சுவாரசியமான நகைப்பூட்டும் வரிகளும், கவிதைகளும்!

சுவாரசியமான நகைப்பூட்டும் வரிகளும், கவிதைகளும்!

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், அவ்வப்போது, சற்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளவும், மெல்லியதாக புன்னகைத்து, புத்துனற்சியைப் பெறவும், சில சுவாரசியமான விடயங்கள் தேவைப்படுகின்றது. இந்த வகையில், நகைப்பூட்டும் சில வரிகளும், கவிதைகளும், இன்று பெரும் அளவு வாட்ஸ் ஆப், முக நூல், என்று வளம் வந்து கொண்டிருகின்றது.

இப்படி நகைப்பூட்டும் வரிகளை (funny quotes) ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது, சுவாரசியம் மட்டுமல்ல, மனதிற்கு மகிழ்ச்சியையும் அது தருகின்றது. அப்படி நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சில நொடிகளை மகிழ்ச்சியோடு (நகைச்சுவை) பகிர்ந்து கொள்ள, இங்கே உங்களுக்காக ஒரு தொகுப்பு!

Table of Contents

  நண்பர்களுக்கு நகைப்பூட்டும் பொன்மொழிகள்(Funny quotes for friends)

  1. ஆபீசுல மனேஜர் லீவு போட்டா வர சந்தோஷம் இருக்கே
  அது நாம லீவு போட்டாலும் வராது!!!

  2. நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எந்த கடவுள கும்பிடுவீங்க?
  பிள்ளையாரை!!
  கல்யாணத்துக்கு அப்பறம்?
  அத ஏம்பா கேக்குற, வேண்டாதா தெய்வமே இல்லை!!!!

  3. என்னை பற்றி மேலாளர் எப்படின்னு கேட்டதற்கு, சில்லறைப் பையன்னு சொல்லி இருக்க?
  சில்லறை என்றால் நாணயம், நீ நாணயமானவன் என்று கூறினேன்!!

  4. வீட்டில் ஸ்டவ் ரிப்பேர்ன்னா மனைவிக்கு சந்தோஷம்
  பிரிட்ஜ் ரிப்பேர்ன்னா கணவனுக்கு சந்தோஷம்!

  5. ஒரு போன் பன்ன மாட்டான், நேர்ல பார்த்தா கூட டீ வாங்கி தர மாட்டான்
  ஆனா, பேஸ்புக் ஸ்டேடஸ்ல “மிஸ்ஸிங் பிரண்ட்ஸ்”ன்னு போடுவான்!!!

  6. முடிய சின்னதா வெட்டி விடுங்க,
  எவ்வளவு சின்னதா?
  பொண்டாட்டி கையில பிடிக்க முடியாத அளவு அது தான்

  7. படிக்கிற காலத்துல படிக்கிறது மட்டும் தான் கஷ்டமா இருந்துச்சு
  படிச்சு முடிச்ச பிறகு எல்லாமே கஷ்டமா இருக்கு!!

  8. இந்திய சுதந்திரத்த அவசர பட்டு ஆடி மாசம் வாங்கிடுச்சு
  ஆவணில வாங்கி இருந்தா டாப்புல வந்திருப்போம்!

  9. சிங்கிள் பாய்ஸ் வேதனை
  இவ்ளோ நாள் நீ இருந்தும் நான் கமிட் ஆகலைனா?
  நீ Whats app இல்லை, Waste App!

  10. அம்மா நான் வாழ்க்கையில உருப்பிடலானு இருக்கேன்…
  அதுக்கு என்ன பண்ணனும்…
  உன் கையில இருக்கிற போன தூக்கிப்போட்டு உடை

  காதலர்களுக்கு நகைப்பூட்டும் பொன்மொழிகள்(Funny quotes for lovers)

  Shutterstock

  11. ஒரு நிமிடம் கூட போனை சுவிட்ச் ஆப் செய்யாதவன் காதலில் விழுந்து விட்டான் என்று அர்த்தம்!
  ஒரு நிமிடம் கூட போனை சுவிட்ச் ஆன் செய்யாதவன் கடனில் விழுந்து விட்டான் என்று அர்த்தம்!!

  12. காதலிக்கிறவன் அதிர்ஷ்டசாலி,
  காதலிக்காதவன் புத்திசாலி
  கல்யாணம் செய்தவன் கடனாளி!!

  13. ஆண்கள் பெண்களை காதலிக்கும் போது “ என்ன பொண்ணுடா அவ!” என்பார்கள்
  ஆனால், காதல் தோல்விக்கு பிறகு “பொண்ணாட அவ” என்பார்கள்!

  14. பொண்ணுங்க ரக்ஷா பந்தன் அன்னைக்கு ராக்கி கட்டி, அண்ணான்னு சொல்லும் போது
  நாம ஏன் லவர்ஸ் டே அன்னைக்கு தாலி கட்டி பொண்ட்டாட்டி ஆக்கி விடக் கூடாது?

  15. வாழ்கையில் விழுந்து எழுந்திரிக்கிரத விட
  காலையிலே 6 மணிக்கு எழுந்திரிக்கிறது தான் கஷ்டமா இருக்கு!!

  16. காதல் என்றால் என்ன?
  ஒரு குளத்தில கொக்கு இருக்கும் (பெண்)
  மீன் இருக்கும் (ஆண்)
  தண்ணீ இருக்கும் (பணம்)
  தண்ணீ வத்தி போனதும், கொக்கு பறந்து போயிடும், மீன் செத்து போயிடும்!!

  17. உன் சிரிப்பை பார்த்து என் சோகத்தை மறந்தேன்
  உன் சோகத்தை பார்த்து நான் சிரிப்பதையே மறந்தோன்

  18. அடையாளம் தெரிந்தும் காட்டி கொடுக்க முடியவில்லை
  என் இருதயத்தை திருடிய அவளை

  19. உலகத்தை மாற்ற வேண்டும் என்றால், அதை கல்யாணத்திற்கு
  முன் முயற்சி செய்ய வேண்டும்!
  கல்யாணத்திற்கு பின், டி வி சானலைக் கூட மாற்ற முடியாது!!

  20. அனைத்தையும் மறந்துவிட்டு திட்டு வாங்குவது கணவன்
  அனைத்தையும் ஞாபகம் வைத்து திட்டுவது மனைவி.

  வாட்ஸ் ஆப் நகைப்பூட்டும் பொன்மொழிகள் (Whatsapp funny quotes )

  21. அதிகமா படிச்சவன் கிட்டேயும்
  அதிகமா குடிச்சவன் கிட்டேயும் ரொம்ப நேரம் பேசக் கூடாது
  ஏன்னா, அவன் நம்மை கிறுக்கனாக்கி விடுவான்!!

  22. காபியில சர்க்கரையை போட்டாலும்
  சர்க்கரையில் காப்பியை ஊத்தினாலும்
  கரையப்போவது சர்க்கரை தான்!!
  வாழ்க்கையை நெனச்சி வருத்தப்பட்டாலும்
  வருத்தப்பட்டுகிட்டே வாழ்ந்தாலும்
  கரையப் போவது உன் வாழ்க்கை தான்!!!

  23. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்லுறாங்களே!
  எத்தனை கிலோ மீட்டர் நடந்த நல்லதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க!!
  நல்லது நடக்குதான்னு முயற்சி செய்து பாப்போம்!!

  24. கடவுள் கிட்டேயும், டாக்டர் கிட்டேயும் கோபமா பேசக் கூடாது...
  ஏன்னா...கடவுள் டென்சன் ஆனா டாக்டர் கிட்டே அனுப்பி விடுவார்!
  டாக்டர் டென்சன் ஆனா கடவுள் கிட்டே அனுப்பி விடுவார்!
  கவனமா இருக்கணும்...!!!

  25. நல்லவரைத் தான் கடவுள் சோதிப்பாராம்!!
  அப்ப தினமும் என்னை கன்னாபின்னான்னு சோதிக்கிரியே
  அவ்வளவு நல்லவனா கடவுளே நானு...??

  26. காதலை கண்டு பிடித்தவன் சைனா காரனாக இருக்குமோ??
  கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை....

  27. வீட்டை கட்டும் போது இருந்த வேகம், கடனை கட்டும் போது இல்லையே?
  வீட்டை மேஸ்திரி, ஏலேக்ட்ரிசியன், பிளம்பர், கொத்தனாரு என்று எலாரும் சேர்ந்து கட்டுனாங்க...
  கடனை நான் ஒருத்தன் மட்டும் தானே கட்ட வேண்டியதிருக்கு....

  28. பல் டாக்டரை பார்க்க போனேன்..
  அங்க லேடி டாக்டர் இருந்தாங்க, திரும்பி வந்துட்டேன்!!
  நாம எந்த பொண்ணு கிட்டேயும் பல்ல காட்டி நிக்க கூடாது...!!

  29. மேக்கப் போடும் பெண்களுக்கு எச்சரிக்கை!
  வரும் நாட்களில் மழை அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளதால்
  வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது!!

  30. பையன இட்லி மாதிரி பொத்தி பொத்தி எடுத்தா அது “அம்மா”
  அதே பையன தோசை மாதிரி புரட்டி புரட்டி எடுத்தா அது “பொண்டாட்டி”

  சிறிய நகைப்பூட்டும் பொன்மொழிகள் ( Small funny quotes )

  Shutterstock

  31. கேரட்டை பச்சையாய் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னாரு!
  ஆனா, கடை கடையை தேடித் பார்த்து விட்டேன்!
  சிகப்பு கேரட் தான் கிடைக்குது!

  32. கல்யாணம் ஆனவனுக்கு அடி விழுதேன்னு கவலை!!
  கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுதேன்னு கவலை!!

  33. ஒரு உயிரோட மதிப்பு இருக்கும் போது தெரியாது
  இறந்த பின் தான் தெரியும் என்பது முழுக்க முழுக்க உண்மை..
  உதாரணத்திற்கு
  கோழி உயிருடன் ரூபாய் 1௦௦
  கோழி உரித்தது ரூபாய் 16௦
  கோழி பொரித்தது ரூபாய் 3௦௦!!

  34. சரித்திரத்த திரும்பி பார்த்தா
  அது கத்துக் கொடுத்தது ஒன்னே ஒன்னு தான்
  அது, நாம வாழனும்ன்ன, வேளா வேளைக்கு சாப்பிடனும்!!!

  35. ஆண்பாலாக பிறந்ததற்கு
  ஆவின் பாலாக பிறந்திருந்தால்
  மனைவிக்கு முன் தைரியமா பொங்கி இருக்கலாம்!!

  36. பாய்சன் பத்து நாள் ஆனாலும்
  பாயாசம் ஆகாது ஆனால்
  பாயாசம் பத்து நாள் ஆனால்
  பாய்சன் ஆயிடும்

  37. வல்லாரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்ன்னு சொன்னாக
  போன மாசம் வல்லாரை சாப்பிட்டேன்
  அது மட்டும் தான் ஞாபகத்தில் இருக்கு!!
  மத்ததெல்லாம் மறந்து போச்சு!!!

  38. கடல்ல இருக்கிற மீனும்
  காதலிக்கிற பொன்னும் ஒண்ணுதான்!
  எப்படி?
  கெட்டியா பிடிக்கலைன்னா, இரண்டுமே கை நழுவி போயிடும்!!

  39. ஹோட்டலில் சாப்பிட்ட பின் சர்வர் டிப்ஸ் கேட்டாரு!
  வெந்தயம் போட்டு மாவு அரைச்சா இட்லி மிருதுவாக இருக்கும்ன்னு சொன்னேன்!!
  இதுக்கு போயி முறைக்கிறாரு!!!

  40. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்தால், சகல ஐஸ்வரியமும் வரும்!!
  அப்படி என்றால்...நியூஸ் பேப்பர் போன்ற பையன் பி எம் டபிள்யு காரில் அல்லவா சுற்ற வேண்டும்?

  வாழ்க்கை நகைப்பூட்டும் பொன்மொழிகள் (Funny quotes on life)

  41. பெண்களை நம்பி நகைக்கடைகள் திறக்கப்படுகின்றது!
  ஆண்களை நம்பி அடகு கடைகள் திறக்கப்படுகின்றது!
  இது வாழ்க்கையின் உண்மை தத்துவம்!!

  42. வாய்ப்பு என்பது வடை போன்றது!
  நாம் தான் காக்கா போல அதைத் டிப் போய் தூக்கணும்!
  பிட்சா போல வீடு தேடி வரும் என்று காத்து இருக்கக் கூடாது!!

  43. தூங்குறதுக்கு தூக்க மாத்திரை என்று ஒன்று இருக்கும் போது
  எழுந்திரிகிறதுக்கு எழுந்திரிக்கிற மாத்திரை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?
  உண்மையை கேட்டால், கிறுக்கன் என்று சொல்லும் இந்த உலகம்!!!

  44. வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் ஷர்ட் பிலிம் மாதிரி வேகமா முடிஞ்சி விடுகின்றது!!
  ஆனா, கஷ்டம் மட்டும் இங்கிலீஷ் படம் மாதிரி அடுத்த அடுத்த பார்ட்டா போய்கிட்டே இருக்குது!

  45. குத்து விளக்கு போல பெண்களை தேடுகிறான்ஆண்!!
  ஆனால், அலாவுதீன் விளக்கைப் போல் ஆண்களைத் தேடுகிறாள் பெண்!!

  46. மனைவியின் குரல் உயர்ந்த உடனே, கதவு ஜன்னல் என்று அனைத்தையும் மூடுபவன் மனுஷன்!
  டி வி சத்தத்தை அதிகமாக வைப்பவன் பெரிய மனுஷன்!
  சட்டையை போட்டுக்கிட்டு வெளிநடப்பு செய்பவன் ஞானி!
  நைஸ் பண்ணி மனைவியையும் கூட்டிகிட்டு வெளியே போறவன் விஞ்ஞானி!

  47. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியை தேடுவதும்
  மனைவி வந்த பின் நிம்மதியை தேடுவதும்
  ஆண்களின்தொடரும் வாழ்க்கைத் தேடல்!!7.

  48. தோசையை நின்னுகிட்டே ஊத்தணும்,
  ஆனா கால் வலிக்கும்
  இட்லியை உண்ட்காந்துகிட்டே ஊத்தலாம்
  ஆனா நிறைய பாத்திரம் விளக்கனும்
  துன்பம் எதில் தான் இல்லை?

  49. என்னதான் எம் பி பி எஸ் படிச்சாலும்
  ஆபரேசன்செய்யும் போது
  இஞ்சினியர் உருவாக்குன டூல்ஸ் தான் தேவைப்படுகிறது!
  இஞ்சினியர் இல்லாமல் எதுவும் இல்லை!

  50. தலையில் குட்டிய பிறகும்
  தலை முடி கொட்டிய பிறகும் தான்
  வாழ்க்கையில் சில விஷயங்கள் புரிகிறது!!

  ஊக்கவிக்கும் நகைப்பூட்டும் பொன்மொழிகள்(Funny motivational quotes)

  Shutterstock

  51. தோல்விதான் வெற்றியின் முதல் படி என்று நினைச்சு இருக்கும் போது
  இருக்கிற எல்லா படிகளிலும் எவனாவது விளக்கெண்ணையை ஊற்றி வச்சிடுறான்!!!

  52. பணக்காரன் சொந்தக்காரனாகனும் நினைப்பான்!
  ஆனா, சொந்தக்காரன் பணக்காரன ஆகி விடக்கூடாது!
  இது தான் இன்றைய மனிதனின் புத்தி!

  53. எல்லா விஷயத்திற்கும் விடா முயற்சி தேவை
  ஆனால், சிகிரட் மற்றும் சரக்குக்கு மட்டும் தான் விடும் முயற்சி தேவை!!

  54. போன மாசம் 45 கிலோ இருந்தேன்
  இந்த மாசம் 5௦ கிலோ இருக்கேன்
  போட்டு இருக்கிற பேன்ட் சைசும் மாரல. சட்டை சைசும் மாறல
  அப்ப நிச்சயம் அறிவு தான் வளந்திருக்கு!!!

  55. வளர்ந்து படிச்சு பெரிய ஆளாகி நல்ல பேரு வாங்குறதுக்கு
  பிறக்கும் போதே நல்ல பேரை வச்சா என்னவாம்?
  உண்மையை சொன்னா முறைக்கிறாங்க!!!

  56. ஏண்டா எறும்பு பவுடர் வாங்கி வரலா?
  விவரம் தெரியாம பேசாதீங்க அண்ணே...
  இன்னைக்கு பொவுடர் வாங்கி தந்தா, நாளைக்கு லிப்ஸ்டிக் கேட்கும்!!
  சரியா வராது!!!

  57. வெறுத்து போயி சாகப் போறேன்னு ஸ்டேடஸ் போட்டா..
  யாரோ ஒரு வேண்டாதவன், ஹாப்பி ஜர்னின்னு கமண்ட் பண்ணியிருக்கான்!!!

  58. நண்பர்களும் உறவினர்களும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்தால்,
  இன்று பஞ்சாயத்து நிச்சயம்!!

  59. லாரியில விழுந்தவனுக்கு ஒரு நாள் தான் டண்டணக்கா...
  காதல்ல விழுந்தவனுக்கு தினமும் டண்டணக்கா...

  60. ஹோட்டல்ல சாப்பிட்டு காசு கொடுக்கலன்னா மாவு ஆட்டுற வேலை கொடுக்கிற மாதிரி
  பேன்க்ல லோன் வாங்கிட்டு கட்டலன்னா, பேன்க் வேலை கொடுத்தா நல்ல இருக்கும்!!!

  மேலும் படிக்க - உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டுவர பல அர்த்தங்களை கொண்டுள்ள தமிழ் பழமொழிகள் !

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!