இன்று உற்சாகமான காணப்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று உற்சாகமான காணப்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அசுபதி நட்சத்திரம். மார்கழி மாதம் 20ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாகச் சமாளித்து விடுவீர்கள். சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். 

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாக செயல் படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். 

மிதுனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். இன்று நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படும்.  அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால், உற்சாகமாக இருப்பீர்கள்.

பிரசவத் தழும்புகள் உங்கள் மனதிற்கு கவலை அளிக்கிறதா? தீர்வுகள் இதோ !

கடகம்

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். இதுவரை இருந்த சோர்வு, மனக்கவலை நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமையிலிருந்து விடுபட்டு உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம் 

சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.  உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலை பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

youtube

துலாம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வருவைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர் கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இளம்பெண் முதல் முதியோர் வரை வெற்றி வாகை சூடிய பெண்கள்!

விருச்சிகம்

வருங்காலத்திற்கு தேவையான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.  புதிய வாய்ப்பு கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி யுடன் செலவும் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்பட் டாலும் பாதிப்பு இருக்காது. வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும் என்பதால் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர் கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உற்சாகமான நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!