பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது ?

பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி அடையாளம் காண்பது ?

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற பேச்சு வழக்கு போய் இப்போது பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என பேச வைக்கிறது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் பல குற்றங்கள். 

பெண்களே கூட தங்களுக்கு நடந்த அநீதிகளை மறைத்து வெளிக்காட்டாமல் வாழ்ந்து வரும் இந்தக் காலங்களில் பேசத் தெரியாத குழந்தைகளை குறி வைக்கிறது மனநோய் கூட்டம். தான் செய்யும் தவறை வெளியில் சொன்னால்தானே தனக்கு சட்ட சிக்கல் வரும்? சொல்லவே முடியாத குழந்தைகளிடம் வெறியை தீர்ப்போம் என இவ்வகை மனநோயாளிகள் நடந்து கொள்கின்றனர். 

பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருப்பது இப்போது பெரும் சவாலாகவே மாறியிருக்கிறது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்தல் என்கிற முடிவுக்கு வரும் சில மிருகங்கள் ஆண்குழந்தைகளையும் விடுவதில்லை. இன்னமும் பல வயது வந்த ஆண்கள் தனக்கு நேர்ந்த சிறுவயது அநீதிகளை பகிர விரும்புவதில்லை. 

Youtube

பிறந்து 3 மாதம் ஆனா சிசுக்கள் முதல் 11, 12 வயதான சிறுமிகளை வன்புணர்வது வரை இவ்வகை மனநோயாளிகள் தங்கள் ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர். சிசுவை கூட விட்டு வைக்காத காமவெறி அவர்களை ஆட்கொள்கிறது. கண்களை மறைக்கிறது. இப்போதுதான் குழந்தை பாலியல் வன்முறை காட்சிகளை பார்க்கும் பகிரும் ஆட்களை கண்காணித்து கைது செய்கிறது காவல்துறை. ஆனால் அதனாலேயே எல்லா குற்றங்களும் குறையும் என நாம் எதிர்பார்க்க முடியாது.

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு (child abuse) ஆளாகி இருக்கிறார்களா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று சில பெற்றோர்கள் நிம்மதி இன்றி தங்கள் நாட்களை நகர்த்தி வருகின்றனர். சில பொதுவான அறிகுறிகள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு (sexual harassment) ஆளாகி இருக்கிறார்கள் என்கிற குறிப்பினை பெற்றோருக்கு கொடுப்பதாகவும் ஆனால் வயது வாரியாக அந்த வித்யாசங்கள் மாறும் என்றும் பாலியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Youtube

நன்றாக பேசி வந்த குழந்தைகள் திடீரென பேச்சு குறைந்து காணப்படுவார்கள். மந்தமாக காணப்படுவார்கள். மற்ற திறமைகள் உள்ள குழந்தைகளும் அந்த திறமையில் இருந்து பின்வாங்கி இருப்பார்கள். சிறுநீர் கழிக்க கற்றுக் கொண்ட குழந்தைகள் திடீரென மீண்டும் பழைய நிலைக்கு செல்லும். 

நன்றாக விளையாடி ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் பேதி போன்றவை ஏற்படலாம். நடந்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக உடல் மாற்றங்கள் இப்படி ஆகும். வயிற்று வலி போன்ற உபாதைகள் தென்படலாம். எப்போதும் போல இல்லாமல் திடீரென கோபப்படுதல் அடுத்தவர்களை காயப்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். 

எல்லோருடனும் சண்டை இடுவது யாருடனும் பேசாமல் இருப்பது விரக்தியோடு செயல்களை செய்வது போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலும் அந்தக் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கலாம். திடீரென எடை அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் அறிகுறிகள்தான். 

Youtube

திடீரென நல்ல உறக்கத்தில் திடுக்கிட்டு பயந்து அலறுவதும் ஒரு அறிகுறிதான். நேரத்துக்கு சாப்பிடுவது போன்ற ஒழுங்குமுறைகள் மாறி இருக்கலாம். அம்மாவை பிரிந்து தனியே இருக்க விரும்பாமல் குழந்தையோ அழலாம். சமயங்களில் காரணமே இல்லாமல் சமாதானம் செய்ய முடியாத அளவிற்கு குழந்தைகள் அழுதபடியே இருக்கலாம். 

படிப்பு விளையாட்டு இவை எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். புதிதாக எதை கற்று கொண்டாலும் அதில் முழுமையாக கவனம் செலுத்தாமல் திணறலாம். தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை அடிக்கடி தொடலாம். உறுப்புகளை சொல்ல தவறான வார்த்தைகளை பேசலாம். 

அப்பா அம்மாவிடம் இருந்து விலகி இருக்கலாம். நண்பர்களுடன் ரகசியமாக பேசுவதில் ஆர்வம் அதிகரிக்கலாம். புதிய நபர் ஒருவரைப் பற்றி அதிகம் பேசலாம். வளர்ந்த பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகலாம். எரிந்து விழலாம். தலைமுடி ஸ்டைலை மாற்றி கொள்ளலாம். அதிக உறக்கம் அதிக கோபம் எல்லோருடனும் சண்டை போடுவது போன்ற விஷயங்கள் செய்யலாம். 

Youtube

எந்த வயதினராக இருந்தாலும் அவர்களது அந்தரங்க உறுப்புகள் வீங்கி இருப்பது சிறு சிறு காயங்கள் போன்றவை தெளிவான அறிகுறியாகும். ரத்தம் வரலாம். மலவாய் மற்றும் பிறப்புறுப்பில் ரத்தம் வருதல் காயம் போன்றவை இருக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பதாக சொல்லலாம். அல்லது கிருமித்தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கலாம். 


இந்த பாலியல் தொல்லை பற்றிய அறிகுறிகளை அறிந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் நடந்து உளவியல் ரீதியாக அவர்களை சரி செய்ய வேண்டும். அதற்கு மருத்துவரை நாடுவதும் அவசியம்தான். 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!