logo
ADVERTISEMENT
home / பொழுதுபோக்கு
வீக்கெண்டில் பார்த்து மகிழ 8 சிறந்த தமிழ் வெப் சீரிஸ் !

வீக்கெண்டில் பார்த்து மகிழ 8 சிறந்த தமிழ் வெப் சீரிஸ் !

இன்று பல்வேறு யூடூயூப் சேனல்கள் மற்றும் வெப் ஆப்கள் வளம் வந்து கொண்டிருக்கிறது. இவை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிற நிலையில், அவை வெப்சீரிஸ் என்னும் நாடகத் தொடர்களை வெளியிடுகின்றன.அலுப்பான நாட்களிலோ அல்லது உங்கள் பிஸியான அட்டவணையில் விரைவான மற்றும் சுவாரசியமான கதையைப் பார்க்க விரும்பினால், இங்கே எங்களிடம் சில சிறந்த வெப்சீரிஸ் (tamil web series) உள்ளது. இங்கு அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

1. ஏஸ் ஐயம் சஃபெரிங் ஃபிரம் காதல்(As I am Suffering From Kaadhal)

Pinterest

நான்கு காதல் மற்றும் வெறுப்பு கலந்த கதை கொண்டது ‘ஏஸ் ஐயம் சஃபெரிங் ஃபிரம் காதல்’ வெப்சீரிஸ். அதில் ஒருவர் டைவர்ஸீ, அவருடைய வாழ்க்கை அவருடைய கலகலப்பான பெண்ணைச் சுற்றி இருக்கிறது; ஒரு ஜோடி லிவிங் டுகெதர், கல்யாணத்தில் நம்பிக்கை அற்று இருக்கிறார்கள்; ஒரு திருமணமான ஜோடி எப்போதும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, எப்போது உறவைப் பிய்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியில்; இறுதியில் ஒரு நல்ல காதல் ஜோடி என கதை இவர்களைச் சுற்றி நகர்கிறது. காமெடி, ரொமான்டிக் மற்றும் ட்ரெண்டியான மெட்ராஸ் பாஷையில் எடுக்கப்பட்டு சூப்பராக வளம் வரும் அடல்ட் வெப்சீரிஸ் இது.

ADVERTISEMENT

வகை : காதல், காமெடி
இயக்குனர் : பாலாஜி மோகன் (இவருடைய திரைப்படங்கள் ‘மாரி’, ‘காதலில் சொதப்புவது எப்படி’)
நடிகர்கள் : சுந்தர் ராமு, பேபி யுவினா, சனந்த், சஞ்சனா நடராஜன், தான்யா பாலகிருஷ்ணன், 
ரோபோ ஷங்கர், நக்ஷத்திரா நாகேஷ் மற்றும் பாலாஜி மோகன்
எபிசோடுகள் : 10

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

2. லிவின்(Livin’)

மெட்ராஸ் சென்ட்ரலில், திருமணம் செய்து கொல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய ஒரு சுவாரசியமான காமெடி கலந்த ரொமான்ஸ் கதை தான் லிவின். ஜாலியாக கதை காமெடியாக இயல்பாக ஆரம்பித்தாலும், கடினமான யதார்த்ததை இறுதியில் உணர்த்துவதாக உள்ளது. சென்னை நகரமும் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு கதை நகர்கிறது. அம்ருதா ஸ்ரீனிவாசன் இயல்பாக நடித்துள்ளார். நவீன் ஜார்ஜ் நகைச்சுவையில் கலக்குகிறார். ஒவ்வொரு எபிசோடும் காண்போரின் சுவாரஸ்யத்தை தூண்டுகிறது.

வகை : காமெடி, ரொமான்ஸ்
இயக்குனர் : பிரபுராம் வியாஸ்
நடிகர்கள் : கண்ணா ரவி, அம்ருதா ஸ்ரீனிவாஸ், நவீன் ஜார்ஜ் தாமஸ், பிரசாந்த் ஆலிவர், கணபதி
எபிசோடுகள் : 13

ADVERTISEMENT

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

3. நிலா நிலா ஓடி வா (Nila Nila Odi Vaa)

Pinterest

திரையுலக ஹீரோ அஸ்வின் ‘ஓம்’மாக; சுனைனா ‘நிலா’வாக காதல் கதையில் நடித்துள்ளார்கள். நிலா இந்தக் கதையில் மனிதர்களை கொள்ளும் ஒரு வேம்பையராக வளம் வருகிறார். பலமுறை ஓம்மை கொள்ள முற்பட்டாலும், காதல் தடுக்கிறது. இப்படி மனிதருக்கு,  வேம்பையருக்கும் நடக்கும் காதல் பற்றியது இந்த ஹாரெர் வெப்சீரிஸ். இதில் நகைச்சுவை, காதல், அக்க்ஷன், ரொமான்ஸ், ஆகியவற்றை திகிலுடன் பார்த்து ரசிக்கலாம்.

ADVERTISEMENT

வகை : ஹாரர், காமெடி, ரொமான்ஸ்
இயக்குனர் : நந்தினி
நடிகர்கள் : அஸ்வின் காக்குமானு, சுனைனா, அனுபமா குமார், மிஷா கோஷல்
எபிசோடுகள் : 13

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

4. கள்ளச்சிரிப்பு (Kallachirippu)

நகரத்தில் வாழும் ஒரு திருமண ஜோடியின் வாழ்க்கையில் தெரியாமல் ஒரு விபத்தில் மனைவியே கணவனைக் கொள்ளும்படியாகி வீணாகிறது. அதன் பிறகு அவர்கள் திருமணத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரின் உண்மை முகம் வெளிப்படுவதுதான் கதை. பிட்சா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் வெப்சீரிஸ் வித்தியாசமான ஒரு த்ரில்லர் நாடகம்.  

வகை : த்ரில்லர், ட்ராமா
இயக்குனர் : கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் : ராஜலக்ஷ்மி, அம்ருதா ஸ்ரீனிவாஸ், விகாஸ்
எபிசோடுகள் : 8

ADVERTISEMENT

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

5. அமெரிக்கா மாப்பிள்ளை (America Mapillai)

Pinterest

ஹாலிடேவிற்குச் சென்றுவந்த கணேஷ் வித்யாசமான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதைப் பார்த்து, அவனது தந்தை திருமணம்தான் தீர்வு என்று கருதி நம்ம ஊர் பாணியில் பெண் பார்க்க துவங்குகிறார். இதை விரும்பாத கணேஷ் தான் ஒரு கே(Gay) என்று நம்பவைக்க முற்படுகிறார். ஒவ்வொரு எபிசோடுக்கும் நிறங்களின் பெயர்களை வைத்து, உணர்வுகளின் வெளிப்பாடாக இந்த வெப்சீரிஸ் நகர்கிறது. மேலும் 10 நிமிடங்களே நீடிக்கும் வித்தியாசமான அணுகுமுறையில் எடுக்கப்பட்ட அமெரிக்கா மாப்பிளை உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்அன்றி சங்கடப் பட வைக்காது. 

ADVERTISEMENT

வகை : அடல்ட், காமெடி, ட்ராமா
எழுதியவர் : ராஜா ராமமூர்த்தி
இயக்குனர் : பிரவீன் பத்மநாபன்
நடிகர்கள் : ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), ஓகே கண்மணி லீலா சாம்சன், (சென்னைடுசிங்கப்பூர்) கோகுல் ஆனந்த், நமீதா கிருஷ்ணமூர்த்தி, 
டெல்லி கணேஷ், காயத்ரி, ஸ்ருதி ஹரிஹரன்,ராகேஷ் ராம்
எபிசோடுகள் : 8

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

6. மிட்டா (Mitta)

ஜீ5 என்ற வெப் டெலிவிஸனில் மிட்டா வெப்சீரிஸ் 2019ல் வெளியிடப்பட்டது. கஞ்சா குடிக்கும் நான்கு நண்பர்களுக்கிடையே நடக்கும் ஒரு கதை. காஷ்மீரில் இருந்து ஒரு நண்பர் சரக்கு கொண்டு வருகிறார்; அதை இவர்கள் வேறொருவரிடம் விற்று விடுகிறார்கள்; ஒரு பார்ட்டி நடக்கிறது; அதற்கான சரக்கை விற்றவரிடமே வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதுதான் கதையின் அடிப்படை. கதை துவக்கத்தில், அல்லு, சது ஆகிய நண்பர்களிடையே நடக்கும் சுவாரசியமான உரையாடல் ரசிக்கும் படியாக இருக்கிறது. கஞ்சாவை விற்பதில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சுற்றி கதை செல்கிறது.

ஒவ்வொரு எபிசோடும் 15 நிமிடங்கள் வரை மட்டுமே நீண்டுள்ளது. புது விதமான  ஒரு ஜோனரில் எடுக்கப்பட்டுள்ளது இந்த வெப்சீரிஸ். 

ADVERTISEMENT

வகை : காமெடி மற்றும் ஸ்டோனர்(கஞ்சா தொடர்ப்புடைய கதை) 
இயக்குனர் : பிரதீப் இம்மானுவேல்
நடிகர்கள் : லல்லு, சாது, இஸ்தியாக், பிரபாஸ் அல்லு
எபிசோடுகள் : 11

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

7. கண்ட்ரோல் ஆல்ட் டெலீட்(Ctrl Alt Del)

Pinterest

ADVERTISEMENT

பிக் பாஸ் அபிராமி, ராகேந்து மௌலி, தர்ஷனா ராஜேந்திரன், அப்தூள் ஆகியோர் நடித்த ‘கண்ட்ரோல் ஆல்ட் டெலீட்’ வெப்சீரிஸ் நான்கு மென்பொருள் வேலை செய்யும் நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. ஸ்கூல் முடித்து காலேஜ், காலேஜ் முடிந்தால் வேலை, நல்ல வேலை கிடைத்தால், அடுத்து கல்யாணம். உங்களுக்கு தகுந்த ஒருவரை தேர்வு செய்வது என்பது கடலில் மீன் பிடிப்பதுபோல இன்று ஆகிவிட்டது. இப்படி, அன்றாட நகர வாழ்க்கையில் நிகழும் விஷயங்களை சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் நகர்கிறது ‘கண்ட்ரோல் ஆல்ட் டெலீட்’ கதை.

வகை :  காதல், ட்ராமா
இயக்குனர் : ஹரிஹரன்
நடிகர்கள் : ராகுல், ஸ்ரீப்ரியா, அஸ்வின் ராவ், வெங்கடேஷ் ஹரிநாதன், ஜீவா ரவி, அப்தூள், தர்ஷனா ராஜேந்திரன், ராக்கெண்டு மௌலி வெண்ணெலாக்கண்டி, அபிராமி ஐயர்
எபிசோடுகள் : 7

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 

ADVERTISEMENT

8. ஹஃப் பாயில்(Half Boil)

சென்னையில் தங்கி இருக்கும் வேலை தேடிக் கொண்டிருக்கும் வேலை இல்லாத மூன்று பேச்சிலர் பசங்களின் பிரச்சனைகளைப் பற்றிய நகைச்சுவையான நாடகம் இது. இந்த வெப்சீரிஸ் பெரும்பாலான வாலிபர்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமப்படும் விஷயங்களை காமெடியாக தெளிவான ஸ்கிரீன் பிலே மூலம் உணர்வுகளையும், சந்தர்ப்பங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வகை :  காமெடி
இயக்குனர் : லிங்கேஷ்குமார் மணி
நடிகர்கள் : சுதாகர், கோபி, ஜாவித்
எபிசோடுகள் : 13

பார்த்து இரசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லாத நபரில்லை என்ற தற்கால சூழலில், தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைவிட இளைஞர்கள் மத்தியில் வெப்சீரிஸ் தொடர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. திரை உலகில் ஹிட் கொடுத்த இயக்குனர்களும், குறைந்த பட்ஜெட்டில், உடனுக்குடன் மக்களின் விமர்சனங்களை அறிந்து செயல்பட வெப்சீரிஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர்களுக்கு அவர்களுடைய புது புது படைப்புகளை பரிட்சையித்துக்கொள்ள இது ஒரு நல்ல தளமாக அமைந்திருக்கிறது. எப்போதும் புதிதாக, வித்யாசமாக எதிர்பார்க்கும் இரசிகர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

ADVERTISEMENT

 

மேலும் படிக்க – லவ் பிரேக்கப்பிற்கு பின்பு வாழ்க்கை எவ்வாறு அழகாக மாறக்கூடும் என காட்டும் 6 திரைப்படங்கள்!

பட ஆதாரம்  – Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

03 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT