உலக மண் நாள்: மண் அரிப்புகளை நிறுத்துவோம், நமது எதிர்காலத்தை காப்போம் !

உலக மண் நாள்: மண் அரிப்புகளை நிறுத்துவோம்,  நமது எதிர்காலத்தை காப்போம் !

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5ம் தேதி, உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான பூமியின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தவும், நிலையான மண் வளத்தை மேலாண்மை செய்ய பரிந்துரைக்கவும் இந்த தினத்தை கொண்டாடுகிறோம். 2002 ஆம் ஆண்டு சர்வதேச மண் அறிவியல் யூனியன்(International Union of Soil Sciences(IUSS)) மண் தினத்தை கொண்டாட பரிந்துரைத்தது. 2014ஆம் ஆண்டு முதல் உலக மண் தினமாக ஐக்கிய நாடுகள் அவை(UN) முடிவுசெய்தது.

இந்த முயற்சியின் முக்கிய ஆதரவாளரான, மறைந்த தாய்லாந்தின் அரசர், ஹெச். எம். கிங் பூமிபோல் அதுல்யதேஜ், அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 5ம் தேதியையே உலக மண் தினமாக கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஐந்து நொடிக்கும், மண் அரிக்கப்படுகிறது. இதை எச்சரிக்கும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக மண் தினத்தை (world soil day) கொண்டாடுகிறோம். மண் அரிப்பை தடுப்போம்! எதிர்காலத்தைக் காப்போம்! நாம் விரைவில் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றால், மண் தன் வளத்தை விரைவில் இழந்து விடும். அதனால், உலகளவில் உணவுத் தட்டுப்பாடு வந்துவிடும். அனைத்து மக்களும் பங்களிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு(FAO), முழு விவரமும் உள்ள இணையதளத்தை உருவாகியுள்ளது. 

சத்தான மண் : தயாரிப்பது எப்படி?

Pexels

மனித இனம் உணவிற்கு பூமியை சார்ந்து இருக்கிறது. மண் அரிப்பு மக்களை பஞ்சத்தில் தள்ளி, பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படி நாம் அனைவருமே மண் வளத்தை சார்ந்துதான் இருக்கிறோம் என்பதை அறிந்து, அனைவரும் அழகிய தோட்டம் அமைத்து, மரங்களை வளர்த்து, ஆப்ரிக்கா மக்கள் போல் சிறிய விவசாய மக்களும் வறட்சி மற்றும் மண் அரிப்பை சமாளிக்க கற்றுக்கொண்டு, நல்ல பயிர் செய்து, பசியையும், வறுமையும் வர விடாமல் செய்யலாம்.அப்படி அவரவர் வீட்டில் இருந்தபடி அன்றாட காய்களை எப்படி பயிரிடுவது என்று பார்ப்போம். 

முதலில், செடி வளர்க்க நல்ல சத்தான மண் (healthy soil) தேவை. அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் நார் மண்(கோகோ பிட்) - ½
மாட்டுச்சாண உரம் - 1 பங்கு
மணல் - 1 பங்கு
களிமண் அல்லது செம்மண் - 4 பங்கு
காய்கறிக் கழிவுகளில் தயாரித்த உரம் - 1 பங்கு

செய்முறை:

  1. மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக தண்ணீர் விடாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் துளை உள்ள தொட்டிகளிலோ அல்லது செடி வளர்க்கும் பை(குரோ பேக்) யில் போட்டு, செடிகளை ஊன்றி, தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். 
  2. காய்கறி விதைகளை நாத்து விடும் டிரேவில் இந்த மண்ணைப் போட்டு முளைத்தபின் பெரிய தொட்டிகளில் மாற்றி விடலாம். 
  3. கீரை வகையில் இருந்து ஆரம்பிக்கலாம். இதற்கு குறைவான உயரம் உள்ள தொட்டி அல்லது செடி வளர்க்கும் பை(குரோ பேக்) வாங்கிக்கொள்ளவும். 15 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் உங்களுக்கு நல்ல ஆர்வத்தைத் தூண்டும். 
  4. அடுத்தது, தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் போன்ற காய்களை நாத்துவிட்டு, பின் தொட்டிகளில் மாற்றி வளர்க்கலாம். பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்
  5. முதலில், ஆரம்பிக்கும்போது, 3 தொட்டிகள் வாங்கி, ஒரு கீரை, ஒரு காய், ஒரு பூ என சிறிய அளவில் ஆரம்பிக்கவும். அது வளரும் அழகைப் பார்த்து, விரைவில்  பல செடிகளை வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.
youtube

இன்று, எவ்வளவு சின்ன இடமாக இருந்தாலும், அந்த இடத்தில் வித விதமான வீட்டிற்குத் தேவையான காய்களைப் பயிர் செய்து, ரசாயனம் இல்லாமல் சமைத்து ருசியாக சாப்பிடுகிறார்கள். நிச்சயம் நீங்களும் முயற்சி செய்து, குறைந்த பராமரிப்பில் அருமையாக தோட்டம் வளர்க்கலாம். ஆரம்பிக்கும்போது, 500 ரூபாயில் இருந்து துவங்கலாம். பின் உங்கள் வீட்டு சமையலறைக் கழிவுகளையே உரமாக்கி, சுற்றுப்புறத்திற்கு அசுத்தம் செய்யாமல், இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழலாம். செடிகள் காற்றை சுத்தப் படுத்தும், உங்களுக்கு நல்ல காய்களையும் தரும். வலைத்தளத்தில் செயல் விளக்கங்களோடு ஏராளமான பதிவுகள் இருக்கின்றன. அப்படி துவங்க சிரமாக இருக்கும்பட்சத்தில் தோட்டம் அமைப்பில் சிறந்தவர்களை அழைத்து ஆரம்பித்து, பிறகு நீங்கள் தினமும் ஒரு சில நிமிடங்களே செலவிட்டு பயன்பெறலாம். 

மேலும் படிக்க - எளிமையாக குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகள்!

மேலும் படிக்க - ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்:பிளாஸ்டிக்கு பதிலாக இனி இவைகளை பயன்படுத்தலாமே!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!