உங்கள் மேலாளர் மிகவும் மோசமானவரா? அவரை கையாள இங்கே உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்!

உங்கள் மேலாளர் மிகவும் மோசமானவரா? அவரை கையாள இங்கே உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்!

இன்று அலுவலகம் செல்லும் பெரும்பாலோனோரின் புலம்பல், “என் மேலாளர் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்”, எவ்வளவு கடினமாக உழைத்தாலும், குறை கூறிக் கொண்டே இருக்கிறார்”, “சிறப்பாக வேலையை செய்த முடித்தாலும், பாராட்டவே மாட்டேன் என்கிறார்”, “ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறார்” இன்று எண்ணற்ற புலம்பல்கள்.

மேலாலரிணி இத்தகைய செயல்கள் நிச்சயம் ஒரு ஊழியரை மனம் உடைய செய்து, அவரது ஊக்கத்தையும், செயல்திறனையும் பாதித்து விடக் கூடும். மேலும், இதனை இப்படியே தொடர விட்டாலும், உங்கள் எதிர்கால முன்னேற்றம் என்பது கேள்விகுறியாகவும் மாறி விடும்.

சரி, இதை எப்படி சரி செய்வது? எப்படி ஒரு நல்ல நட்பான உறவை மேலாளரிடம் உண்டாக்கி, வாழ்க்கையில் முன்னேறுவது?இதற்கு இங்கே உங்களுக்காக சில குறிப்புகள். இவை நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்!

1. உங்கள் மேலாளர் உண்மையிலேயே மோசமானவர் தானா?

Pexels

பொதுவாக அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரு குழுவாகவும், மேலாளர் மற்றுமொரு தரப்பினராகவும், எதிரும் புதிருமாகவே பெரும்பாலான அலுவலக சூழல்கள் இருக்கும். இதனால், இயல்பாகவே, ஊழியர்களுக்கும், மேலாளருக்கும் இடையே ஒரு இடைவெளி உண்டாகி விடும். இதனாலேயே, எதார்த்தமாக மேலாளர் ஒன்றை கூறினால், அதனை குறையாகவும், பகையாகவுமே பார்க்கத் தோன்றும். ஆனால், அப்படி அனைத்தையும் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஒரு கணம் உங்கள் மேலாளர் உண்மையிலேயே மோசமானவர் தானா(bad manager), அல்லது, அவரது குணம் தான் அப்படி கடுமையானது, ஆனால், மற்ற படி மிகவும் நம்ம மனம் படைத்தவர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. எந்த சூழலில் அவர் அப்படி நடந்து கொள்கிறார்?

உங்கள் மேலாளர் மீது தவறான ஒரு முடிவுக்கு வரும் முன், அவர் எந்தெந்த சூழலில் உங்களிடம் கடுமையாகவும், வெறுப்பாகவும் நடந்து கொள்கிறார் என்று தெரிந்தும், புரிதும் கொள்ளுங்கள். இதனை தெரிந்து கொண்டால், சூழலை சமாளிப்பது எளிதாகி விடும். உதாரணத்திற்கு, அவர் ஒரு அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும் போது, நீங்கள் அவரை அணுகினால், அவர் இயல்பாகவே உங்கள் மீது கோபத்தை சற்று காட்ட நேரலாம். ஆனால், அதுவே அவர் நல்ல, அமைதியான மன நிலையில் இருக்கும் போது, நீங்கள் அவரை அணுகினால் அவர் உங்களிடம் நட்பாக பதிலளிக்கக் கூடும். அதனால், அவரை பற்றி ஒரு தீர்மானத்திற்கு வரும் முன், அவர் எந்த சூழலில் அப்படி உங்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்பதை புரிந்து கொண்டால், அவரை கையாளுவது எளிதாகி விடும்.

3. உங்கள் மீது தவறு உள்ளதா?

Pexels

உங்கள் மேலாளர் மீது ஒரு புகார் அல்லது குறை கூறும் முன், உங்கள் மீது தவறு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் மீது உண்மையிலேயே தவறு இருகின்றது என்றால், நீங்கள் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி இல்லை என்றால், உங்கள் மேலாளரிடம், தக்க சமயம் பார்த்து, குறிப்பாக அவர் அமைதியான மன நிலையில் இருக்கும் போது, அவரிடம் நடந்ததை விளக்கமாக எடுத்துக் கூறி, புரிய வையுங்கள். இதனால், அவர் உங்கள் மீது தவறு இல்லை என்பதை புரிந்து கொண்டு, தான் செய்த தவறை உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கலாம். மேலும் உங்களிடம் வரும் இனி நல்ல நிலையில் நடந்து கொள்ள முயற்சிப்பார்.

4. மேலாளரின் செயல் உங்கள் செயல்திறனை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

சில சமயங்களில் மேலாளர் உங்கள் செயல்திறனை பாதிக்கும் நோக்கத்தோடு உங்களிடம் கடினமாக நடந்து கொள்ள முயற்சிக்கலாம். இதையே காரணமாகவும் காட்டி உங்களை வேலையை விட்டே நீக்கவும் முயற்சி செய்யலாம். அதனால், எந்த காரணம் கொண்டும், மேலாளர் உங்களை கடினமாக பேசும் போது, அதனை மனதில் ஆழத்தில் கொண்டு சென்று உங்கள் செயல் திறம் பாதிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ள கூடாது. மாறாக, அவற்றை உதாசினப்படுத்தி விட்டு, உங்கள் வேலையை நல்ல படியாக முடிப்பதிலேயே உங்கள் குறிக்கோள் இருக்க வேண்டும். இது அவரை தோல்வி அடைய செய்து விடும்.

5. நேர்மறை எண்ணங்கள் – புன்னகைத்த முகம்

Pexels

எப்போதும், என்ன நடந்தாலும், உங்கள் அலுவலகத்தில் அனைவருடனும் நேர்மறை என்னங்கலோடே நடந்து கொள்ளுங்கள். மேலும் மனதில் எவ்வளவு துன்பங்கள் மற்றும் வருத்தங்கள் இருந்தாலும், அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, புன்னகைத்த முகத்தோடு அனைவரையும் அணுகுங்கள். இது நீங்கள் எளிதாக சூழலை சமாளித்து, அனைவருடனும், குறிப்பாக உங்கள் மேலாளரிடம் நல்ல நட்பு உறவை வளர்க்க உதவும். நீங்கள் வெற்றியும் பெற்று விடுவீர்கள். 

மேலும் படிக்க - அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி தாக்கு பிடித்து, வெற்றி பெறுவது? 

பட ஆதாரம்  -Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!