாமல் பாலில் சிறுது மஞ்சள் கலந்து குடிக்கலாம். அல்லது மஞ்சளை சிறிது எடுத்து பால், தேன், நாட்டு சர்க்கரை போன்றவற்றில் கலந்து உண்ண விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

மேலும் படிக்க - பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பிரகாசமான சன்செட் ஐ-மேக்கப் , போடுவது எப்படி ?

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மாதவிடாயைத் தூண்டுகிறது. பப்பாளி, அன்னாசிப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடலாம். இது மாதவிடாய் காலங்களில் சிறந்த நன்மைகளை ஏற்படுத்தும். பப்பாளி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டும் கரோட்டின் கொண்ட ஒரு பழமாகும். இது முன்கூட்டியே மாதவிடாயை தூண்டுகிறது. 

pixabay

ஏலக்காய் 

நமது நாட்டில் விளையும் ஏலக்காய் பல நோய்களை போக்கும் மருத்துவ குணங்களை கொண்டது. இந்த ஏலக்காய்கள் சிலவற்றை பச்சையாகவும் அல்லது பொடி செய்து பால் கலக்காத தேநீரில் கலந்து அருந்தி வர முறையற்ற மாதவிடாய் நீங்கும்.

இலவங்கப்பட்டை 

இலவங்கப்பட்டை என்பது நறுமணம் தரும் ஒரு மசாலா பொருள் மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட நற்குணங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இலவங்கப்பட்டை பெண்களின் மாதவிடாய் சீர் படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் ஹார்மோன் செயல்பாட்டிற்கும் நன்மை செய்கிறது. சிறிது இலவங்கப் பட்டையை எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மாதந்தோறும் சீராக மாதவிடாய் இருக்கும். 

ஆப்பிள் சீடர் வினிகர் 

சீரற்ற மாதவிடாய்க்கு முக்கியமான காரணமாக இருப்பது இன்சுலின் அளவு மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதும் தான். இதை இரண்டையும் சீர்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவுகிறது. இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து தேன் விட்டு நன்கு கலக்கி தினமும் சாப்பாட்டிற்கு முன் குடித்து வந்தால் சீரற்ற மாதவிடாய் (irregular menstrual) சரியாகும். தற்போது நவீன அங்காடிகளில் ஆப்பிளில் இருந்து செய்யப்பட்ட வினிகர் கிடைக்கிறது.

pixabay

கொத்தமல்லி 

கொத்தமல்லி மாதவிடாய்க்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவம். 3 கிராம் கொத்தமல்லியை 150 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். கொத்தமல்லியை அரைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இந்த சீரற்ற மாதவிடாயில் இருந்து விடுபடலாம்.  

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது நம் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமைகிறது. குறிப்பாக முறையற்ற மாதவிடாய், பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்கள், தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.  

யோகா

யோகா பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்குப் பெரிய ஒரு தீர்வை வழங்குகிறது. 2013ம் ஆண்டு 126 பெண்கள் 35லிருந்து 40 நிமிடம் வாரத்திற்கு ஐந்து நாட்கள் யோகா பயிற்சியில் தொடர்ந்து ஆறு மாதம் ஈடுபட்டு வந்தனர்.

முடிவில் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த முறையற்ற மாதவிடாய் (irregular menstrual) சீராகி நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் யோகா பெண்களின் மாதவிடாயின் போது வலி குறையவும், மன உளைச்சல், பதட்டம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் வழிவகுக்கிறது.

மேலும் படிக்க - முன் ஜென்ம பாவங்கள் நீங்கி உங்கள் நிகழ்காலம்/எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமா?

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!