குடும்ப உறுப்பினர்களை எப்படி ஒற்றுமையாக வைத்துக் கொள்வது?

குடும்ப உறுப்பினர்களை எப்படி ஒற்றுமையாக வைத்துக் கொள்வது?

குடும்பம் என்று வந்து விட்டாலே, அதில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று பல உறவுகள் ஒன்று கூடி ஒரே வீட்டில் வாழ்வதை கூறுவார்கள். இன்று கூட்டுக் குடும்ப கலாசாரம் மாறி, குடும்பங்கள் சுருங்கி, அப்பா, அம்மா மற்றும் குழந்தைகள் என்று ஆகி விட்டது. இதிலும், குடும்பத்தில் இருக்கும் மூன்றோ அல்லது நான்கு பேருக்கும் இடையே ஒரு ஒற்றுமை இல்லாமல், தொடர்ந்து கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருகின்றது. இதனால் அனைவரும் நிம்மதி இல்லாமல், ஏதோ ஒரு மன அழுத்தத்தோடே வாழ்த்து கொண்டிருகின்றனர். இதன் விளைவு, அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமலும், வளர முடியாமலும், ஒரு மந்தம் மற்றும் தேக்க நிலையிலேயே இருந்து விடுகின்றனர். இது மேலும் அவர்கள் மனதை பெரும் அளவு பாதித்து விடுகின்றது.

எனினும், இந்த சூழல் மாற வேண்டும். குடும்பத்தில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய உறுபினர்கள் ஒற்றுமையாகவும்(family unity), மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தால், அது அவர்களை மட்டும் அல்ல அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்யும். அனைவரும் வெற்றியையும் பெறுவார்கள். ஆனால், அதனை எப்படி செய்வது.

இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:

1. ஒற்றுமையாக இருக்க வேண்டும்

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தனக்கென இருக்கும் சொந்தம் இது என்பதை உணர்ந்து, எப்போது அந்த உறவை யாரிடமும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஒற்றுமை ஒரு நல்ல உறுதியான குடும்ப அமைப்பை உண்டாக்க உதவும்.  

2. ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது

Pexels

எந்த காரணத்தை கொண்டும் ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது, கட்டளைகள் இடக் கூடாது. ஒரு நல்ல புரிதலோடு மட்டுமே அனைவரும் ஒன்று கூடி ஒரு செயலில் ஈடுபட வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஈடுபாடோ அல்லது விருப்பமோ இல்லாத விடயத்தில் அவரை கட்டாயப்படுத்தக் கூடாது.  

3. தனக்கென இருக்கும் சுதந்திரத்தை மற்றொருவர் தலையிடக் கூடாது

என்னதான் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மனித சுதந்திரம் தேவைப் படுகின்றது. இந்த இடம் அவர் தன்னைத் தானே திடப்படுத்திக் கொள்ளவும், தன்னை பற்றி தானே நன்கு புரிந்தும், உணர்ந்தும் கொள்ளவும், தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவும். அப்படி அவரது சுதந்திரத்தில் தலையிட்டால், அது ஒரு நாள் பிரச்சனையிலே கொண்டு போய் விட்டு விடும்.

4. ஒன்று கூடி உண்ண வேண்டும்

Pexels

தினமும் ஒரு வேளை உணவாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்தும், பரிமாறிக் கொண்டும் உண்ண வேண்டும். அப்படி செய்யும் போது, அது உங்கள் அன்பையும், உறவையும் வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். மனதில் இருக்கும் இறுக்கமும் குறையும்.  

5. அந்த நாள் நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்

தினமும், அல்லது வார இறுதி விடுமுறை நாட்களிலாவது அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து, ஒரு தரமான நேரத்தை ஒத்துக்கிக் கொண்டு, அந்த நாள் அல்லது அந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நிகழ்ந்த சுவாரசியமான மற்றும் சோகமான நிகழ்வுகளை உங்கள் குடும்பத்தினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது சில சமயங்களில் உங்களுக்கு உங்கள் குடும்பதினர்களிடம் இருந்து ஆலோசனை பெற உதவுவதோடு, உங்கள் வாழ்க்கையில் எப்படி சரியான பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்கான விடயங்களையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். மேலும் உங்கள் மனதில் இருக்கும் மகிழ்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வீர்கள்.

6. ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்

Pexels

அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். நான் ஏன் உனக்காக உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காமல், முன் வந்து உதவி செய்ய வேண்டும். இது ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிபடுத்தும்.

7. விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்

முடிந்த வரை பிடிவாதமாக இருக்காமல், விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்படி செய்யும் போது, ஒருவருக்கொருவர் புரிதல் அதிகரித்து, நல்ல உறவு உண்டாகும்.  

மேலும் படிக்க- நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது?

8. நான் உனக்காக இருக்கிறேன் என்ற நம்பிக்கையை தர வேண்டும்

Pexels

உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு தோல்வியோ அல்லது மனம் பாதிக்கும் படியானோ நிகழ்வோ நடந்து விட்டால், அவருக்கு, நான் உனக்காக பக்க பலமாக இருப்பபேன், வருந்தாதே என்று ஆறுதலும், நம்பிக்கையும் தர வேண்டும்.

9. எந்த சூழலிலும் பகைமையை வெளிப்படுத்தக் கூடாது

உங்களுக்கு ஒருவர் செய்யும் விடயம் பிடிக்கவில்லை என்றால், உடனே பகைமையையும், வெறுப்பையும் வெளிபடுத்தாமல், முதலில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, சிந்தித்து பின்னர் அமைதியாக உங்கள் ஆதரவையும், அன்பையும் வெளிபடுத்த வேண்டும். எந்த காரணம் கொண்டும் உங்கள் எதிர்மறை எண்ணங்களை வெளிபடுத்தி விடாதீர்கள்.

மேலும் படிக்க - உங்கள் வாழ்க்கை துணையிடம் சொல்லவே கூடாத சில விஷயங்கள் - இதோ!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!