ஒரு நல்ல மற்றும் புத்திசாலி மனைவியாக மாறுவது எப்படி?

ஒரு நல்ல மற்றும் புத்திசாலி மனைவியாக மாறுவது எப்படி?

நல்ல மனைவியாக நடந்து கொள்வது எப்படி? இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், பல பெண்கள், தங்கள் திருமண வாழ்க்கையில் பல சங்கடங்களை சந்திக்கின்றனர். இந்த அறியாமையால், ஒவ்வொரு நாளும், தங்கள் வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அழகான மற்றும் மகிழ்ச்சியான நிமிடங்களையும் இழந்து விடுகின்றனர். இதனால், கணவனின் அன்பும் குறைவாகவே கிடைகின்றது. இன்னும் சிலருக்கு, அதுவும் கிடைப்பதில்லை.

உங்கள் கணவரிடம் ஒரு நல்ல புத்திசாலி மனைவியாக (smart wife) நீங்கள் நடந்து கொள்ளவும், அவர் முன்பை விட அதிகம் தற்போது உங்களை நேசிப்பவராக மாறவும் நீங்கள் செய்ய வேண்டியி சில முக்கிய குறிப்புகள் உங்களுக்காக இங்கே!இது நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புகின்றோம்.

1. உங்கள் கணவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

உங்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், உங்கள் கணவர் வீட்டில் இருக்கும் போது, அவருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக கைபெசியோடும், தொலைகாட்சியோடும், இணையதலதோடும் உங்கள் நேரத்தை செலவிடாமல், உங்கள் கணவருக்காக தரமான நேரத்தை அதிகம் செலவிடுங்கள். இது உங்கள் அன்பை அதிகப்படுத்துவதோடு, அவரது கவனத்தை உங்கள் பக்கமும் திருப்பும்.

2. அவருக்கு பிடித்த விடயத்தில் ஆர்வம் காட்டுங்கள்

Pexels

உங்கள் கணவருக்கு (husband) எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்றார் போல, அவருக்கு அதிகம் பிடிக்கும் விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுங்கள். அப்படி நீங்கள் அவருக்கு பிடித்த விடயத்தில் ஆர்வத்தோடு இருந்தால், அது அவர் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்த்து, உங்கள் உறவை மேலும் பலப்படுத்த உதவும்.

3. பாராட்டுங்கள்

சிறிய விடயமோ, பெரிய சாதனையோ, உங்கள் கணவர் எதை செய்தாலும், குறிப்பாக உங்களுக்காக அவர் அன்போடு செய்யும் எந்த விடயமாக இருந்தாலும், அதனை ஊக்கவித்து, பாராட்டுங்கள். இது அவர் மகிழ்ச்சியடைய செய்ய உதவும்,. மேலும் உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

4. ஆச்சரியப்படுத்துங்கள்

Pexels

உங்கள் கணவருக்கு அவ்வப்போது சில பரிசுகள் தந்தும், அவருக்கு பிடித்த உணவை சமைத்தும் மற்றும் வேறு சில விடயங்கள் செய்தும், அவரை ஆச்சரியப்படுத்துங்கள். இது உங்கள் காதலை அதிகரித்து, ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ உதவும். 

மேலும் படிக்க -நீண்ட கால திருமண உறவில் கணவனும், மனைவியும் அன்பு நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது?

5. ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் கணவரை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள். என்றும் அவர் குறிப்பாக மனதளவில், சோர்ந்து போய் விடாமல் இருக்கும் வகையில் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதனால், அவர் உற்சாகம் பெற்று, செய்யும் அனைத்து வேலையிலும் ஈடுபாட்டுடன் இருப்பார். இதனால் வெற்றியும் பெறுவார். குறிப்பாக இது அவர் அலுவலக பணிகளில் வெற்றி பெற உதவும்.

6. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்

Pexels

உங்கள் கணவர் வீட்டில் இருக்கும் போதும், உங்களுடன் நேரம் செலவிட விரும்பும் போதும் மகிழ்ச்சியான விடயங்களை பேசியும், பகிர்ந்தும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால், இருவரது மனதிலும் இருக்கும் இறுக்கம் குறைந்து நிம்மதியான சூழல் உண்டாகும். இதனால் உங்கள் காதலும் அதிகரிக்கும்.

7. ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருங்கள்

எப்படி பட்ட பட்ட கணவனாக இருந்தாலும், தன் மனைவி தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்போடு இருப்பான். அந்த வகையில், நீங்கள் உங்கள் கணவரின் அனைத்து சூழல்களிலும், அதாவது, ஏற்றம், இறக்கம், மகிழ்ச்சி, துக்கம் என்று அனைத்திலும், நான் உனக்காக இருக்கிறேன் என்ற நம்பிக்கையை தரும் வகையில் அன்போடும், அரவணைப்போடும் இருக்க வேண்டும். இப்படி இருக்கும் போது, உங்கள் உறவு (relation) மேலும் பலம் பெறுவதோடு, மகிழ்ச்சியான ஒரு திருமண வாழ்க்கையும் அமையும்.

8. ஒரு நல்ல தோழியாக இருங்கள்

Pexels

இன்று காலம் மாறி விட்டது. பத்தி பக்தி என்றும், கணவனுக்கு கட்டுபட்டு, மரியாதை கொடுத்து, கடவலாக மதித்து வாழ வேண்டும் என்கின்ற கோட்பாடு, மாறி கணவனும், மனைவியும் ஒரு நல்ல நண்பர்களாக வாழவே விரும்புகின்றனர். இந்த வகையில், நீங்கள் ஒரு மனைவியாக இருப்பதோடு, அனேக நேரங்களில் மனம் விட்டு பழகும், நேசிக்கும் ஒரு நல்ல தோழியாக இருக்க வேண்டியது முக்கியம். இதனால், ஒருவருக்கொருவர் தங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். மேலும் இது கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் இருக்கும் இடைவெளியையும் குறைத்து ஒரு அழகான உறவு உண்டாக உதவும். இப்படி தோழியாக இருக்கும் மனைவியை விரும்பாத கணவன் இருக்க முடியுமா?

மேலும் படிக்க - உறவுகள் – உங்கள் உறவை வெளிபடுத்த சில பொன்மொழிகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!