குளிர்காலத்தில் உங்கள் சரும அழகை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

குளிர்காலத்தில் உங்கள் சரும அழகை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

குளிர்காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மட்டுமல்ல. நாம் உண்ணக் கூடிய உணவையும் பொருத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

குறிப்பாக சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில், அதிக அளவில் பழங்கள் காய்கறிகள் சேர்த்துக்கொள்வது அவசியம். முறையான சரும பராமரிப்பை குளிர்காலத்தில் பின்பற்றி வந்தால் சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.

 • குளிர்காலங்களில் (winter) குளிப்பதற்கும், முகம் கழுகுவதற்கும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். அதிக சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடலில் எண்ணெய் சிறிதளவு தேய்த்துவிட்டு குளிக்க சென்றால் சருமத்தில் ஈரப்பதத்தை சீராக பராமரிக்கலாம். 
pixabay

 • குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கசோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.
 • குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். ஆல்கஹால் சேர்க்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.
 • குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரிகிறது. உங்களது சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியம். 

மேலும் படிக்க - அனைத்து வித சரும பிரச்சனைகளையும் நீக்க கடலை மாவு ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

 • சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்துவிடும். எனவே குளிர்காலத்தில் (winter) அவற்றை தவிர்த்து தண்ணீர் பருகுவது நல்லது. தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும்.
pixabay

 • சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
 • குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். 

மேலும் படிக்க - சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

 • சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதில் கிளிசரின் சிறந்த பலன் அளிக்கிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் சருமத்திற்கு  ஈரப்பதம் அளித்து வறட்சியைப் போக்கலாம். மேலும் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.
 • குளிர் அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே செல்லும்போது வெம்மையாடைகளை அணியவேண்டும். குளிருக்கு இதமாக அதிக நேரம் நெருப்புக்கு அருகில் இருந்தால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
pixabay

 • குளிர்காலத்தில் (winter)  பலருக்கும் ஏற்படும் மற்றொரு பிரச்னை உதடு வெடிப்பு. உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவலாம். அதனால் வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும். 
 • வறட்டு சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லும் முன் சிறிது தயிரை உடம்பில் தடவி தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
 • இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள், குளிர்காலத்தில் வறட்சி பிரச்னைக்கு உள்ளாகுவோர்  பாரபின் எண்ணெய், வாசலின் பயன்படுத்தலாம். 
 • மாலையில் குளிர்ச்சியான நேரத்தில் காலுறைகளை தவறாமல் அணிதல், பாதவெடிப்பின் தன்மையைக் குறைக்கும். அதுபோல் செருப்புக்கு பதிலாக கட்ஷு போன்றவற்றை அணியலாம்.  

மேலும் படிக்க - பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!