2019ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகைகள்!

2019ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகைகள்!

2020ம் ஆண்டை நெருங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி இளைஞர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளனர். 

மாடலிங், அழகுப்போட்டிகள், பரிந்துரைகள் என திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகைகள் சிலர்  பிறமொழி திரைப்படங்கள், இணையதள தொடர்களில் நடித்து பிரபலமான பின்னர் அந்த பிரபலத்தின் மூலம் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெறுகின்றனர். 

அந்த வகையில் பிற மொழி சினிமாவில் கலக்கிய பிரபல நடிகைகளும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தங்களின் திறமையை காட்டியுள்ளனர். 2019ம் ஆண்டில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த புதுமுக நடிகைகள் (actress) யார் யார் என்பதை இங்கே காண்போம். 

twitter

மிருணாளினி ரவி

மிருணாளினி ரவி டப்ஸ்மாஷ் என்ற இணையதள பயன்பாட்டின் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர். இவரின் டப்ஸ்மாஷ்  விடீயோக்கள் பிரபலமாக புகழ்பெற்று 2016ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்தார். 2019ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் (actress) நடிக்கவுள்ளார். 

மேலும் படிக்க - வெட்கப்பட்ட மீனா..கெத்து காட்டிய அனுஷ்கா..ரிலாக்ஸ் செய்யும் நக்மா..நன்றி சொல்லும் சிம்ரன்

twitter

ஷாலினி பாண்டே

தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இளம் நடிகை ஷாலினி பாண்டே.தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. இறுதியாக ஜீவாவுடன் ”கொரில்லா’ படத்தில் நடித்திருந்தார்.  பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 

twitter

அபிராமி வெங்கடாச்சலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் இந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். பிக் பாஸ் இல்லத்தில் இருந்து 7-வது போட்டியாளராகி வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் தமிழில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து (actress) ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர். மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர்.சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

மேலும் படிக்க - மாலத்தீவு நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால்.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்!

twitter

மேகா ஆகாஷ்

தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையான இவர் திரையுலகில் 2017ம் ஆண்டு "லை" என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு தமிழில் ஒரு பக்கா கதை, எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்.  படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் கைவசம் தற்போது தமிழில் 'ஒரு பக்க கதை' மற்றும் தெலுங்கில் ஒரு படம் மட்டுமே உள்ளது. 

twitter

சம்யுக்த ஹெக்டே

2016ம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித்திரைப்படமான கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழில் 2019ம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து கோமாளி படத்தில் நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படத்திலே இவருக்கு சிறந்த துணை நடிகை மற்றும் அறிமுக நடிகைக்கான விருதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - வாழ்க்கையில் எது நடந்தாலும் கேரக்டரை குறை சொல்வார்கள்.. திருமண முறிவு பற்றி மனம் திறந்த DD

twitter

கல்யாணி பிரியதர்ஷன்

தென்னிந்திய திரைப்பட நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் 2017ம் ஆண்டு வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காக பெற்றுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

twitter

மாளவிகா மோகனன்

கடந்த 2013ம் ஆண்டில் பட்டம் ரோல் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த இவர் உலகப் புகழ்பெற்ற இயக்குநரான மஜித் மஜிதி இயக்கியிருந்த பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திலும் நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தெலுங்கு, மலையாளம், இந்தி என கலக்கி வரும் இவர் அடுத்ததாக தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

twitter

மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியர் 1995ம் ஆண்டு சக்ஷ்யம் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.  இதனை தொடர்ந்து ஹவ் ஓல்ட் ஆர் யு, வில்லன், ஒடியன் உட்பட 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் இவர் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியா அசுரன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். கோபம், வீரம், சோகம் என பல உணர்வுகளை வெற்றிமாறனின் அசுரன் படத்தில் அசால்ட்டாக நடித்து தனது கெத்தை தமிழிலும் நிரூபித்துள்ளார்.

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!