logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
விவேகானந்தரின் பொன்மொழிகளும், தத்துவங்களும்!

விவேகானந்தரின் பொன்மொழிகளும், தத்துவங்களும்!

விவேகானந்தரை பற்றி அறியாதவர்கள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அவர் தான் வாழ்ந்த காலம் மட்டும் அல்லாது, தனது போன்மொளிகளாலும், தத்துவங்களாலும், இன்றளவும் நம்மிடையே வாழ்ந்து கொன்று இருக்கிறார் என்று கூறலாம். குறிப்பாக, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர் கூறிய அறிவுரைகள் அவர்களது வாழ்க்கையிலேயே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடும் என்று கூறினால் அது மிகையாகாது.

விவேகானந்தர் அனைத்து துறைகளை பற்றியும் பல தத்துவ விளக்கங்களை தந்துள்ளார். அவரது ஒவ்வொரு வரிகளும் (vivekananda quotes) பல அர்த்தங்கள் கொண்டவை.

இங்கே உங்களுக்காக விவேகானந்தரின் அர்த்தமுள்ள தத்துவங்கள்/பொன்மொழிகளின் தொகுப்பு!

ADVERTISEMENT

உத்வேகமூட்டும் விவேகானந்தர் பொன்மொழிகள்(Inspirational Vivekananda quotes)

Pexels

1. அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும்
நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும்.
அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும்.
உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.

2.எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

3. ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி,
அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

ADVERTISEMENT

4. மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம்.
ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது.
மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

5. கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.
காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.

6. நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது.
இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.
அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே.
வேண்டுதல் ஒரு பலவீனமாகும்.
இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது.
நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

7. கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.
ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

8. ஏதாவது தவறு செய்துவிட்டால், ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!” என்று வருத்தப்பட வேண்டாம்.
நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

9. மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன.
சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது.
நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

10. உதவி செய், சண்டை போடாதே,
ஒன்றுபடுத்து, அழிக்காதே,
சமரசமாய் இரு, சாந்தம் கொள்,
வேறுபாடு காட்டாதே.

ADVERTISEMENT

சமுதாயத்திற்கு விவேகானந்தரின் பொன்மொழிகள் (Vivekananda quotes for society)

11. தீமையை எதிர்க்காதீர்கள்,
அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று
ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள்.
இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால்
சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்!

12. அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு
தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள்.
இது நமக்குத் தெரியும்.
இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும்
கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

13. எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ,
அவரையே நான் மகாத்மா என்பேன்.
அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.

14. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.
இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

ADVERTISEMENT

15. வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம்.
நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும்
ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

16. உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி
நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்

17. மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்ததாகும்
எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும்
மனிதர்களே உயர்ந்தவர்கள்.
மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.

18. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல
அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன.
மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.

ADVERTISEMENT

19. மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

20. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது!
நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல.
மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.

இளைஞர்களுக்கான பொன்மொழிகள்(Vivekananda quotes for young generations)

ADVERTISEMENT

Pexels

21. வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!
இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை –
இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

22. நீ செய்த தவறுகளை வாழ்த்து.
அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன.

23. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.
உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது.
மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

ADVERTISEMENT

24. நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

25. இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால்
என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால்
ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

26. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!

27. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.
அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

ADVERTISEMENT

28. ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

29. உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.
தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

30. சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே.
மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

ADVERTISEMENT

ஊக்கமூட்டும் விவேகானந்தரின் பொன்மொழிகள்(Motivating Vivekananda quotes)

31. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன்,
இறந்தவனுக்கு ஒப்பாவான்!

32. நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு, வலிமையாக இரு.
பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

33. சுதந்திரமானவனாக இரு.
எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.
நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால்,நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்தால் வராமற் போனதை காண்பாய்.
வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்!

34. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.
உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.
அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

ADVERTISEMENT

35. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

36. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆவாய்!

37. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல.
மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

38. நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள்.
நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ
அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது.
நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால்,
எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ,
அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

ADVERTISEMENT

39. “நான் எதையும் சாதிக்கவல்லவன் என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.”

40. நீ பற்றற்றிரு மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்;
ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.
ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய்,
ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது.

மாணவர்களுக்கு விவேகானந்தரின் பொன்மொழிகள்(Vivekananda quotes for students)

ADVERTISEMENT

Pexels

41. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால்,
அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

42. கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது.
கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது?
ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

43. நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது.
நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன;
நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன.
இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது.
எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.

ADVERTISEMENT

44. பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.

45. ஒரு முகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி.
எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம்.
இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

46. ஒழுக்கம் உள்ளவனாக இரு.
தைரியம் உள்ளவனாக இரு.
இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு
மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு
உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

47. சுயநலமே ஒழுக்கக்கேடு.
சுயநலமின்மையே நல்லொழுக்கம்.
இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.

ADVERTISEMENT

48. தேவையற்ற விஷயங்களிலும், வீண்வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால்
நம் ஆற்றல் சிதறி வீணாகிறது.
எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்

49. லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்
வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக் காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.

50. உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ,
அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். 

மேலும் படிக்க – சுவாரசியமான நகைப்பூட்டும் வரிகளும், கவிதைகளும்!

ADVERTISEMENT

கல்விக்கான விவேகானந்தரின் பொன்மொழிகள்(Vivekananda quotes on education)

51. ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால்
கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்!

52. நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம்.
நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.

53. பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி,
அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி,
வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி,
சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி – கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல.
தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.
தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ அதுவே உண்மையான கல்வி.

54. பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும்.
ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும்.

ADVERTISEMENT

55. கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.

56. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை,
செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை,
மறந்து விடாதீர்கள்.
அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள்.

57. வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள்.
பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள்.

58. ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம்
குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.

ADVERTISEMENT

வெற்றிக்கான விவேகானந்தரின் பொன்மொழிகள்(Vivekananda quotes about success)

Pexels

 

ADVERTISEMENT

59. உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது.
“நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள்.
மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.

60. வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ,
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.

61. ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள்.
அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள்
ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம்.
ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.

62. வெற்றிகளை சந்தித்தவனின் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம்
இரும்பை விட வலிமையானது

ADVERTISEMENT

63. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும்
பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்!
அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.

64. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

65. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும்,
லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும்
திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள்.
அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள்.
முயற்சியைக் கைவிடாதீர்கள்!

66. எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.
முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

ADVERTISEMENT

67. பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள்.
பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும்.
பயங்க ரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

68. ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள்.
உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும்.
வெற்றிக்கு இது தான் வழி.

வாழ்க்கைக்கான விவேகானந்தரின் பொன்மொழிகள்(Vivekananda quotes to guide your life)

 

ADVERTISEMENT

69. பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல.
அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும்.
ஏராளமான ஞாபக சக்தி வேண்டும்.
ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள்
மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

70. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

71. கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும்,
ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்,
அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்

72. உலகின் குறைகளை பற்றி பேசாதே.
குறைகளை நோக்கி வருத்தப்படு,
எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால்,
நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால்
உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே.
குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே.
உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம்
அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

73. எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

ADVERTISEMENT

74. மனத்தில் வேற்றுமை இல்லாமல்
மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்

75. கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும்
ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்
அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

76. உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம்.
நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை.
உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

77. காயப்படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

ADVERTISEMENT

78. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.
அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும்,
முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

வாட்ஸ் பொன்மொழிகள்(Vivekananda quotes for whats app)

Pexels

ADVERTISEMENT

 

79. முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால்,
எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

80. அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.

81. எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

ADVERTISEMENT

82. துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.
வேறு எதனாலும் அன்று.

83. உண்மைக்காக எதையும் துறக்கலாம்;
ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே!

84. வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான
வாழ்க்கை ஆகும்!

85. தன்னலம் சிறிதும் இல்லாமல்,
நிறைந்த அன்புடன் பழகுபவர்களே

ADVERTISEMENT

86. இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை,
வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை!

87. கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர்.
தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.

88. பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது.
அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

விவேகானந்தரின் தன்னம்பிக்கை பொன்மொழிகள்(Vivekananda for confidence quotes)

 

89. அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது.
அச்சமே கேடை விளைவிப்பது, அச்சமே மரணத்தைத் தருவது.
நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால் தான்
நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

90. தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான்.
அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.
பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

91. கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்;
மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே;
நமக்குத் தேவை.
வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்.
மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

92. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை
வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.

93. வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான்
மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம்,
ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

94. இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம்
இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

95. கோழைதான் பாவம் செய்கிறான்
தைரியசாலி ஒரு போதும் செய்வதில்லை
மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.

ADVERTISEMENT

96. உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகிறாய்
உன்னை உயிராக நினைக்கும்போது, நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி ஆகிறாய்
நீ ஆன்மா என்று எண்ணும்போது அனைத்தும் ஆகிறாய்.

97. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய்.
நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்!

98. இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும்.
அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

மேலும் படிக்க – உங்கள் வெற்றிக்கு உறமாக இங்கே சில பிரபலங்களின் பொன்மொழிகள்! (Best Success Quotes In Tamil)

ADVERTISEMENT

பட ஆதாரம்  – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

09 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT