நான் ஸ்டாப் கொண்டாட்டம் - நியூ இயர் பார்ட்டிக்கான தமிழ் டான்ஸ் பாடல்கள் !

நான் ஸ்டாப் கொண்டாட்டம் - நியூ இயர் பார்ட்டிக்கான தமிழ் டான்ஸ் பாடல்கள் !

பார்ட்டி என்றாலே பாட்டு, ஆட்டம் இல்லாமல் எதுவும் இல்லையே! அப்படி இந்த நியூ இயர் பார்ட்டிக்கு நான்-ஸ்டாப்(new year dance party songs) கொண்டாட்டத்திற்கு எந்தப் பாட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று உங்களுக்கான ஒரு பட்டியல்.

1. ஆளுமா டோலுமா…

தள அஜித்தின் மாஸ் ஹிட்களில் ஒரு ஜாலியான பாடல் இது. முழு எனர்ஜியில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அனிருத் பாடிய கலக்கல் பாட்டு என்று கூறலாம். இதை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இப்போது இதற்கு ஆடலாமா?! இதை இங்கு பார்க்கலாம்.

படம்: வேதாளம்
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடல் வரிகள்: ரோகேஷ்

 

2. மரண மாஸ்…

சூப்பர்ஸ்டாரின் மாஸான பாட்டு இது . செம்ம பீட் உடன் இருக்கும் இந்த பாடல் இளைஞர்கள் விரும்பும் அற்புதமான பார்ட்டி குத்து பாடல் ஆகும். இதை இங்கு பார்க்கலாம்.

படம்: பேட்டை
இசை: அனிருத்
பாடல் வரிகள்: விவேக்

3. கம்பத்துப் பொண்ணே…

ரொமான்டிக் மற்றும் ஃபோக் கலந்த அழுத்தமான யுவன் குரலில் ஒரு பாடல். தெளிவான வித்தியாசமான ஒரு மெலடி குத்துப்பாட்டு. இதை இங்கு பார்க்கலாம்.

படம்: சண்டக்கோழி 2 
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்: ஏகாதேசி

4. பைசா நோட்ட…

ஹிப் ஹாப் பிரியரா? பேசுவதைப் போன்ற வரிகளில் ஹிப் ஹாப் தமிழாவின் ஸ்டைலில் அனிருத் பாடி இருக்கும் ஒரு சூப்பர் பெப்பியான பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: கோமாளி
இசை: ஹிப் ஹாப் தமிழா
பாடல் வரிகள்: ஹிப் ஹாப் தமிழா, பிரதீப் ரங்கநாதன், மோபின், கானா கவி

5. ரௌடி பேபி…

Youtube

நடனத்திற்கே சவாலான ஜாலியான பாட்டு என்று கூறலாம் . 600 மில்லியன் லைக்களைத் தாண்டிய முதன் தென்னிந்திய பாடல் இதுவே! பிரபுதேவாவின் கோரியோக்ராஃபில், சாய் பலவியும், தனுசும் லாவகமாக ஆடி அசத்தியிருக்கும் பாடல்.ஆட ரெடியா?! இதை இங்கு பார்க்கலாம்.

படம்: மாரி 2 
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்: தனுஷ்

6. சிறுக்கி சீனி கட்டி…

கிராமத்து பாணியில் சூர்யாவின் சோலோ குத்தில் ஒரு கொண்டாட்டமான ஹை -ஆக்டேன் வகைப் பாடல் என்று கூறலாம்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: காப்பான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள்: ஞானகரவேல்

7. சிம்ட்டான்காரன்…

புரியாத லிரிக்ஸில் கலக்கும், ஹிட்டான தளபதி பாடல் ஆகும் . ஏ. ஆர். ரஹ்மானின் வித்யாசமான தாளத்தில் அமர்த்திருப்பவரையும் ஆடவைக்கும், மாஸ் குத்துப்பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: சர்கார்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரிகள்: விவேக்

8. ஹாப்பி நியூ இயர்...

கவண் திரைப்படத்தின் புத்தாண்டு பாடல். டி. ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா மற்றும் மடோனா சபாஸ்டியன் பாடியுள்ள மற்றுமொரு கொண்டாட்டமான பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: கவண்
இசை: ஹிப் ஹாப் தமிழா
பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ்

9. ஷீரோ ஷீரோ…

ஜோ, ரேவதி முழு எனர்ஜி கொடுத்து கலக்கியிருக்கும் குத்துப் பாடல். ஹீரோக்களுக்கு ஒரு குத்து என்றால், இது ஜோவிற்கான ஒரு குத்து.என்ன ஜோ ரசிகர்களே, தயாரா? இதை இங்கு பார்க்கலாம்.

படம்: ஜாக்பாட்
இசை: விஷால் சந்திரசேகர்
பாடல் வரிகள்: விவேக்

10. சொடக்குமேல சொடக்கு போடுது…

Youtube

அந்தோணி கானா பாணியில் வேகமான சூப்பர்ஹிட் பாடல். முதல் முறை அனிருத் சூர்யாவிற்காக செய்திருக்கும் ஒரு மாஸ் பாடல். இதை இங்கு பார்க்கலாம்.

படம்: தானா சேர்ந்த கூட்டம்
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடல் வரிகள்: மணி அமுதவன், விக்னேஷ் சிவன்

11. உன் செவிகளில் சொட்டச் சொட்டென காலத் துளியா…

த்ரிலான நல்ல பீட் உள்ள ராப் பாடல். விண்வெளிக்கு பயணிக்கும் அனுபவத்தை காட்சியாக்கி, யுவன் ஷங்கர் ராஜா, யோகி மற்றும் சுனிதா சாரதி ஆகியோர் திறம்மிகு பாடியிருக்கும் பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: டிக் டிக் டிக்
இசை: இமான்
பாடல் வரிகள்: மதன் கார்க்கி, யோகி

12. ஒத்தையடிப் பாதையில...

நாட்டுப்புற பாடல் வேண்டுமா? உற்சாகமான காதல் மெலோடியில் சூப்பர் பீட் கொண்ட பாடல் இது ! கிராமப்புற பின்னணி கொண்ட படத்தில், அனிருத் பாடி அசத்தியிருக்கும் ஒரு அரோப்புதமான நாட்டுப்புறப் பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: கனா
இசை: திபு நினான் தாமஸ்
பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ்

13. காதலிக்காதே மனசே காதலிக்காதே...

காதல் தோல்வியில் அதர்வா ஆட்டம்போடும் ஒரு குத்துப் பாடல். இதில் கௌஷிக்கோடு, ஹிப் ஹாப் தமிழா இருவரும் அருமையாக பாடி அசத்தியுள்ளனர்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: இமைக்கா நொடிகள்
இசை: ஹிப் ஹாப் தமிழா
பாடல் வரிகள்: ஹிப் ஹாப் தமிழா

14. மொராக்கா...

இது குழந்தைகள் விரும்பும் டான்ஸ் பாட்டு. நடனத்தை மையமாகக் கொண்டு தித்யா பாண்டே குழந்தை நட்சத்திரமாக தோன்றி, நடனத்தில் கலக்கியுள்ள ஒரு அற்புதமான பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: லட்சுமி
இசை: சேம்
பாடல் வரிகள்: மதன் கார்க்கி

15. குளேபா...சொர்க்கமா...சொர்க்கமா...

Youtube

பலர் இதை பல முறை கேட்டிருப்பீர்கள்! அந்த அளவிற்கு பேமஸ் ஆன, பிரபுதேவாவின் அற்புத நடனத்தில் கலக்கும் ஒரு கானா பாடல். ஜாலியா, கவலை அனைத்தையும் மறக்க வைத்து உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: குலேபகாவலி
இசை: விவேக்-மெர்வின்
பாடல் வரிகள்: கு. கார்த்திக்

16. காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு...

சிவகார்த்திகேயன் பாடல் இல்லாமலா?! இது ஒரு ரொமான்டிக் டான்ஸ் ஹிட் பாடல். சிவகார்த்திகேயன் எழுதி நடித்திருக்கும் இந்தப் பாடல் பீட்ஸ் நிச்சயம் உங்களை உங்கள் இடத்தில் அமர்ந்திருக்க வைக்காது.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இசை: இமான்
பாடல் வரிகள்: சிவகார்த்திகேயன் 

17. ஆத்தாடி...

சரி, பெப்பி பாடல் ஒன்றிற்கு ஆட ஆசையாக இருந்தால் இதோ உங்களுக்காக ஒன்று! இளைஞர்களின் பீட் ஹிட் பாடல் இது . ஃபுள் பீட் பார்ட்டி பெப்பி பாடலை அளித்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: நட்பே துணை
இசை: ஹிப் ஹாப் தமிழா
பாடல் வரிகள்: ஹிப் ஹாப் தமிழா

18. கமலா கலாசா...

வேகமான நடையில் ஒரு வித்யாசமான பாடல். மிகையான எனர்ஜி கொண்ட விஜய் சேதுபதி செம கிளாஸாக நடித்த பாடல். விவேக் சிவா மற்றும், சஞ்சனா கல்மாஞ்சே பாடியிருக்கும் ஒரு சூப்பர் பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: சங்கத்தமிழன்
இசை: விவேக்-மெர்வின்
பாடல் வரிகள்: கு. கார்த்திக்

மேலும் படிக்க - சிறந்த தமிழ் பாடல்கள் : காதல், சமீபத்தில் வெளியான பாடல்களின் தொகுப்பு!

19. மாச்சோ...

சித் ஸ்ரீராம் ரசிகரா? அப்போ இது உங்களுக்கான பாடல். மென்மையான இசையில் அழகான ஒரு டான்ஸ் பாடல். இது தளபதி விஜய்யின் டூயட் பீட் ஹிட் பாடல். இதன் சிறப்பு - தங்கிலீஷ் கலந்த லிரிக்ஸ் ! இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சுவேதா மோகன் பாடியுள்ளனர்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: மெர்சல்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்: விவேக்

20. டசக்கு டசக்கு டசக்கு டும் டும் டும்...

Youtube

உங்களை உடனடியாக ஆட வைக்கும் மற்றுமொரு விஜய் சேதுபதியின் அசத்தலான பாடல் இது ! ஸ்லோ மோஷன் பாடல் வேண்டும் என்றால் , இந்த ஆக்ஷன்- கிரைம் -த்ரில்லர் படத்தின் இந்த சூப்பர் பார்ட்டி பாடல் ஒன்றே போதும் . கோரஸ் பாடி அசத்தியுள்ள ஒரு அட்டகாசமான பாடல் . இதை இங்கு பார்க்கலாம்.

படம்: விக்ரம் வேதா
இசை: சேம்
பாடல் வரிகள்: முத்தமிழ்

21. கருத்தவன்லாம் கலீஜாம்...

சமுதாய கருத்துள்ள அழகான குத்துப் பாடல். சிவகார்திகேயனுக்காக அனிருத் மெட்ராஸ் பாஷையில் பாடியுள்ள ஒரு ஹிட் பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: வேலைக்காரன்
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடல் வரிகள்: விவேகா

22. டமாலு டமாலு டுமீலு டுமீலு டுமீலு டுமீலு டமாலு டமாலு...

ஹை ஆக்ஷன் தொனியில் ஒரு லோக்கல் லிரிக்ஸ் கொண்ட குத்துப் பாட்டு. எம். என். நம்பியார் முதல் அனைத்து வில்லன் டயலாக்களை உட்புகுத்தினாலும், பாடலின் பெப்பி ரிதம் குறையாமல் இறுதிவரை ஜம்மென்று செல்கிறது.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: போகன்
இசை: இமான்
பாடல் வரிகள்: ரோகேஷ்

23. வேர் ஈஸ் த பார்ட்டி...

பார்ட்டி என்றால் இந்தப் பாட்டு இல்லாமலா? பாடல் பழதாக இருந்தாலும் இன்று வரை அனைவரின் மனதிலும் பிரெஷாக இருக்கும் ஒரு பார்ட்டி சாங் இது! சிம்புவின் கலக்கல் நடிப்பில், முகேஷ் மற்றும் பிரியதர்ஷினி பாடியுள்ள ஹிட் பாடல். இதை இங்கு பார்க்கலாம்.

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்: எஸ். டி. ஆர்

24. ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்..

சென்ற வருடம் புத்தாண்டிற்காக உருவாக்கப்பட்ட பாடல். புத்தாண்டை கொண்டாட நரேஷ் மற்றும் முத்து கணேஷ் பாடி மாஸ் செய்துள்ள பாடல்.இதை இங்கு பார்க்கலாம்.

படம்: செயலி தமிழ் குறும்படம்
இசை: முத்து கணேஷ்
பாடல் வரிகள்: ப. விஜய்

25. வெறித்தனம்...

Youtube

மெட்ராஸ் பாஷையில் தளபதி விஜய் பாடி கலக்கி மாஸ் செய்திருக்கும் தற்போதைய நம்பர் 1 ஹிட் பாடல்.கேட்ட உடன் ஆட தோன்றும் பாடல் இது!இதை இங்கு பார்க்கலாம்.

படம்: பிகில்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரிகள்: விவேக்

2017 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அனைத்து ஹிட் பார்ட்டி டான்ஸ் பாடல்களின் பட்டியலை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று நம்புகிறோம்! இந்த உற்சாகமான பாடல்களுடன் ஆடி பாடி உங்கள் நியூ இயர் பார்ட்டியை கொண்டாடி மகிழுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க - வீக்கெண்டில் பார்த்து மகிழ 8 சிறந்த தமிழ் வெப் சீரிஸ் !

பட ஆதாரம்  - Youtube

 

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!