உங்கள் பால்கனி தோட்டத்தை அழகாகவும், பயனுள்ளதாகவும் அமைக்க சில செடிகள்!

உங்கள் பால்கனி தோட்டத்தை அழகாகவும், பயனுள்ளதாகவும்  அமைக்க சில செடிகள்!

இன்று இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கைமுறையில், விருப்பம் போல செடிகளும், மரங்களும் வளர்க்க முடியாமல் போய் விட்டது. இருக்கும் ஒரு சிறிய பால்கனி மட்டும் தான் உங்களுக்கான ஒரே நம்பிக்கை. ஆனால், பலர், இந்த சிறிய பால்கனியில் எப்படி செடிகளை வளர்க்க முடியும், அப்படியே செடிகளை வளர்த்தாலும், பயனுள்ள செடிகளை எப்படி தேர்வு செய்து வளர்ப்பது என்று பல கேள்விகளை முன் வைப்பார்கள்.

உங்கள் பால்கனியின் அளவிற்கு ஏற்றவாறு, நீங்கள் செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம்(balcony garden plants). மேலும் அவை உங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

பின் வரும் செடிகள் சிறிதளவு மண், அதாவது சிறிய பூந்தொட்டிகள், சில மணிநேர சூரிய ஒளி மற்றும் குறைந்த பராமரிப்பு மட்டுமே இருந்தால் போதுமானது. அவை உங்களுக்கு பயனுள்ளதாகவும், நல்ல பலனையும் தரும்.

உங்களுக்காக இங்கே சில செடிகளின் பட்டியல்:

1. துளசி

Shutterstock

துளசியை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த செடிக்கு அதிக மண் மற்றும் பராமரிப்பு தேவை இல்லை. மேலும் இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு கருந்துளசி மற்றும் பச்சை துளசி வகைகள் எளிதாக கிடைக்கும். பத்து ரூபாய் விலையில் இவைகளை எளிதாக பண்ணையில் வாங்கலாம், அல்லது சிறிது விதை கிடைத்தாலும், விதை போட்டு வளர்க்கலாம். இது ஒரு நல்ல மூலிகை. தினமும் துளசி டீ போட்டு அருந்தலாம். ஆரோக்கியத்தை அதிகரிக்க இது உதவும்.

2. கற்பூரவள்ளி

இந்த செடி உங்கள் அருகில் இருக்கும் வீட்டில் இருப்பவர்களிடமோ அல்லது உங்கள் நண்பர்கள் வீட்டில் இருந்தாலோ, ஒரு சிறிய தண்டை வாங்கி நட்டு வைத்தாலே போதும். நன்கு அடர்ந்த செடியாக சில நாட்களிலேயே வளர்ந்து விடும். இதனை டீ அல்லது சீரகம் மற்றும் மிளகுடன் கசாயம் செய்து அருந்தினால், சுவாச பிரச்சனை மற்றும் சளி குணமாகும்.

3. கொத்தமல்லி

Shutterstock

சிறிது மல்லி / தனியா விதைகளை பாதியாக உடைத்து சிறிதளவு மண்ணில் போட்டு, நீர் ஊற்றி பராமரித்து வந்தால், சில நாட்களிலேயே கொத்தமல்லி செடி தளிர் விட தொடங்கும். இந்த கொத்தமல்லி, உங்கள் சமையல் தேவைகளுக்கு  உதவியாக இருக்கும். மேலும் நீங்கள் சமையலறையிலும் ஜன்னலில் சிறிய தேங்காய் சிரட்டை போன்றவற்றில் வைத்தும் வளர்க்கலாம். பராமரிப்பு மிகவும் குறைவும், பலன் மிக அதிகம்.

4. வெந்தய கீரை / கடுகு கீரை

ஒரு சிறிய தொட்டி, ஜாடி அல்லது தேங்காய் சிரட்டை, அல்லது பழைய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், ஏதாவது ஒன்றில், சிறிது மண் போட்டு, வெந்தயம் மற்றும் கடுகு போன்றவற்றை தூவி நீர் ஊற்றி பராமரித்து வந்தால், சில நாட்களிலேயே இவை தளைத்து விடும். இந்த கீரையை, சப்பாத்தி, தோசை, இரசம், போன்ற உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மேலும் படிக்க - சத்தான மண் தயாரிப்பது எப்படி? விவரங்கள் இங்கே!

5. கீரை வகைகள்

Shutterstock

நீங்கள் உங்கள் சமையலுக்காக வாங்கும் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பசலி கீரை, புதினயா போன்ற கீரைகளை, சமையலுக்கு தேவையானதை எடுத்து, இதன் தண்டுகளை குப்பையில் போட்டு விடாமல், ஒரு சிறிய தொட்டியில், கொஞ்சம் மண் நிரப்பி அதில் தண்ணீர் ஊற்றி இந்த தண்டுகளை நட்டு வையுங்கள். சில நாட்களிலேயே இது தளிர் விட தொடங்கும். மேலும் ஒரு மாதத்திலேயே உங்கள் குடும்பத்தினர்களுக்கு தேவையான கீரையும் வந்து விடும். இப்படி இதன் தண்டுகளை மறுசுழற்சி முறையில், கீரையை எடுத்துக் கொண்டு, தண்டுகளை நட்டு வைத்து வளர்த்து வந்தால், நாளடைவில் கடையில் நீங்கள் கீரை வாங்கவே வேண்டாம். ஆரோக்கியமான கீரை உங்கள் வீட்டிலேயே செலவில்லாமல் கிடைக்கும்.  

6. ஆடாதோடை / தூதுவளை / வெத்தலை

இதில் கால்சியம் நிறைந்துள்ளது. தெரு ஓரங்களில் பல இடங்களில் இந்த செடிகள் பிற செடிகளோடு இருக்கும். இல்லையென்றால், பணியில், மிக மலிவான விலையில் இவை கிடைக்கும். ஒன்று இரண்டு செடிகளை மட்டும் முதலில் வைத்து வளர்த்தால், இதன் விதைகளை கொண்டு பல செடிகளை உண்டாக்கி விடலாம். இந்த மூலிகளை தோசை, இட்லி, இரசம், மூலிகை டீ போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம். மூட்டு வலி, நெஞ்சு சளி, போன்ற பிரச்சனைகளை போக்கி, ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.  

7. பச்சை மிளகாய்

Shutterstock

ஒரு சிறிய தொட்டியில் ஒரு காய்ந்த மிளகாயின் விதிகளை போட்டு, நீர் ஊற்றி பராமரித்து வந்தால், ஒரு சில நாட்களிலேயே இந்த செடி வளரத் தொடங்கும். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் நன்கு வளர்ந்து உங்களுக்கு தொடர்ந்து கைகளை தரத் தொடங்கும். உங்கள் வீட்டு தேவைகளுக்கு இனி வெளியில் பச்சை மிளகாய் வாங்க வேண்டாம்.

இந்த செடிகள் மட்டும் இல்லாமல் வெத்தலை, தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், போன்ற செடிகளையும் சிறிது இடத்தில், குறைந்த பராமரிப்பில் வளர்க்கலாம். 

மேலும் படிக்க - பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!