வெட்கப்பட்ட மீனா..கெத்து காட்டிய அனுஷ்கா..ரிலாக்ஸ் செய்யும் நக்மா..நன்றி சொல்லும் சிம்ரன்!

வெட்கப்பட்ட மீனா..கெத்து காட்டிய அனுஷ்கா..ரிலாக்ஸ் செய்யும் நக்மா..நன்றி சொல்லும் சிம்ரன்!

சினிமா செய்திகள் என்றாலே கொஞ்சம் ஜாலியாகத்தான் இருக்கும். வெங்காய விலை உயர்வு, குழந்தைகளை துன்புறுத்தும் பாலியல் சைக்கோக்கள் என பல செய்திகளை படித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இதயத்திற்கு லேசாக இதமளிப்பது சினிமா குறித்த செய்திகள்தான்.

இங்கே 90களின் நாயகிகள் (90s heroins) இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி சின்ன சின்ன தகவல்களாக சேர்ப்பித்திருக்கிறோம்.

இயக்குனர் சுந்தர் சி க்கு பிடித்தமான நடிகைகளில் முதலில் வருபவர் மீனா தானாம். பல நடிகைகள் வைத்து இயக்கியிருக்கும் சுந்தர் சிக்கு மீனா என்றால் அந்தப் பொண்ணு ஸ்பாட்டில் இருந்தாலே லக்ஷ்மிகரமாக இருக்கும் என்று சிலாகிப்பாராம்.

நடிகை குஷ்பூ மற்றும் மீனா இருவரும் நடிகர் ரஜினியின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் அரட்டையில் சுந்தர் சி யின் மனைவியான நடிகை குஷ்பூவே மீனாவிடம் இதனைப் பற்றி கூறி இருக்கிறார். இப்பவும் உங்க படம் டிவில போட்டாங்கனா அப்படியே உக்காந்து உங்கள பார்ப்பார் சைட் அடிப்பார் என்று குஷ்பூ கூற இப்போதும் வெட்கத்தில் முகத்தில் சிவந்திருக்கிறார் மீனா.

Youtube

நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் சிம்ரன். அதிலேயே தன்னுடைய இடையழகால் வசீகரித்தவர் பின்னர் விஐபி திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் உதட்டு முத்தத்தால் கிறங்கடித்தவர் சிம்ரன். வாலி திரைப்படத்தில் இரட்டை வேட அஜித்துடன் ஈடுகட்டி நடித்துவரும் இவரே.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட சிம்ரன் முகநூலிலும் அதனை இப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். திருமணமானபின் திரைத்துறையை விட்டு ஒதுங்கியவர் சிம்ரன். இரண்டு மகன்களுக்கு தாயான நிலையில் பேட்ட திரைப்படத்தில் ரி என்ட்ரி ஆனார். அப்போதும் இளைஞர்களின் மனதை அள்ளினார்.

இப்போது சிம்ரன் தனக்கென ஒரு முகநூல் பக்கம் ஆரம்பித்து அதனை அட்மின்கள் கொண்டு நிர்வாகம் செய்யாமல் தானே நேரிடையாக கவனித்து வருகிறார். நடிகர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இவர் பகிர்ந்த உடன் சில நாட்களுக்கு விருப்பக்குறிகள் தொடரும் அளவிற்கு பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.
இவரின் ரசிகர்களில் டீசண்டாக தன்னை நீண்ட நாள்கள் பின்தொடரும் நபர்களுக்கு சிம்ரன் தானே இன்பாக்ஸ் சென்று நன்றி சொல்கிறாராம்.

Youtube

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணிக்கென தனி சாம்ராஜ்யமே இருக்கிறது. ஒரு காலத்தில் கவுண்டமணி இல்லாத திரைப்படங்கள் தோல்வியைத் தழுவும் என்கிற நிலை கூட இருந்தது. அந்த சமயத்தில் திரைத்துறைக்கு வந்தவர்தான் நக்மா. வெண்ணெய் துண்டு போல இருக்கும் நக்மாவை கவுண்டமணியுடன் டூயட் பாட சொன்ன போது கடுமையாக மறுத்திருக்கிறார் நக்மா.

ஆனால் வேறு வழியில்லாமல் சம்மதிக்க வைத்து மேட்டுக்குடி திரைப்படத்தில் ஆடவும் வைத்தனர். அந்தப் பாடல் இன்று வரை ஹிட் பாடல்தான். இதில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன என்றால் நக்மா இன்று வரை நடிகர் கவுண்டமணியுடன் போனில் தொடர்பில் இருக்கிறாராம். எந்த நடிகருடன் நடிக்க மறுத்தாரோ அவருடன்தான் மனசு சரியில்லாத வேளைகளில் மனம் விட்டு பேசி ரிலாக்ஸ் செய்கிறாராம் நக்மா.

Youtube

நடிகை அனுஷ்கா என்றாலே இன்றும் உயிரை விடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய சினிமாவிற்கு அனுஷ்கா நுழைந்து ஆண்டுகள் பல ஆனாலும் இன்றுவரை மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கிறார். ஹீரோவின் அந்தஸ்தினை முதலில் பெற்றவர் அனுஷ்கா தான். அதன்பின்னரே நயன்தாரா அவர் வழியைப் பின்பற்றினார்.

தெலுங்குதான் அனுஷ்கா ஷெட்டிக்கு தாய்மொழி என்றாலும் தமிழிலும் அனுஷ்கா ஸ்பெஷலானவர்தான். இந்நிலையில் அனுஷ்கா நடித்த பாகமதி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதிலும் அனுஷ்காவே நடிக்கட்டும் என்று பாலிவுட் விரும்ப அனுஷ்காவோ எனக்கு தென்னிந்தியா ரசிகர்கள் மட்டுமே போதும் என கூலாக வந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். பாலிவுட் மக்கள் முன் கெத்து காட்டிய அனுஷ்கா இப்போது பாகமதி வெற்றியால் அங்கும் பிரபலம் ஆகி இருக்கிறார்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!