இற்றைய நாள் நல்லதொரு நாளாக அமையப்பெற்ற ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இற்றைய நாள் நல்லதொரு நாளாக அமையப்பெற்ற ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை தசமி திதி விவாகம் நட்சத்திரம். தை மாதம் 5ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம்

இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே அமையும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும். வாய்ப்பு தகவலாக கிடைக்கும் தனவரவு உண்டு.  கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும்.

ரிஷபம்

இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சந்தோஷம் மன மகிழ்ச்சி கிடைக்கும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். சுப காரியத்தை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும்.

மிதுனம்

கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. நாளின் பிற்பகுதியில் சற்று அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் செலவினங்கள் உண்டு. மொத்தத்தில் இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும்.  

கணவர் ஈஸ்வர் உடனான பிரச்னை... கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

கடகம்

நிதானம் தேவை. நாளின் பிற்பகுதியில் சற்று அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட செயல்பாடுகளும் சிந்தனைகளும் வெற்றியை கொடுப்பதாக அமையும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில்களை நோக்கி திட்டமிடுதல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீரடையும்

சிம்மம்

அன்பர்களுக்கு நாளின் முற்பகுதி மிக நல்ல முறையில் துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் பெறுவதற்கான நேரம் சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வி நிலை சிறப்பாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கடன் வாங்குதல் போன்றவற்றைப் பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும்.  

கன்னி

அன்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். கல்வி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் நன்மையாகவே முடியும். கைக்கு வர வேண்டிய பணம் சற்று காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு.

youtube

துலாம்

நேயர்களுக்கு இந்த நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும். சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு அலைச்சல் கூடுதலாக இருக்கும். இருப்பினும் நன்மையாகவே முடியும். தன வரவிற்கு வாய்ப்பு உண்டு. உங்களுடைய பேச்சுக்கான செல்வாக்கு கூடும். மேலதிகாரிகளின் பாராட்டுரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  

விருச்சிகம்

குழந்தைகளால் மனக்கவலை உண்டாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே உறவு நிலை சீராக இருந்துவரும் பேச்சுவார்த்தையில் சற்று கவனம் கொள்வது நல்லது பற்றாக்குறை இருந்து வரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.  பேச்சில் நிதானம் தேவை. வாகன வகையிலும் சொத்து வகையிலும் ஆதாயம் உண்டு.

உங்கள் நெஞ்சம் பேசும் காதல் மொழி பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டு காதல் செய்யுங்கள்

தனுசு

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் சுபச் செலவுகள் பற்றிய பேச்சு வார்த்தையும் சிந்தனையும் ஏற்படும். வாகன வகையில் லாபம் உண்டு. கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் சற்று அலைச்சல் இருந்தாலும் நன்மையாகவே முடியும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும் நாளாகும்.

மகரம்

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தனவரவு உண்டு இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பிரயாணம் உண்டு. எடுக்கும் காரியங்கள் நன்மையில் முடியும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் நீண்ட நாள் நண்பர்கள் சந்திப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களாலும் உறவினர்களாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராக இருந்துவரும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மேலும் அவர்களுடைய காரியங்கள் வெற்றியடையும். 

மீனம்

நண்பர்களுக்கு குடும்ப உறவு மேம்படும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகம். இருந்தாலும் வேலையில் நிம்மதி கிடைக்கும். சற்று அலைச்சலுடன் கூடியதாக இருந்தாலும் சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் தேடி வரும். உறவினர்கள் நண்பர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும் அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.  

கருச்சிதைவுற்ற பெண்கள்மீது குற்றவுணர்வை சுமத்தாதீர்கள் : நடிகை காஜல் ஆதங்கம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!