உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!

உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!

வெங்காயத்தாள் ஆங்கிலத்தில் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கபடுகிறது. சீன உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கந்தச்சத்து அதிகமாக உள்ளது. 

வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன. 

வெங்காயத்தாள் கீரை (spring onion) வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் பல நன்மைகள் உள்ளது. 

pixabay

புற்றுநோய் 

வெங்காயத்தாளில் உள்ள பெக்ஷன் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

கண் பிரச்சனை 

வெங்காயத்தாளினை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து அதற்கான தீர்வையும் அளிக்கிறது. கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவை கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வந்தால் மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும். 

செரிமான பிரச்சனைகளுக்கு  

வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும்.

இதயம் 

வெங்காயத்தாள் (spring onion) இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் உதவுகிறது. மேலும் வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு 90% குறையும்.

pixabay

கொழுப்பு 

வெங்காயத்தாளை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.

பிரசவத் தழும்புகள் உங்கள் மனதிற்கு கவலை அளிக்கிறதா? தீர்வுகள் இதோ !

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 

இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. 

சர்க்கரை அளவை குறைக்க 

இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.  

pixabay

ஆஸ்துமா 

வெங்காயத்தாள் நாம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் போது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் உள்ளது.

பல்வலியை குணப்படுத்த 

பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

கொழுப்பை குறைக்க 

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாள் (spring onion) இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

எலும்பை பலமாக்குகிறது 

வெங்காயத்தாளில்விட்டமின் சி மற்றும் கே அதிகம் இருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு இரண்டுமே முக்கியம். விட்டமின் சி கோலாஜன் உருவாவதற்கு உதவுவதால் அது எலும்பை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்கிறது. 

பளிச்சென்ற கண்களுக்கு ஐ-லாஷ் கர்லர்ஸ்! சரியாக பயன்படுத்துகிறீர்களா?

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!